கடந்த சில ஆண்டுகளாகவே கன்னட சினிமாவிலும் மிகப்பெரிய பட்ஜெட்டில் படங்கள் எடுக்கப்பட்டு சூப்பர் ஹிட் அடித்து வசூல் ரீதியாக கோடிகளை குவிக்கும் திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருக்கிறது.
அந்த வகையில் கன்னட சினிமாவில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகிய மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் காந்தாரா.
காந்தாரா பட நாயகி தகாத உறவு:
இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி மொழிகளில் ரீமிக்ஸ் செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது. திரைப்படத்தில் ஹீரோயினாக சப்தமி கெடா நடித்து பெரும் புகழ் பெற்றார்.
அந்த திரைப்படத்தின் மூலம் அவருக்கு ஏற்பட்டது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து மறைந்த மூத்த நடிகர் ராஜகுமாரனின் பேரன் யுவராஜ்குமார் இப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.
இப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமான நடிகர் யுவராஜ் குமார். அப்படத்தில் ஹீரோயினாக அவருடன் நடித்த நடிகை சப்தமி கெவுடாவுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் அவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் போது மிகவும் நெருக்கமாக நடித்திருந்தால் ரகசியமாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது .
கள்ளகாதலால் மனைவியுடன் விவாகரத்து:
முதல் படம் வெளியான வேகத்திலேயே யுவராஜ் குமார் தனது மனைவியை விவாகரத்து செய்யப் போவதாக கூறி அதிர வைத்தார்.
பதிலுக்கு அவரது மனைவியும் கணவரை விவாகரத்து செய்ய விண்ணப்பித்திருப்பதாக கூறி பரப்பரப்பை கிளப்பினார்.
இந்த தகவல் கன்னட சினிமாவுலகே பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மேலும்,நடிகர் யுவராஜ் குமாரின் மனைவி தனது கணவர் காந்தாரா பட நாயகியான சப்தமி கெளடாவுடன் மிகவும் நெருக்கமாக பழகி அவருடன் ரகசிய உறவில் ஈடுபட்டதால் எங்களுக்குள் விவாகரத்துக்கு ஏற்பட காரணம் எனக்கூறி அதிர வைத்தார்.
யுவராஜ் மனைவி அதிரடி கருத்து:
நன்றாக சென்று கொண்டு இருந்த இவர்களது குடும்ப வாழ்க்கை இப்படியாக கடந்த ஒரு வருடமாக பலத்த புயல் வீசி வருகிறது .
அதற்கு காரணம் நடிகை சப்தமி கெளடா தான் என கன்னட சினிமாவில் மிகவும் மோசமாக அவர் விமர்சிக்கப்பட்டு வந்தார்.
இப்படியான நிலையில் யுவராஜ் குமாரின் மனைவி ஸ்ரீதேவி பைரப்பா… அவர்களுடைய தனிப்பட்ட விவாகரத்து விஷயத்தில் சம்பந்தமே இல்லாமல் தன்னுடைய பெயரை இழுத்துள்ளனர்.
நடிகை சப்தமி கௌடா தன்னுடைய பெயருக்கு களங்கம் விளைவித்ததாக குற்றம் சாட்டி இருக்கிறார். மேலும் இது தன்னுடைய பெயருக்கும் புகழுக்கும் மிகப்பெரிய களங்கம் விளைவித்து விட்டதாக கூறி பேட்டி அளித்தார்.
நான் யுவராஜ் குமாருடன் படத்தில் இணைந்து நடித்தது தவிர எனக்கும் அவருக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை.
காந்தாரா பட நாயகி கடும் கண்டனம்:
எனவே தேவையில்லாமல் இப்படி தன் மீது அபாண்டமாக பழி போடுவதையும், பொதுவெளியில் தன்னை குறித்து மிகவும் மோசமாக பேசுவதையும் யுவராஜ்குமாரின் மனைவியான ஸ்ரீதேவி பைரப்பா இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என சப்தமி கவுடா கண்டம் விதித்தார்.
அதுமட்டுமில்லாமல் தன்னை பற்றி இப்படி பொதுவெளியில் பகிரங்கமாக. குற்றம் சாட்டி இருப்பதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்து பெரும் பரபரப்பை கிளப்பி இருந்தார் நடிகை சப்தமி கவுடா.
இதை எடுத்து யுவராஜ் குமாரின் மனைவியான ஸ்ரீதேவி பைரப்பாவுக்கு நீதிமன்றம் இது குறித்து தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
இவர்களின் இந்த விவாகரத்து விவகாரம் கன்னட சினிமாவில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.