பிரபல தெனிந்த சினிமாவின் சீரியல் நடிகர் ஆன சஞ்சீவ் திருமதி செல்வம் தொடரில் நடித்த மிகப்பெரிய அளவில் பெரும் புகழ் பெற்றார்.
2007 முதல் 2013 வரை இந்த தொலைக்காட்சி தொடர் வெளியாகி மிகப்பெரிய அளவில் அவருக்கு பெயரும் புகழும் கொடுத்தது.
சீரியல் நடிகர் சஞ்சீவ்:
இதில் அபிதாவுக்கு ஜோடியாக சஞ்சீவ் நடித்திருந்தார். முன்னதாக சென்று 2002 ஆம் ஆண்டு வெளியான மெட்டிஒலி தொலைக்காட்சி தொடரில் வில்லனாக நடித்து மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றார்.
அதுதான் இவருக்கு உள்ள நல்ல அறிமுகத்தையும் தந்தது. விஜய்யின் கல்லூரி நண்பரான நடிகர் சஞ்சீவ் விஜய் நடித்த பல்வேறு திரைப்படங்களில் அவருக்கு நண்பன் ரோலில் நடித்து சினிமாவில் புகழ் பெற்றார்.
அப்படி சந்திரலேகா, நிலவே வா, பத்ரி, என் மன வானில், புதிய கீதை உள்ளிட்ட படங்களில். விஜயின் நட்பால் தான் இவருக்கு வாய்ப்புகளே கிடைத்தது.
சீரியல் என எடுத்துக்கொண்டோமானால் நம்பிக்கை, மெட்டிஒலி, அண்ணாமலை, ஆனந்தம், அகல்யா. திருமதி செல்வம், ரேகா, ஐபிஎஸ், சிவசக்தி, இதயம், அவள் துளசி உள்ளிட்ட பல்வேறு தொடர்களில் சஞ்சீவி நடித்திருக்கிறார்.
காதல் திருமணம்:
இதனிடையே கடந்த 2009 ஆம் ஆண்டு பிரீத்தி ஸ்ரீனிவாசன் என்ற நடிகை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சஞ்சீவ்.
ப்ரீத்தி பந்தம் என்னும் சீரியல் மூலமாக நடிகையாக அறிமுகம் ஆனார். அந்த சீரியலில் நடித்த போதுதான் சஞ்சீவ் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இதனிடையே சஞ்சீவ் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி போட்டியாளராக கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் நடிகர் சஞ்சீவிக்கு ஒரு அக்கா இருந்திருக்கிறார்.
அவர் தென் இந்திய சினிமாவில் பல படங்களில் நடித்த நடிகை என்பது பலருக்கும் தெரியாத ஒரு ரகசியமாக இருக்கிறது.
ஆம் அவரின் பெயர் சிந்து… ராம்கி அருண்பாண்டியன் நடித்து வெளிவந்த இணைந்த கைகள் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சஞ்சீவின் அக்கா சிந்து நடித்திருப்பார்.
பெரிதாக தனது அக்காவுக்கு வாய்ப்பு கிடைக்காதால் அவர் சின்னத்திரையில் வந்து ஒரு சில தொடர்களில் நடித்து வந்தார்.
பரிதாபமாக உயிரிழந்த அக்கா:
இதனிடையே சிந்துவுக்கு ஆஸ்துமா பிரச்சனையால் நீண்ட நாட்களாக சிகிச்சை எடுத்து வந்த நிலையில் அவரது நுரையீரல் பிரச்சனை அடைந்து மிகவும் மோசமாக உடல் நிலை மாறியதால் 33 வயதினிலே அவர் இறந்துவிட்டார்.
நடிகை சிந்து இறக்கும்போது அவருக்கு 9 வயதில் ஸ்ரேயா எனும் மகள் இருந்தார். அக்கா இறந்த பின்னர் அக்கா மகளான ஸ்ரேயாவை சஞ்சீவ் தான் தாய்மாமன் ஸ்தானத்திலிருந்து தந்தை பார்த்து வந்தார்.
பின்னர் ஸ்ரேயாவுக்கு அஸ்வின் ராம் என்பவரை திருமணம் செய்து வைத்தார். இந்த திருமணத்தில் விஜய் தனது மனைவி பிள்ளைகள் மற்றும் அம்மாவுடன் கலந்து கொண்ட போட்டோக்களும் இணையத்தில் வெளியாகிய அப்போதே வைரலானது.
தற்போது சஞ்சீவி அக்கா மகளான ஸ்ரேயாவின் கணவர் அஸ்வின் ராம் ஹிப்பாப் ஆதியின் அன்பு அறிவு எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.