தனுஷ் கூட நடிக்க மாட்டேன் என சொன்னதுக்கு காரணம் இது தான்.. குண்டை தூக்கி போட்ட சரண்யா பொன்வண்ணன்..!

நடிகை சரண்யா, கடந்த 1980, 90களில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்தவர். மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த நாயகன் படத்தில்தான் முதலில் அறிமுகமானார்.

பிரபுவுடன் அவர் நடித்த மனசுக்குள் மத்தாப்பூ படம், நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுத் தந்தது. தொடர்ந்து கருத்தம்மா படத்திலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்த அவர், இயக்குநர் பொன்வண்ணனை திருமணம் செய்துக்கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலானார்.

சரண்யா பொன்வண்ணன்

ஒரு கட்டத்துக்கு பிறகு, அழகான அம்மா கேரக்டரில் நடிக்க நடிகை சரண்யா பொன்வண்ணன் மீண்டும் தமிழ் சினிமாவுக்குள் அழைத்து வந்து விட்டனர்.

இதையடுத்து விஜய், அஜீத்குமார், தனுஷ், உதயநிதி ஸ்டாலின், பரத், சசிக்குமார், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி போன்ற ஹீரோக்களுக்கு அம்மாவாக பல படங்களில் நடித்தார் சரண்யா பொன்வண்ணன்.

தென்மேற்கு பருவக்காற்று படத்தில், விஜய் சேதுபதிக்கு அம்மாவாக நடித்து, சிறந்த அம்மா நடிகை விருது பெற்றார்.

அம்மா கேரக்டரில்…

கிரீடம், எம் மகன், ஒரு கல் ஒரு கண்ணாடி, குட்டிப்புலி, ரெமோ என பல படங்களில் அம்மா கேரக்டரில் நடித்து அசத்தியிருக்கிறார் சரண்யா பொன்வண்ணன்.

சரண்யா பொன்வண்ணன் நடித்த படங்களில் தனுஷ் உடன் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ் அம்மாவாக நடித்தார்.

இந்த படத்தில் சரண்யா பொன்வண்ணன் நடிப்பு மிகுந்த வரவேற்பை பெற்றது.

இதுகுறித்து ஒரு நேர்காணலில் சரண்யா பொன்வண்ணன் கூறியதாவது, இந்த படத்துல நடிக்க ஒண்ணுமே இல்லே. கதை சொன்ன போது இதை பண்ண மாட்டேன்னு சொன்னேன்.

என்னை எதுக்கு கூப்பிடறீங்க…

தனுஷ் வீட்டுக்கு வந்து கதை சொன்னப்போ,என்ன இருக்கு இதுல. என்னை எதுக்கு கூப்பிடறீங்கன்னு கேட்கிறேன்.

உங்களுக்காக ஒரு பாட்டெல்லாம் ரெக்கார்டு பண்ணியிருக்கேன். சரி பாட்டு ரெக்கார்டு பண்ணி இருக்கீங்க. அப்புறம், எனக்கு அதுல என்ன இருக்கு வேலை. ஒண்ணுமே இல்லே.

நீங்க சொன்ன சீன்ல நான் என்ன பண்றேன். இப்படி எல்லாம் அவர்கிட்ட நான் கேட்கிறேன்.

இதுல பாதியில் நான் செத்து வேற போறேன். இதுல என்ன இருக்குன்னு என்னை கூப்பிடறீங்கன்னு அவரை கேட்டேன்.

நடிக்கும்போது ஒண்ணுமே கஷ்டம் தெரியாம, நான் ரொம்ப சாதாரணமா, ரொம்ப ஜாலியா, எப்போர்ட் எதுவும் இல்லாமல் பண்ணின படம் அது.

ஷாக்கிங்கா இருந்தது…

டப்பிங் பேசும் போதுதான், இவ்ளோ நடிச்சேனா, இத்தனை சீன் இருக்கா எனக்கு, இத்தனை சீன் நான் பண்ணினேனா, அப்படீங்கறதே எனக்கு டப்பிங்ல தான் கொஞ்சம் ஷாக்கிங்கா இருந்தது.

ஆனால் படம் ரிலீஸ் ஆன பிறகு, இப்படி ஒரு தாக்கத்தை என் கேரக்டர் கொண்டு வரமுன்னு நான் சத்தியமா எதிர்பார்க்கலை.

வேலையில்லா பட்டதாரி படத்துல தனுஷ் கூட நடிக்க மாட்டேன் என்று சொன்னதுக்கு காரணம், அந்த படத்துல நடிக்கிறதுக்கு ஒண்ணுமே இல்லை என்றுதான் நினைத்தேன்.

ஆனால் படத்தில் அம்மா கேரக்டரில் நடித்த பிறகு பெரிய இமேஜ் கிடைத்தது என்று அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார் நடிகை சரண்யா பொன்வண்ணன்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam