இரத்த அழுத்தம் நீக்கும் மன அமைதி தரும் சாந்தி ஆசனம்

இன்றைய பரபரப்பான உலகில் மன அழுத்தம்,  ரத்த அழுத்தம், நீரிழிவு, இதயக் கோளாறு போன்ற நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம். இதற்கு காரணம் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள உணவு மாற்றத்தை கூறலாம். இவர்கள் அனைவரும் சாந்தி ஆசனம் கட்டாயம் செய்ய வேண்டும்.அப்படி செய்வதால் மன அமைதி எளிதில் கிடைக்கும்.

சாந்தி ஆசனம் செய்முறை:

விரிப்பில் கிழக்கு திசை நோக்கி தலை வைத்து, மேற்கில் கால் வைத்து, கை கால்களை அகற்றி படுத்து கொள்ளவும். தலையை லேசாக இடப்பக்கம் சாய்த்து கொள்ளவும்.

கைவிரல்கள் வானத்தை பார்த்து இருக்கவும்.கண்களை மூடிக் கொள்ளவும். இப்போது உங்கள் மனதை நண்பனாக்கி மனதின் மூலம் கீழ்கண்டவாறு பயிற்சி செய்யவும்.

உங்கள் மனதை தலை வெளி தசைகளில் நிலை நிறுத்தவும். அதில் உள்ள எல்லா டென்ஷனையும், அழுத்தங்களையும் பூமிக்கு அர்பணித்துவிட்டேன், அதில் எந்த டென்ஷனும் இல்லை என்று ரிலாக்ஸ் செய்யவும்.

மூளைக்கு கீழ் இரண்டு நாளமில்லா சுரப்பிகள் பிட்யூட்டரி மட்டும் பினியல் சுரப்பி உள்ளது. உங்கள் ஆழ் மனதை அதில் நிலை நிறுத்தி அந்த சுரப்பியில் உள்ள டென்ஷன் வெளியேறுவதாக தளர்த்தவும்.

பயன்கள்

1.இந்த ஆசனம் மன அமைதி தரும். மன அழுத்தம் நீங்கும்.

2.இரத்த அழுத்தம் வராமல் சமமாக இயங்க செய்யும். உயர் / குறைவான இரத்த அழுத்தத்தை சரி படுத்தும்.

3.உடலில் பஞ்ச பூதம் சமமாக இயங்கும். நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும்.

4.இதயம் நன்கு திடமாக செயல்படும். இதய வலி வராது.

5.பிராண ஆற்றல் உடல் முழுக்க நன்கு இயங்கும்.

6.உடலில் ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம், சரியாக இயங்கும்.

7.நரம்பு தளர்ச்சி, படப்படப்பு நீங்கும். கோபம் நீங்கும். சாந்தம், பொறுமை குணம் வளரும்.

8.அடிமுதுகு வலி, கழுத்து, முதுகு வலி நீங்கும்.சுறுசுறுப்பாக திகழலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …