படத்துல நடிக்க கேட்டு சென்ற போது அறையை சாத்திவிட்டு.. பவர் ஸ்டார் செய்த கொடுமை..! சந்தானம் ஓப்பன் டாக்..!

பொதுவாகவே விஜய் டிவி திறமையுள்ள மனிதர்களுக்கு மிகச்சிறந்த பிளாட்பார்ம் ஆக அமைவதோடு பட வாய்ப்புகளையும் பெற்றுத் தரும். அந்த வரிசையில் நடிகர் சந்தானம் விஜய் டிவியில் இருந்து வெள்ளி திரைக்கு வந்தவர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த லொள்ளு சபா என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்ததின் மூலம் பெருவாரியான இளைஞர்களின் மத்தியில் பிரபலமான புகழைப் பெற்ற நடிகர் சந்தானம் 2004 ஆம் ஆண்டு மன்மதன் என்ற திரைப்படத்தில் காமெடி நடிகராக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

நடிகர் சந்தானம்..

இதனை அடுத்து பல படங்களில் காமெடியனாக கலக்கி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட இவர் தற்போது ஹீரோவாக பல படங்களில் நடித்திருக்கிறார்.

எனினும் நடிகர் விவேக்குக்கு பிறகு காமெடியில் கலக்கிய நடிகர்களின் வரிசையில் இவரை முக்கியமான ஒரு நபராக கூறலாம். தொலைக்காட்சிகள் டீக்கடை பேன்ச், சகளை வெர்சஸ் ரகளை போன்ற நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று தனது அபார திறனை வெளிப்படுத்தியவர்.

இவர் செய்யும் காமெடிகள் அனைத்தும் வேறு லெவல் இருப்பதோடு அனைவரையும் ரசிக்க வைக்க கூடிய பஞ்ச் டயலாக்குகளை பேசி ரசிகர்களின் மத்தியில் கை தட்டல்களை அதிகளவு பெற்று விடுவார்.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இவரை கவுண்டர் கிங் சந்தானம் என்று அழைப்பார்கள். இவர் அண்மை பேட்டி ஒன்று பவர் ஸ்டார் பற்றி கூறிய விஷயம் பரவலாக இணையத்தில் பரவி வருகிறது.

பவர் ஸ்டார் செய்த கொடுமை..

ஒரு காலகட்டத்தில் பவர் ஸ்டாரும் காமெடியில் கலக்கியவர் இவர் திரைப்படங்கள் அனைத்தும் மாஸ் வெற்றியை தந்ததை அடுத்து திரையுலகில் ஒரு குறிப்பிட்ட இடத்தை பிடித்தார்.

மேலும் சந்தானம் மற்றும் சேது ஒரு படத்தில் நடிக்கக்கூடிய கட்டத்தில் ஒரு கேரக்டர் ரோலை யார் செய்ய வைப்பது என்று யோசித்து வந்த வேளையில் பவர்ஸ்டார் நினைவுக்கு வர அவர்தான் அந்த கேரக்டருக்கு பக்காவாக இருப்பார் என்று கருதி அவரிடம் நடிக்க விருப்பப்படுகிறாரா என்பதை பற்றி கேட்க சென்றிருந்தார்கள்.

அந்த சமயத்தில் தான் அவரது படம் லத்திகா வெளி வந்திருந்தது. அந்த படத்தின் பேனரை பார்த்து நீங்கள் இந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பீர்கள் என்று கூற பவர்ஸ்டார் எங்களிடம் பேனரை பார்த்தெல்லாம் என் நடிப்பை முடிவு செய்ய வேண்டாம் படத்தை முழுமையாக பார்த்துவிட்டு சொல்லுங்கள் எனக் கூறி நாங்கள் இருந்த அறை கதவை சாத்திவிட்டு அந்த படத்தை ஓட விட்டு சென்றுவிட்டார்.

இதனை அடுத்து அந்த படத்தை முழுமையாக பார்த்துவிட்டு வந்த பிறகு தான் அந்த படத்தில் நடிக்க பவர்ஸ்டார் ஒப்புக்கொண்டதாகவும் அவர் செய்த அந்த கொடுமையை இன்று வரை மறக்க முடியாது என்று சந்தானம் ஓபனாக பகிர்ந்து இருக்கக்கூடிய விஷயம் இணையத்தில் வைரலாகி விட்டது.

இதனை அடுத்து இந்த படத்தில் இப்படித்தான் இவர்கள் நடித்தார்களா? என்று ரசிகர்கள் தற்போது அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

மேலும் அந்த கேரக்டர் ரோலுக்கு இவர் தான் பொருத்தமான நபர் என்பதை புரிந்து கொண்டு நடிக்க வைத்ததின் மூலம் அந்த படம் மிகப்பெரிய வெற்றியை தந்ததாக கூறியிருக்கிறார். மேலும் சேது அந்த படத்தில் நடித்தது படத்திற்கு பக்க பலமாகவும் வெற்றிக்கு அடித்தளமாகவும் இருந்தது என்ற விஷயத்தையும் பகிர்ந்திருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version