கேரவேனுக்குள்ள நயன்தாரா இப்படி பண்ணுவாங்கன்னு எதிர்பார்க்கல.. சரண்யா மோகன் ஓப்பன் டாக்..!

சூப்பர் ஸ்டார்னு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று. அது போல லேடிஸ் சூப்பர் ஸ்டார்  யார் என்று கேட்டால் அனைவரும் ஒருமித்த குரலில் நயன்தாராவின் பெயரை கூறுவார்கள்.

மலையாள திரை உலகில் அறிமுகமாகி இன்று பாலிவுட் வரை கலக்கி வரும் நயன்தாரா பற்றி அதிக அளவு கருத்துக்களை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் தற்போது ஒரு பேன் இந்திய நடிகையாக விளங்குகிறார்.

கேரவன்குள் நயன்தாரா..

தமிழ் திரையுலகில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் இணைந்து ஐயா படத்தில் நடித்திருந்த நயன்தாரா. இதனை அடுத்து தமிழில் முன்னணி நடிகர்களாக விளங்கக்கூடிய நடிகர்களோடு இணைந்து தனது நடிப்பை பக்காவாக வெளிப்படுத்தி தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக் கொண்டார்.

தற்போது நடிகையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பல தொழில்களில் முதலீடு செய்து தொழில் அதிபராக விளங்கக் கூடிய இவரை பற்றி  நடிகை சரண்யா மோகன் சில விஷயங்களை பகிர்ந்து இருப்பது பலரையும் ஆச்சிரியத்தில் தள்ளியுள்ளது.

சரண்யா மோகனைப் பொறுத்த வரை இவர் அதிகளவு மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்திருக்கும் நடிகையாக விளங்குகிறார். இவர் யாரடி நீ மோகினி மற்றும் வெண்ணிலா கபடி குழு போன்ற படங்களில் நடித்ததின் மூலம் ரசிகர்களின் மத்தியில் நல்ல செல்வாக்கை பெற்றிருக்கிறார்.

இப்படி செய்வாங்கன்னு எதிர்பார்க்கல..

1997 காதலுக்கு மரியாதை என்ற தமிழ் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் யாரடி நீ மோகினி என்ற திரைப்படத்தில் ஆனந்த வள்ளி கேரக்டரை செய்து சிறந்த துணை நடிகைக்கான விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டார்.

 இதனை அடுத்து ஜெயம் கொண்டான், பஞ்சாமிர்தம், ஈரம், ஆறுமுகம் போன்ற தமிழ் படங்களில் நடித்திருக்க கூடிய இவர் தெலுங்கு படத்திலும் நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் சரண்யா மோகன் நடிக்கும் போது நயன்தாராவுடன் ஏற்பட்ட அனுபவத்தை மனம் திறந்து பேசி இருக்கிறார். அந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக மாறி வருகிறது.

இந்தப் படத்தில் தனுஷை ஒருதலையாக காதலிக்க கூடிய கேரக்டரில் நயன்தாராவின் தங்கை கேரக்டரில் நடித்தவர் தான் சரண்யா மோகன்.

சரண்யா மோகன் ஓபன் டாக்..

மேலும் இந்த படத்தில் நடிக்கும் போது முதல் நாள் முதல் காட்சியில் எனக்கு மிகவும் காய்ச்சல் அடித்தது. அப்போது ஒரு ஓரமாக நான் அமர்ந்திருக்க அங்கு நயன்தாரா வந்து என்னிடம் என்ன ஆச்சு என்று கேட்டார்.

அப்போது அவரிடம் நான் எனக்கு காய்ச்சல் அடிக்கிறது என்று சொல்ல உடனே அவருடைய கேரவனுக்கே என்னை அனுப்பி ஓய்வெடுக்க சொன்னார். அத்தோடு சரண்யா காட்சி வந்தால் மட்டும் உன்னை கூப்பிடுகிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

நடிகை நயன்தாரா உச்சகட்ட அந்தஸ்தில் இருக்கும் போது எனக்கு இப்படி செய்ய வேண்டும் என்ற அவசியமே இல்லை. எனினும் அவரது மனிதாபிமான செயலைப் பார்த்து பிரமித்தேன் என்று சரண்யா கூறிய பேச்சு தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதனை அடுத்து நயன்தாராவின் சிறப்பான மனிதாபிமானம் குறித்து அவர் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அவர் நலம் விரும்பிகளும் புகழ்ந்து பேசி வருவதோடு லேடி சூப்பர் ஸ்டார் என்றால் லேடி சூப்பர் ஸ்டார் தான் என்ற வகையில் பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version