தமிழ் திரை உலகில் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் பாக்யராஜ் இயக்குனர் மட்டுமல்லாமல் பன்முக திறமையை கொண்ட ஒரு சிறந்த நடிகர். பாக்யராஜ் படங்கள் என்றாலே இளைஞர்கள் மத்தியில் ஒரு கிரேஸ் இருக்கும்.
அதுவும் இவர் இயக்கிய முந்தானை முடிச்சு திரைப்படத்தில் வரும் முருங்கைக்காய் பற்றி இன்று வரை இளைஞர்கள் பேசி வருவது அனைவரும் தெரிந்த விஷயம் தான். தனது எதார்த்த நடிப்பு மற்றும் சிறந்த கலையம்சத்தின் மூலம் இவரது படங்கள் சிறப்பான வெற்றியை பெற்று விடும்.
இவர் நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கும் விஷயம் அனைவருக்கும் தெரியும். இதில் இவரது மகன் சாந்தனு திரைப்படங்களில் நடித்து இருக்கிறார்.
மேலும் இவரது மகள் சரண்யாவை பாரிஜாதம் என்ற திரைப்படத்தில் மகளின் உண்மை காதலையே படமாக எடுத்து நடிக்க வைத்திருந்தார். சரண்யாவும் ஒன்று இரண்டு படங்களில் நடித்த பின் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு இளைஞரை படு தீவிரமாக காதலித்து வந்த சரண்யா அடிக்கடி ஆஸ்திரேலியா சென்று அந்த நபரை சந்தித்தும் வந்திருக்கிறார். இதில் இடையில் என்ன ஆனதோ, யார் கண் பட்டதோ தெரியவில்லை. இவருக்கும் காதல் பிரேக்கப் ஆகி விட்டது.
இந்த சூழ்நிலையில் இவர் தன் காதல் தோல்வியில் இருந்து வெளி வர முடியாமல் மூன்று முறை உயிர் வாழ விரும்பாமல் உலகை விட்டு செல்ல முடிவெடுத்து இருக்கிறார். நல்ல வேலையாக உறவினர்கள் அருகில் இருந்த காரணத்தால் மூன்று முறையும் காப்பாற்றப்பட்டார்.
தற்போது 34 வயதை கடந்திருக்கும் சரண்யா காதல் தோல்வி காரணமாக யாரிடமும் சகஜமாக பழகாமல் அமெரிக்காவில் படித்து வருகிறார். மேலும் குடும்பத்தாரோடு எந்தவித பாசம், பற்று இல்லாமல் விரக்தியில் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது.
இதனை அடுத்து ரசிகர்கள் பலரும் பாக்கியராஜுக்கு எப்படிப்பட்ட நிலை ஏற்பட்டு இருப்பதை குறித்து ஆறுதல் வார்த்தைகளை கூறி வருகிறார்கள். எனினும் பெற்றவர்களுக்கு மட்டுமே அதன் வலி பெரிதாக இருக்கும் என்பதை எவரும் மறுக்க முடியாது.
எனவே இனியாவது மனம் மாறி சரண்யா திரைப்பட வாய்ப்புக்களில் நடிக்கலாம் அல்லது வேறு வகைகளில் மனதை செலுத்தி காதல் தோல்வியில் இருந்து வெளி வர முயற்சி செய்ய வேண்டும்.