அட்ஜெஸ்மெண்ட் செய்து தான் வந்தேன்.. அதுக்கு என்ன இப்போ..? – வெளிப்படையாக சொன்ன புதுப்பொண்ணு சங்கீதா..!

தற்போது 54 வயதான காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லியை திருமணம் செய்து கொண்டிருக்கும் சீரியல் நடிகை சங்கீதா தன்னை பற்றி கூறி இருக்கும் கருத்து ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இவர்களின் காதல் திருமணத்தில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டிருக்கிறார்கள்.

இதனை அடுத்து இவர் ஆரம்பத்தில் கொடுத்த பழைய பேட்டியில் இவர் பேசி இருக்கும் பேச்சு தான் இணையத்தில் வைரலாக மாறிவிட்டது.

அந்தப் பேட்டியில் அவர் தன்னை பற்றி கூறும் போது சினிமா துறையில் நல்லவர்களும் இருக்கிறார்கள், கெட்டவர்களும் இருக்கிறார்கள். எனினும் இதில் யார், யார் நல்லவர்கள் என்று தெரிந்து கொள்வது தான் மிகவும் சிரமமான கஷ்டமான பணி என தெரிவித்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் ஒரு பெண் சினிமாவில் நல்ல இடத்திற்கு வந்துவிட்டால் அவர் அட்ஜஸ்ட்மென்ட் செய்து தான் இந்த நிலைக்கு வந்திருப்பார் என்று சொல்வதைக் கேட்கும் போது, தனக்கு வருத்தமாக இருக்கும்.

அப்படி கேட்கும் நபர்களிடம், அட்ஜெஸ்மெண்ட் செய்து தான் வந்தேன்.. அதுக்கு என்ன இப்போ..? என்று சொல்ல தோன்றும். ஆனால், திறமையால் முன்னேறிய பெண்களும் சினிமாவில் இருக்கிறார்கள் என்று யாருமே ஒத்துக்கொள்வதில்லை. நானும் என்னுடைய திரை வாழ்க்கையில் எண்ணற்ற ஏமாற்றங்களையும் நம்பிக்கை துரோகங்களையும் சந்தித்துள்ளேன்.

இவற்றையெல்லாம் கடந்து தான் இன்று இந்த நிலையில் வந்திருக்கிறேன் என்று கூறிய பேச்சு தற்போது பரவலாக ரசிகர்களின் மத்தியில் பேசுபொருள் ஆகிவிட்டது.

இதனை அடுத்து ரசிகர்கள் பலரும் இதில் ஏதோ ஒரு உள்குத்து உள்ளது என்று கூறி இருப்பதோடு, நீண்ட நாட்கள் கழித்து திருமணம் செய்திருக்கும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam