ஆடி போய் ஆவணி வந்தா என் பையன் டாப்புல வருவான் என்ற வசனத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட சரண்யா பொன்வண்ணன் தற்போது கூறிய கருத்துக்கள் பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்து உள்ளது.
தமிழ் திரை உலகில் குணசித்திர நடிகையாய் திகழும் சரண்யா பொன்வண்ணன் மணிரத்தினம் இயக்கிய நாயகன் படத்தில் நடித்திருப்பார். 1980 களுக்குப் பிறகு இவர் அதிகமாக திரைப்படங்களில் நடிக்கவில்லை. ஒரு மிகப்பெரிய பிரேக் எடுத்துக்கொண்டார்.
இதனை எடுத்து தமிழ் திரை உலகில் ரீஎண்ட்ரி கொடுத்த இவர் ராம் திரைப்படத்தில் 2005 ஆம் ஆண்டு அம்மா வேடம் ஏற்று நடித்தார். இதனை அடுத்து தவமாய் தவமிருந்து, எம்டன் மகன், களவாணி போன்ற படங்களில் இவரது நடிப்பு மக்கள் மத்தியில் பெரிதளவு பேசப்பட்டது.
இந்த நிலையில் இவர் சிறந்த குண சித்திர நடிகைக்கான பிலிம் பேர் விருதினையும், 2010 ஆம் ஆண்டுக்கான இந்திய தேசிய திரைப்பட விருதையும் பெற்றவர்.
இவர் அண்மை பேட்டியில் தனது கணவர் தன்னை காதலித்து வந்ததாகவும், இதனை அடுத்து முறைப்படி வீட்டில் பெண் கேட்டு வந்ததை அடுத்து இவர்களது திருமணம் நடந்தது என்று கூறி இருக்கிறார்.
எனவே இவர்களது திருமணம் காதல் திருமணம் அல்ல. பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் தான் என்பதை உறுதியாக தெரிவித்த சரண்யா பொன்வண்ணன் தான் திருமணத்துக்குப் பிறகு தன் கணவரை காதலித்து வருவதாக இம்ப்ரஸ்ங்கான தகவலை கூறி இருக்கிறார்.
அத்தோடு தனது கணவர் திருமணத்திற்கு பிறகும் திருமணத்துக்கு முன்பும் தன்னிடம் சிரித்து கூட பேசியதில்லை. இவருக்கு எப்படி என் மீது காதல் ஏற்பட்டது என்று இது வரை புரியாத புதிராகவே உள்ளது என்பதையும் பதிவு செய்து இருக்கிறார்.
மேலும் இயக்குனர் மற்றும் நடிகரான பொன்வண்ணன் பற்றி கூறும் போது அவர் மிகவும் ஒஸ்டு கேரக்டர், ஒரு நாள் கூட என்னோடு அன்பாக பேசியதே இல்லை. அவரை நான் எப்போதும் செட்டில் கூட சிடுமூஞ்சி என்று தான் அழைப்பேன் என்ற சீக்ரெட் கருத்தை வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டார்.
மேலும் அவர் எப்படி ப்ரபோஸ் செய்தார் என்பது கூட எனக்கு இன்று வரை தெரியாமல் உள்ளது.என் தந்தையிடம் பேசும் போது இவர் ஏதோ தெரியாமல் உளறுகிறார் என்று தான் கூறினேன்.
இந்த சூழ்நிலையில் அவரது காதலை ஏற்றுக் கொண்டு எங்களது திருமணம் மிக நேர்த்தியான முறையில் நடந்து முடிந்தது. இன்று வரை வாழ்க்கையில் நாங்கள் எந்தவிதமான சிக்கல்களையும் சந்திக்காமல் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து சீரிய முறையில் குடும்பத்தை நடத்துவதாக கூறி இருக்கிறார்.