“நீயும் என் மகனும் இதை பண்றீங்களாமே..” மாமியார் கேட்ட கேள்வி.. அதிர்ந்து போன சங்கீதா..!

சென்னையில் பிறந்து வளர்ந்த நடிகை சங்கீதாவின் பாட்டனார் கே ஆர் பாலன் திரைப்பட தயாரிப்பாளராக இருந்ததோடு மட்டுமல்லாமல் சுமார் 20-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களை தயாரித்திருக்கிறார்.

90-களில் நடிப்புத் தொழிலை ஆரம்பித்த நடிகை சங்கீதா தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

நடிகை சங்கீதா..

தமிழ் திரைப்படங்களைப் பொறுத்த வரை இவர் உயிர், பிதாமகன், தனம் போன்ற திரைப்படங்களில் வித்தியாசமான கேரக்டர் ரோல்களை ஏற்று நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியவர். மேலும் இவர் விக்ரம், சூர்யாவுடன் இணைந்து நடித்த பிதாமகன் திரைப்படம் தேசிய விருது பெற்றது.

இந்த படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் அனைவரையும் அசத்திய நடிகை சங்கீதா விஜய் தொலைக்காட்சி நிகழ்த்தியான ஜோடி நம்பர் ஒன்றில் நடுவராக செயல்பட்டவர். அதுமட்டுமல்லாமல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளில் நடுவராக செயல்பட்டு இருக்கிறார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்திருக்க கூடிய இவர் திரை பின்னணி பாடகர் ஆன கிரிஷ்சை திருமணம் செய்து கொண்டு இருக்கிறார்.

மாமியார் கேட்ட கேள்வி..

மிகச் சிறப்பாக இவரது திருமண வாழ்க்கை சென்று கொண்டு வருகிறது என கூறலாம். இந்த சமயத்தில் இவரது வீட்டிற்கு இவரது மாமியார் அடிக்கடி வந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்ததாக அண்மை பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

மேலும் இந்த பேட்டியில் மறக்க முடியாத சம்பவமாக நீங்கள் எதைக் கூற விரும்புகிறீர்கள் என்று கேட்ட போது அடிக்கடி என் வீட்டுக்கு மாமியார் வந்து போவதை கூறினேன் அல்லவா. அவர் ஒரு முறை என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நீயும் என் மகனும் விவாகரத்து பண்ண போகிறீர்களா என்ற கேள்வியை எழுப்பினார்.

இதனை சற்றும் எதிர்பாராத நான் திடீரென்று அவர் கேட்ட கேள்வியை கேட்டு பதில் சொல்ல முடியாமல் ஒரு நிமிடம் திணறிவிட்டேன். இதனை அடுத்து அவரிடம் ஏன் இப்படி நீங்கள் என்னிடம் கேட்கிறீர்கள். நீங்கள் தினமும் இங்கு வந்து செல்வதால் எங்களை பற்றி உங்களுக்கு தெரியாதா? என்று கேட்டேன்.

அவர் பல பத்திரிகைகளில் நீயும் எனது மகனும் விரைவில் விவாகரத்து செய்து கொள்ளப் போவதாக பல செய்திகள் வந்துள்ளது. அதை பார்த்து எனக்கு ஒரு விதமான பயம் ஏற்பட்டதை அடுத்த தான் உன்னிடம் இந்த கேள்வியை கேட்கிறேன் என்று கூறினார்.

இதனை அடுத்து யாரோ கற்பனையில் என்ன வேண்டுமானாலும் எழுதுவார்கள். அதையெல்லாம் நீங்கள் நம்பி விடுவதா? அப்படி ஏதும் இல்லை என்று நான் கூறினாலும் எனக்கு அப்போது தான் மீடியாவின் பவர் என்ன என்பது மிகத் தெளிவாக புரிந்தது.

இப்படி மாமியார் கேட்ட அந்த கேள்வியால் தான் நான் அதிர்ந்து போனேன் என்ற விஷயத்தை சமீபத்தில் பேட்டியில் சங்கீதா கூறியதை அடுத்து இப்படியெல்லாமா பொய் தகவல்களை ஊடகங்கள் வெளியிட்டு வருகிறது என்று ரசிகர்கள் அங்கலாய்த்து கொண்டார்கள்.

அது மட்டுமல்லாமல் சரியான தகவல் தெரிந்தால் மட்டுமே அதை வெளியிட வேண்டும். தெரியாத தவறுகளான செய்திகளை வெளியிடுவதால் இது போன்ற வயதில் முதியவர்கள் கடுமையாக பாதிப்படைவார்கள் என்பதை புரிந்து கொண்டாவது ஊடகங்கள் செயல் பட வேண்டும் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.