உங்க குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்க… சந்தோஷி மாதாவை வழிபாடு செய்யுங்க..!

இன்று இருக்கக்கூடிய குடும்பங்களில் சந்தோஷம் என்பது இருக்கிறதா என்றால் சற்று கேள்விக்குறியை எழுப்பக் கூடிய வகையில் தான் அது உள்ளது.

எனினும் உங்கள் குடும்பம் சந்தோஷமாக இருக்க நீங்கள் சந்தோஷி மாதாவை வழிபட்டால் போதும் என்று சாஸ்திரங்கள் பலமும் கூறுகிறது.

 

மேலும் எந்திரமயமான வாழ்க்கையில் அனுதினமும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் புரிந்து கொள்ளாமல் ஓடி உழைத்து குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் ஒன்று கூடி சந்தோஷத்தை எவராலும் அனுபவிக்க முடியவில்லை.

 இந்த சந்தோஷை மாதா யார் என்று தெரிந்து விட்டால் உங்களுக்கு சந்தோஷம் கட்டாயம் ஏற்படும். பெரும்பாலானவர்கள் விநாயகப் பெருமானுக்கு திருமணம் ஆகவில்லை என்று நினைத்திருக்கிறார்கள்.

 ஆனால் அவருக்கு சித்தி புத்தி என்று இரு மனைவியர் இருந்தார்கள். அவர்களுக்குப் பிறந்த மகன்கள் தான் லாபம் மற்றும் சுபம் ஆவார்கள்.

 ஒருமுறை விநாயகப் பெருமான் தனது குடும்பத்தோடு பூலோகம் வந்து பார்த்தபோது அங்கு ரக்ஷா பந்தன் விழாவானது சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்ட நிலையில் சகோதரிகள் அனைவருமே தனது சகோதரர்களுக்கு ராக்கியை கட்டி விட்டதை பார்த்து  சுபம் மற்றும் லாப சகோதரர்களுக்கு தங்களுக்கு சகோதரி இல்லை என்ற கவலை ஏற்பட்டது.

 இதனை தனது தந்தையான விநாயகப் பெருமானிடம் மனம் உருகி கூறியதன் காரணத்தால் விநாயகப் பெருமானுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது .அந்த குழந்தையின் பெயர் தான் சந்தோஷி.

 மேலும் அந்தக் குழந்தையை தான் நாம் சந்தோஷி மாதா என்று அழைக்கிறோம். இந்த சந்தோஷி மாதாவுக்கு பார்வதியின் சக்தியும், லக்குமி தேவியின் செல்வமும் சரஸ்வதி தேவியின் கல்வியும் ஒருங்கே பெற்றிருப்பதோடு மட்டுமல்லாமல் குடும்பத்தில் சந்தோஷத்தை கொடுக்க கூடிய மாதாவாக திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல் வெள்ளிக்கிழமை அவதரித்த இவரை வெள்ளிக்கிழமை அன்று விரதம் இருந்து வழிபட வீட்டில் சந்தோஷம் நிலவும் என்று கூறியிருக்கிறார்கள்.

இந்த நிலையில் 11 வெள்ளிக்கிழமைகள் சந்தோஷியை நினைத்து விரதம் இருப்பதால் நினைத்த காரியம் ஜெயம் ஆகும்.

சந்தோஷி மாதா விரதத்தை மேற்கொள்பவர்கள் வீட்டை சுத்தம் செய்து பூஜை அறையில் சந்தோஷி மாதா படத்தை வைத்து சந்தனம், குங்குமம் எல்லாம் வைத்து படத்திற்கு மாலையையும் அணிவித்து குத்து விளக்கை ஏற்றி கும்பம் வைத்து சந்தோஷி மாதாவை வழிபட வேண்டும்.

 மேலும் கொண்டைக்கடலை வெல்லம் இவை இரண்டுமே அவருக்கு பிடித்த பண்டம் என்பதால் நைவேத்தியமாக இதனை படைக்கலாம். அன்றைய தினம் புளிப்பு சேர்க்காமல் நீங்கள் விரதம் இருக்க வேண்டும்.பூஜை முடிந்த உடன் கும்பத்தில் இருக்கும் தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளித்தால் நன்மை கிட்டும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …