பாலிவுட் சினிமாவில் வம்சவம்சமாக உள்ள வாரிசுகளே திரை துறையில் அதிகமாக இருந்து வருகின்றனர். அவர்கள் இல்லாமல் வெளியில் இருந்து திரை உலகிற்கு வந்து பிரபலமானவர்கள் வெகு சிலரே இருப்பார்கள்.
சொல்ல போனால் மூன்று தலைமுறையாக பாலிவுட் சினிமா இப்படி வந்த வம்சாவளிகளின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்று கூறலாம். அப்படியான பாலிவுட் பிரபலமாக இருந்த நடிகர் சைஃப் அலிக்கானின் மகளாக சினிமாவிற்குள் வந்தவர்தான் நடிகை சாரா அலிக்கான்.
சைஃப் அலிக்கான் ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவராவார். அவர் பணக்காரர் என்பதால் மிக எளிதாகவே பாலிவுட் சினிமாவிற்குள் வந்துவிட்டார். அதனை தொடர்ந்து அவரது மகள் என்பதால் சாரா அலி காணும் எளிமையாக பாலிவுட்டில் என்ட்ரி ஆகிவிட்டார்.
பாலிவுட்டில் அறிமுகம்:
முதன் முதலாக 2018 ஆம் ஆண்டு நடிகர் சுஷாந்த் சிங் கதாநாயகனாக நடித்த கேதார்நாத் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். சாரா அலிக்கான் இந்தியாவின் முக்கிய சிவ தளமான கேதார்நாத்தில் ஒருமுறை பெரும் வெள்ளம் ஒன்று ஏற்பட்டு அந்த கேதார்நாத்தை சுத்தியுள்ள அனைத்து கிராமங்களும் வெள்ளத்தில் மூழ்கிய கொடூர சம்பவம் நடந்தது.
அதனை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட கேதார்நாத் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து சாரா அலிக்காணும் வரவேற்பு பெற்ற ஒரு நடிகையாக மாறினார். சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும் பொழுது அவர் சர்ச்சைக்குரிய சில விஷயங்களை பேசி இருந்தார்.
சாரா அலிக்கான் பேட்டி:
அவரிடம் நீங்கள் திருமணம் செய்து கொள்வதாக இருந்தால் யாரை திருமணம் செய்து கொள்வீர்கள் என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த சாரா அலிக்கான் ”நான் ரன்பீர் கபூரைதான் திருமணம் செய்வேன் என்று கூறினார் அப்பொழுது டேட்டிங் செல்வதாக இருந்தால் யாருடன் செல்வீர்கள் என்று கேட்கப்பட்டது.
அதற்கு இன்னொரு பாலிவுட் பிரபலத்தின் பெயரை கூறி அவருடன் டேட்டிங் செல்வேன் என்று கூறியிருக்கிறார். அதனை தொடர்ந்து அருகில் இருந்த அவரது தந்தை சைஃப் அலிகான் அந்த பையனிடம் பணம் இருக்கிறதா என்று கேட்டார்.
அவனுக்கு உன்னை கட்டி வைத்து விடுகிறேன் என்று கூறியிருக்கிறார் அதற்கு பணம் இருந்தால் யாரிடம் வேண்டுமானாலும் என்னை விட்டு விடுவீர்களா என்று வெளிப்படையாக தனது தந்தையை பார்த்து கேட்டிருக்கிறார் சைஃப் அலிக்கான். இந்த விஷயத்தை பிரபல சினிமா விமர்சகரான பயில்வான் ரங்கநாதன் ஒரு காணொளியில் கூறியிருக்கிறார்.