தமிழ் சினிமாவில் சினிமாவை தாண்டியும் ஜெயிக்கும் படைப்பாளிகள் சிலர் இருக்கிறார்கள். அதாவது சினிமாவால் அவர்களுக்கு பெருமை அல்ல, அவர்களால் தான் சினிமாவுக்கு பெருமை என்பதுதான் உண்மை.
அப்படிப்பட்ட திரைக்கலைஞர்கள் வரிசையில் கே பாலச்சந்தர், பாரதிராஜா, மணிரத்னம், பாலு மகேந்திரா, மகேந்திரன், பாலா, வெற்றிமாறன், கமல்ஹாசன், விக்ரம் போன்றவர்களை சொல்லலாம்.
கே பாக்யராஜ்
அந்த வரிசையில் இயக்குனர் கே பாக்யராஜ் மிக மிக முக்கியமானவர். புரட்சித்தலைவர் எம்ஜிஆரே தனது கலையுலக வாரிசு என கே பாக்யராைஜ அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் மற்றும் நடிகராக கே. பாக்யராஜ் ஆரம்பத்தில் இருந்தே மிகச்சிறந்த படங்களை தந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். முந்தானை முடிச்சு, சின்ன வீடு, தாவணிக்கனவுகள், சுவரில்லாத சித்திரங்கள், இன்று போய் நாளை வா, தூறல் நின்னு போச்சு, அந்த 7 நாட்கள் என அவரது படங்கள் எதார்த்தத்தை பேசியது.
மனிதர்களது இயல்புகளை சொன்ன படங்கள்
அந்த படங்களில் கதாபாத்திரங்கள் மனிதர்களது இயல்புகளை சொன்னது. எந்த இடத்திலும் இது அப்படி இருக்க வாய்ப்பு இல்லை என்று சொல்ல முடியாத அளவுக்கு, ஒரு கதாபாத்திரத்தை நிஜமாக உருவாக்கி அதை திரையில் கொண்டு வந்தவர் கே பாக்யராஜ்.
இயக்குனர்களின் லெஜண்டாக இருந்த கே பாக்யராஜ் ஒரு கட்டத்துக்குப் பிறகு பெரிய அளவில் தமிழ் சினிமாவில் சோபிக்க முடியவில்லை. தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் பாக்யராஜ், தன்மகன் சாந்தனுவை நடிகராக சக்கரக்கட்டி படத்தில் அறிமுகம் செய்தார்.
பாரிஜாதம் படத்தில் சரண்யா
அதற்கு முன்பே அவரது மூத்த மகன் சரண்யா பாக்யராஜை, பாரிஜாதம் என்ற படத்தில் அறிமுகப்படுத்தினார். சில படங்களில் நடித்த சரண்யா பின் வெளிநாடு சென்று படித்த போது, காதல் தோல்வியால் மூன்று முறை தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
திருமண வாழ்க்கை வேண்டாம்
தற்போது அதிலிருந்து மீண்டு வந்து சென்னையில் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். திருமண வாழ்க்கையே வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கும் சரண்யா, தற்போது பெண்கள் சம்பந்தப்பட்ட ஆடை அணிகலன்கள் விளம்பரம் செய்யும் ஷாப்பிங் அண்ட் ரீடைல் தொழில் செய்து வருகிறார்.
ஹன்சிகா மோத்வானி படத்தில்…
மேலும் ஹன்சிகா மோத்வானியின் 51 வது படமான மேன் படத்தில் சரண்யா ஸ்கிரீன் ப்ளே வேலையும் செய்திருக்கிறார்.
சாந்தனு மனைவி கீர்த்தி
சமீபத்தில் அவர் தனது தம்பி சாந்தனுவின் மனைவி கீர்த்திக்கு, தான் டிசைன் செய்த ஆடையை அணியச் செய்து இணையத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதில் ஒரு சூப்பரான மாடர்ன் டிரஸ்ஸில் சாந்தனு மனைவி கீர்த்தி மிக அழகாக காட்சி தருகிறார்.
வெளியில் தலை காட்ட தயங்கும் பாக்யராஜ் மகள் சரண்யா, இப்போது ஒரு கலைப் படைப்பாளியாக அசத்திக்கொண்டு இருக்கிறார்.