நடிகை ப்ரீத்தி மற்றும் நடிகர் சஞ்சீவ் இருவரும் தங்களுடைய முதல் குழந்தை அனுபவத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டனர்.
கலாட்டா யூடியூப் சேனல் ஏற்பாடு செய்திருந்த இந்த பேட்டியில் நடிகர் சஞ்சீவ் மற்றும் ப்ரீத்தியின் மகளே தொகுப்பாளினியாக கலந்து கொண்டார். சஞ்சீவி மகள் தொகுப்பாளனியாக தன்னுடைய கேள்விகளை கேட்க அதற்கு ப்ரீத்தி சஞ்சீவ் பதில் கொடுத்தனர்.
மிகவும் சுவாரசியமாக இருந்த இந்த பேட்டியில் சஞ்சீவின் மகள் நான் பிறந்ததும்.. பெண் என்று தெரிந்ததும் உங்களுடைய மனநிலை எப்படி இருந்தது..? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு ப்ரீத்தி மற்றும் சஞ்சய் இருவரும் பதில் அளித்தனர். நீ பெண் என்பதெல்லாம் இரண்டாவது விஷயம்.. ஆனால், குழந்தை பிறப்பதற்குள் நாங்கள் பட்ட வேதனை கொஞ்ச நஞ்சம் அல்ல.. கிட்டத்தட்ட எட்டு 8 மணி நேரம்.. 9 மணி நேரம் பிரசவ வலியை நான் அனுபவித்தேன்.
ஆனால் பிரசவமாகவில்லை. ஒரு கட்டத்தில் கருவில் இருக்கும் குழந்தைக்கு பொதுமான ஆக்சிஜன் செல்லவில்லை. இதற்கு மேலும் தாமதப்படுத்தக் கூடாது என்பதால் அவசர அவசரமாக C செக்ஷன் அறுவை சிகிச்சை செய்து தான் உன்னை வெளியில் எடுத்தார்கள் என தன்னுடைய மகளிடம் கூறியிருக்கிறார் நடிகை ப்ரீத்தி.
தொடர்ந்து பேசிய அவர், நான் பிரசவ வழியில் இருக்கும் பொழுது அழ ஆரம்பித்த சஞ்சீவ் குழந்தை பிறந்த பிறகும் அழுது கொண்டே இருந்திருக்கிறார். டெலிவரி வார்டில் இருந்து நான் வெளியே வந்த போது என்னிடம் பலரும் எனக்கு ஆறுதல் கூறுவார்கள் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தேன்.
ஆனால் செவிலியர்கள் என்னுடைய உறவினர்கள் நண்பர்கள் என அனைவருமே சஞ்சீவ் பற்றி தான் பேசிக் கொண்டிருந்தார்கள். இங்கே பிரசவ வலியை அனுபவித்து அறுவை சிகிச்சை செய்து குழந்தையை பெற்றுவிட்டு வருகிறேன்.. எனக்கு யாரும் ஆதரவு சொல்லவில்லை.. ஆனால் சஞ்சீவ் அழுதது பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
மருத்துவர் இதை பற்றி என்னிடம் கூறிய பொழுது உங்கள் கணவர் நீங்கள் பிரசவ வார்டில் இருக்கும் பொழுது அழ ஆரம்பித்தார். அதன் பிறகு குழந்தை பிறந்த பிறகு குழந்தை பிறந்து விட்டது என கூறினோம். அப்போதும் எனக்கு பெண் குழந்தை பிறந்து விட்டது என அழ ஆரம்பித்தார் என கூறினார் ப்ரீத்தி.
அப்போது குறிப்பிட்ட சஞ்சீவ் பெண் குழந்தை பிறந்து விட்டது என்பதற்காக நான் அளவில்லை.
அது ஒரு ஆனந்த கண்ணீர். அதை அழுகை என பலரும் புரிந்து கொண்டார்கள். எனக்கு பெண் குழந்தை பிறந்தது மிக மகிழ்ச்சி. நான் பெண் குழந்தை தான் பிறக்க வேண்டும் என எதிர்பார்த்தேன். பெண் குழந்தையே பிறந்ததும் எனக்கு அழுகை வந்துவிட்டது.. அடக்க முடியாத கண்ணீர் வந்தது என பதிவு செய்திருக்கிறார் சஞ்சீவ்.
பிறகு, என்னை பார்த்ததும் முதன் முதலில் விஜய் மாமா என்ன சொன்னார்..? என்று கேள்வி எழுப்பினார் சஞ்சீவின் மகள். உன்ன மாதிரி இல்லாம.. குழந்தை அழகா இருக்கா.. என்று கூறினான் என்று பதிலளித்துள்ளார் சஞ்சீவ்.