என்னது இவ்வளவு தம்மாத்துண்டு டிரஸ் விலை 80,000 ரூபாயா? – நடிகை சாரா அலி கான்!

கொரோனா காலகட்டத்தில் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டதால் ஓடிடி வலைத்தளங்களின் வளர்ச்சி   அசுர வேகத்தில் அமைந்தது. தற்போது திரையரங்குகளுக்கு செல்லும் கூட்டத்தை விட ஓடிடியில் வெளியாகும் நிகழ்வுகளை பார்ப்பதற்கு என்றே ஒரு கூட்டம் உருவாகி விட்டது .அந்த அளவுக்கு இதில் வரும் நிகழ்ச்சிகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கிறார்கள். அதிலும் குறிப்பாக ஹாரர் போன்ற படங்கள் இதில் அதிக அளவு வருகிறது. அனைவரும் விரும்பிப் பார்க்கிறார்கள்.

இதில் இருந்து வரக்கூடிய படங்கள் வெப் சீரியல்கள் மற்றும் இதர நிகழ்ச்சிகளுக்கு என்று விருதுகள்  சமீபத்தில் வழங்கப்பட்டது.

 இந்த நிகழ்ச்சியில் வித்யா பாலன், கார்த்திக் ஆர்யன், டாப்ஸி பன்னு, ரவீனா டாண்டன், ஹினா கான் மற்றும் மனோஜ் பாஜ்பாய்  அவர்கள் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்தார்கள்.

 இந்த விருதானது தமிழ் ,தெலுங்கு, பெங்காலி, ஹிந்தி போன்ற மொழிகளில் வெளியான வெப் சீரியல் தொடர்களில் சிறப்பாக நடித்த கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த விருது அளிக்கும் நிகழ்ச்சிக்கு நடிகை  சாரா அலி கான் மஞ்சள் நிறத்தில் அணிந்து வந்திருந்த உடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது மிகவும் சிறிய அளவில் தான் இந்த உடை இருந்தது இந்த உடையை அணிந்து அவர் சிவப்பு கம்பளத்தில் நடந்து வரும்போது பலரது பார்வை அவள் அவரை நோக்கி பாய்ந்தது. அளவிற்கு மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் உடையும் அவரும் இருந்தார்கள்.

 மிகவும் சிறப்பான முறையில் அந்த உடையோடு அவர் போஸ் கொடுத்த விதம் சூப்பராக இருந்தது. இந்த மாதிரியான சிறிய மஞ்சள் நிற உடைகள் ஒரு குறிப்பிட்ட வகையை சேர்ந்தது.இது நியூயார்க் நகரில் உள்ள கடைகளில் காணப்படுகிறது.

 இந்த உடைக்கான விலை எண்பத்தி 80,500 ரூபாயாம். என்னடா இந்த தம்மாத்துண்டு துணி க்கு இவ்வளவு பெரிய விலையா என்று அனைவரும் வாயை  பிளந்து விட்டார்கள். மேலும் ரசிகர்கள் விலையை கேட்டவுடனே  ஆ…  என ஆகிவிட்டார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …