மறுபடியும் சூர்யவம்சம் ஜோடி.. தேவயானி வெளியிட்ட திடீர் போஸ்ட்..! மாஸ் அப்டேட்..!

பாரம்பரிய உடைகளில் நடித்து கூட தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற முடியும் என்று நிரூபித்த தமிழ் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை தேவையானி. தமிழில் முதன் முதலில் காதல் கோட்டை என்கிற திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார் தேவயானி.

முதல் திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது அதனை தொடர்ந்து தேவயானி நிறைய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் விக்ரம் சரத்குமார் விஜயகாந்த் மாதிரியான பெரும் நடிகர்களுக்கெல்லாம் ஜோடியாக நடித்திருக்கிறார் தேவயானி.

தேவயானி நடித்த திரைப்படங்களிலேயே முக்கியமான திரைப்படம் என்றால் அது சூரியவம்சம் திரைப்படம்தான். பொதுவாகவே அந்த கால கட்டங்களில் இயக்குனர் விக்ரமன் இயக்கம் திரைப்படங்களுக்கு அதிகமான வரவேற்பு இருந்து வந்தது.

முக்கிய படம்:

பெரும்பாலும் விக்ரமன் இயக்கும் திரைப்படங்கள் பெரும் வெற்றியை கொடுத்து வந்தன. அந்த வகையில் சூரிய வம்சம் திரைப்படமும் பெரும் வெற்றியை கொடுத்தது. பெரும்பாலும் காதலித்து வீட்டை விட்டு வெளியே செல்லும் ஜோடிகள் நல்ல நிலைக்கு வருவது போல திரைப்படங்களில் அப்போது காட்ட மாட்டார்கள்.

ஆனால் சூரியவம்சம் திரைப்படத்தில் காதலித்த ஜோடிகள் தாய் தந்தையரின் உதவி இல்லாமலேயே பெரும் உச்சத்தை தொடுவது போன்ற கதை அம்சம் அமைந்திருக்கும். மேலும் படிக்காத ஆண்களால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது என்கிற வசனத்தை உடைக்கும் வகையில் அந்த படத்தின் கதை இருக்கும்.

இதனால் நடுத்தர வர்க்க ஆண்கள் மற்றும் காதலர்களுக்கு மத்தியில் சூரியவம்சம் திரைப்படம் அதிக வரவேற்பு பெற்ற திரைப்படமாக இருந்தது. அதற்குப் பிறகு சரத்குமாரும் தேவயானியும் சேர்ந்து மூவேந்தர் என்கிற திரைப்படத்தில் நடித்தனர்.

சித்தார்த்தின் அடுத்த படம்:

ஆனால் அந்த திரைப்படம் சூரியவம்சம் திரைப்படம் சூர்யவம்சம் அளவிற்கான வெற்றியை கொடுக்கவில்லை. இந்த நிலையில் வெகு வருடங்கள் கழித்து மீண்டும் சரத்குமாரும் தேவயானியும் இணைந்து நடிக்க போவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இந்தியன் 2 திரைப்படத்தை தொடர்ந்து அடுத்து சித்தார்த் தனது நாற்பதாவது படத்திற்கான பூஜையை நேற்று நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த படத்தை இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்க இருக்கிறார் சமீபத்தில் சித்தார்த் நடித்த சித்தா மற்றும் இந்தியன் 2 ஆகிய இரண்டு திரைப்படங்களுமே வரவேற்பை பெற்ற படங்களாக இருந்து வந்தது.

இந்த நிலையில் தனது முதல் திரைப்படமான எட்டு தோட்டாக்கள் மூலமே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றவர் இயக்குனர் ஸ்ரீ கணே.ஷ் அவர்கள் இணைவது இணையும்போது கண்டிப்பாக நாற்பதாவது படம் சித்தார்த்திற்கு வெற்றி படமாகதான் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தை மாவீரன் திரைப்படத்தை தயாரித்த சாந்தி டாக்கிஸ் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தில்தான் சரத்குமாரும், நடிகை தேவயானியும் சிசித்தார்த்துடன் இணைந்து நடிக்கின்றனர். அதிகபட்சம் அவர்கள் சித்தார்த்தின் அம்மா அப்பா கதாபாத்திரத்தில்தான் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் சுவாமிநாதன், வெங்கட் பிரபு,மடோனா, அஸ்வின், ரவிக்குமார் போன்றவர்களும்  நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version