எத்தனை கோடி பட்ஜெட் என்றாலும் இயக்குனர் ஷங்கர் படம் வேண்டவே வேண்டாம்…கண்டிஷனை கேட்டு தலை தெரித்து ஓடிய ஹீரோக்கள்…!!

 பொன்னியின் செல்வன் வெற்றிக்குப் பின்னால் தமிழில் நிறைய வரலாற்று படங்கள் எடுப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமைந்துள்ளது.

அந்த வரிசையில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ஒரு வரலாற்று காவியம் வந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று ஆசைப்பட்ட ரசிகர்களுக்கு உத்வேகம் கொடுக்கக்கூடிய வகையில் தற்போது அவர் வேல் பாரி என்ற வரலாற்று காவியத்தை படம் எடுக்க முடிவு செய்திருக்கிறார்.

இந்தப் படத்தின் பட்ஜெட் ஆனது சுமார் 1000 கோடி என்று கூறப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் கே ஜி எஃப் ஹீரோ யாஷ் நடிக்கப் போகிறார் என்று கேள்விப்பட்ட போது தமிழ் மக்கள் தமிழ்நாட்டில் வேறு ஹீரோக்கள் இல்லையா? என்ற கேள்வியை எழுப்பினார்கள்.

 இதனை அடுத்து பிரம்மாண்ட இயக்குனர் எந்த படத்தில் நடிக்க சூர்யாவுடன் பேச்சு வார்த்தையை நடத்தினார். இந்தப் படத்தை பான் இந்திய மூவியாக எடுக்க இருப்பதால் இதில் ஹிந்தி நடிகரான ரன்வீர் சிங்கிடமும் அவர் பேச்சுவார்த்தையை நடத்தினார்.

 இதனை அடுத்து ஷங்கருக்கு தமிழ் முகம் கொண்ட நடிகர் வேண்டும் என்று கூறிவிட்டார். தற்போது எந்த படத்தில் சூர்யா பெயர் மட்டுமே அடிபட்டு வருகிறது வேறு பெரிய ஹீரோக்கள் இந்த படத்தில் நடிக்க யோசித்து வருகிறார்கள். இதற்கு காரணம் என்னவென்றால் இந்த படத்துக்காக இயக்குனர் சங்கர் ஐந்து வருட கால்ஷீட் கேட்டிருக்கிறார்.

 மேலும் இந்த படம் 3 பாகங்களாக வெளிவரும் என தெரிகிறது. ஒவ்வொரு பாகத்திக்கும் சுமார் 700 கோடி பட்ஜெட் மொத்தம் 2100 பட்ஜெட் செலவாக உள்ளது.

இது மாதிரி செலவு செய்து எடுக்கக்கூடிய முதல் படம் இந்தியாவில் இதுவாகத்தான் இருக்கும் இந்த ஒரு படத்துக்காக பெரிய ஹீரோக்கள் ஐந்து வருட கால் சீட்டை கொடுத்தால் சினிமா வாழ்க்கையை அவர்களுக்கு மாறிவிடும் என்ற பயத்தில் அனைவரும் தலைதெரித்து ஓடுகிறார்கள்.

 இதனை அடுத்து சங்கர் சூர்யா பெயர் மட்டுமே சொல்லி இருக்கிறார்.இதனை மீறி தமிழ் முகத்துக்கு பெரிய நடிகர்களை எப்படி ஒத்துக்கொள்ள வைக்கப் போகிறார் என்று தெரியவில்லை.

எது எப்படியோ தமிழ் ரசிகர்களின் ஆசைப்படி தமிழ் நடிகர்கள் மட்டுமே இந்தப் படத்தில் நடிப்பார்கள் என்று மகிழ்ச்சியான செய்தி வெளிவந்திருக்கிறது .இந்தியன்  2 பிறகு இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று ஹோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam