முன்னாடியே அது நடந்துருச்சு.. சானியா மிர்சா விவாகரத்துக்கு காரணம் இது தான்.. வெளிவந்த நீண்ட நாள் சீக்ரெட்..!

இந்தியாவில் டென்னிஸ் தெரியாத நபர்களுக்கு கூட தெரிந்த வீராங்கனையாக இருந்தவர் சானியா மிர்சா. தற்சமயம் சானியா மிர்சாவின் திருமணம் விவாகரத்து குறித்த சர்ச்சைதான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் நடிகை சனா ஜவேத்தை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பதுதான் இப்பொழுது பேசப்பட்டு வரும் விஷயமாக இருக்கிறது. இதற்கு முன்பு அவரது இரண்டாவது மனைவியாக சானியா மிர்சா இருந்து வந்தார்.

ஹைதராபாத்தை சேர்ந்த சானியா மிர்சா 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கைதான் இவர் திருமணம் செய்தார். ஏற்கனவே முதல் மனைவியை விவாகரத்து செய்த நிலையில்தான் இரண்டாவதாக சானியா மிர்சாவை திருமணம் செய்தார்.

சானியா மிர்சா

இந்த நிலையில் சானியா மிர்சா மற்றும் தம்பதியினர் நல்லபடியாக வாழ்க்கை நடத்தி வந்தனர். இவர்கள் இருவருக்கும் இசான் மிர்சா மாலிக் என்கிற மகன் ஒருவரும் இருக்கிறார். இந்த நிலையில்தான் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அதனை அடுத்து இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொண்டதாகவும் பேச்சுக்கள் இருந்து வந்தன. அதற்கு ஏற்றார் போல சானியா மிர்சாவும் தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாவில் அவரது கணவரின் புகைப்படங்களை நீக்கினார்.

மேலும் பயோவில் இருந்தும் அவரது பெயரை நீக்கினார். விவாகரத்து என்பது கடினமானது என சானியா மிர்சா ஒரு பதிவையும் வெளியிட்டார். அதன் மூலமாக அவர் தனது கணவரை விவாகரத்து செய்து இருக்கிறார் என்பது வெளியில் தெரிய துவங்கியது.

விவாகரத்துக்கு காரணம்

இந்த நிலையில் பாகிஸ்தானில் சின்னத்திரை நடிகையான சனா சாவத்தை கரம் பிடித்திருக்கிறார் சோயிப் மாலிக். இந்த நிலையில் அதிகாரப்பூர்வமாக இவர்கள் இருவருக்கும் இடையே விவாகரத்து நடந்ததா இல்லையா என்பது தான் கேள்வியாக இருந்து வருகிறது.

இது குறித்து சானியா மிர்சாவின் குடும்பத்தினர் பதிலளித்திருக்கின்றனர் அதில் அவர்கள் கூறும் பொழுது சானியா எப்போதுமே தனது தனிப்பட்ட வாழ்க்கையை மக்கள் பார்வையில் இருந்து விலக்கிதான் வைத்திருக்கிறார். அவரது கணவரும் அப்படிதான், ஆனால் இப்பொழுது அவர்கள் இருவருக்குமான விவாகரத்து குறித்த தகவலை வெளியிட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

புதிய வாழ்க்கை பயணத்திற்கு சானியா வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். இந்த தருணத்தில் ரசிகர்கள் மற்றும் சானியாவின் நலம் விரும்பிகள் இந்த மாதிரி வதந்திகளை பரப்புவதை தவிர்க்க வேண்டும்.

நீண்ட நாள் சீக்ரெட்

இது சோயிப் மாலிக் மற்றும் அவரது மனைவி வாழ்க்கையில் பிரச்சனையை உருவாக்கும் என கூறியுள்ளார். மேலும் இதன் மூலம் சானியா மிர்சாவிற்கும் சோயிப் மாலிக்கிற்கும் இடையே  விவாகரத்து ஆகியுள்ளது என்பதை உறுதி செய்திருக்கின்றனர் அவரது குடும்பத்தினர்.

மேலும் எதனால் இந்த விவாகரத்து நடந்தது என்பது குறித்தும் சில தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதில் சோயிப் மாலிக் திருமணத்திற்கு பிறகு வேறு ஒருவருடன் உறவில் இருந்து உள்ளதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்துதான் சானியா மிர்சா தனது கணவரை விவாகரத்து செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version