லவ் மேரேஜ் தான்.. ஆனா.. முதல் ரெண்டு வருஷம்.. நடிகை சங்கீதா வெளியிட்ட பகீர் தகவல்..!

தமிழ் திரையுலகில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து ரசிகர்களின் மத்தியில் ஸ்டார் ஆக ஜொலித்த நடிகை சங்கீதா பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இவர் பாடகர் கிரிஷை திருமணம் செய்து கொண்டு லைஃபில் செட்டில் ஆகிவிட்டார்.

இதனை அடுத்து திருமணமான முதல் இரண்டு வருடங்கள் நரகமாக இருந்தது என்று அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டு ரசிகர்களை பரபரப்பாக மாற்றி இருக்கிறார்.

நடிகை சங்கீதா கிரிஷ்..

சென்னையில் பிறந்து வளர்ந்த நடிகை சங்கீதா பிரபல திரைப்பட தயாரிப்பாளரான கே.ஆர் பாலன் அவர்களின் பேத்தியாவார். இவர் 20-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களை தயாரித்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் சங்கீதாவின் தந்தையும் பல படங்களை தயாரித்திருக்கிறார்.

மிகச்சிறந்த பரதநாட்டிய கலைஞரான சங்கீதா 90-களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் விக்ரம் சூர்யாவோடு இணைந்து நடித்த பிதாமகன் திரைப்படம் தேசிய விருதை பெற்றது. அது மட்டுமல்லாமல் மாதவன் இணைந்து எவனோ ஒருவன் என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.

அத்தோடு உயிர், தனம் போன்ற படங்களில் சிறப்பாக நடித்த இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஜோடி நம்பர் 1-இல் நடுவராக செயல்பட்டார். அத்தோடு ஜீ தமிழ் நிகழ்ச்சிகளிலும் நடுவராக செயல்படக்கூடிய இவர் நடிகர் சிவகார்த்திகேயனின் நடன திறமைக்கு முக்கிய காரணமாக இருக்கிறார்.

லவ் மேரேஜ் தான்..

இந்நிலையில் நடிகை சங்கீதா தன் திருமணத்தைப் பற்றி கூறும் போது பாடகர் கிரிஷை பார்த்தவுடனே தனக்கு பிடித்து விட்டதாகவும், தான் தான் முதலில் காதலை ப்ரபோஸ் செய்ததாகவும் கூறியிருக்கிறார்.

வாழ்நாளில் யாரிடமும் இப்படி சொன்னதே இல்லை. எனினும் திருமணத்திற்கு பிறகு ஆரம்பத்தில் தனது மண வாழ்க்கை இனிமையாக இல்லை என்று யூட்யூப் சேனலில் பேசி இருக்கக்கூடிய இவர் என்னுடைய காதலுக்கு தன் குடும்பத்திலும், க்ரிஷ் குடும்பத்திலும் எதிர்ப்பு அதிக அளவு இருந்தது. எனது திருமணம் ஈசியாக நடக்கவில்லை.

நான் உன்னை விரும்புகிறேன். ஒருவரை ஒருவர் நன்கு அறிந்த பிறகு திருமணம் செய்து கொள்வதாக கிரிஷ் சொல்ல நாங்கள் மூன்று மாதங்கள் டேட்டிங் செய்தோம். அதன் பிறகு மோதிரம் மாற்றிக்கொண்டோம். 8 மாதத்தில் திருமணம் நடந்தது எனக்கு அவரைப் பற்றி அதிகம் தெரியாது.

முதல் இரண்டு வருஷம்..

திருமணம் ஆன முதல் இரண்டு வருடங்கள் நாங்கள் ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ள செலவிட்டோம். திருமணத்திற்கு பிறகு பிரபலங்கள் ஜாலியாக இருப்பதாக அனைவரும் நினைக்கிறார்கள். ஆனால் அப்படி இல்லை.

ஒரே வீட்டில் இரண்டு பிரபலங்கள் இருப்பது ஒரு உறையில் இரண்டு கத்திகள் இருப்பது போல நீயா? நானா? என்ற சண்டைகள் எளிதில் ஏற்படும்.

எனவே எந்தப் பிரச்சனை வந்தாலும் ஒருவருக்கொருவர் உதவ முடிவு செய்தோம். அந்த இரண்டு வருடங்கள் மிகவும் சிறப்பாக மாற எங்கள் உறவை வலுவாக உருவாக்கிக் கொண்டோம்.

அத்தோடு திருமணம் ஒரு மோசமான முடிவு என்று நான் பல முறை யோசித்தேன் அதையெல்லாம் தாண்டி இந்த கல்யாணம் நடக்க கிரிஷ் தான் காரணம். ஏதேனும் தவறை சுட்டிக்காட்டி அதை திருத்திக் கொள்வார்.

அவருடைய மனைவி என்பதை தவிர நான் அவருடைய தாயை போன்றவள். தவறை செய்ய சரி செய்ய முடியும் என்று சொல்பவர்கள் யார் வேண்டுமானாலும் வாழலாம்.

என்னால் மாற முடியாது இப்படித் தான் இருப்பேன் என்றால் அவர்களுடன் வாழ முடியாது என்பது போன்ற கருத்துக்களை நடிகையின் சங்கீதா வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் தள்ளினார்.

தற்போது இந்த விஷயம் இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு திருமணம் ஆன புதிதில் சங்கீதா எப்படி இருந்தார் என்பதை ரசிகர்கள் பலரும் அறிந்து கொண்டு இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version