நடிகையுடன் மரத்தின் அடியில் தனியாக இயக்குநர்.. விளாசிய சரத்குமார்.. என்ன நடந்தது..!

இயக்குநர் விக்ரமனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் ராஜகுமாரன். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்தவர்.

சூரியவம்சம் படத்தில், பஸ்சில் நடக்கும் காமெடி காட்சியில் ராஜகுமாரனும் நடித்திருப்பார்.

இந்த படத்துக்கு பிறகு, தேவயானி, அஜீத்குமார், பார்த்திபன் நடித்த நீ வருவாய் என என்ற படத்தை டைரக்ட் செய்தார் ராஜகுமாரன். அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

நடிகை தேவயானி

இந்த படத்தை தொடர்ந்து, தேவயானி ஹீரோயினாகவும், சரத்குமார், சியான் விக்ரம் நடிக்கும் விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற படத்தை ராஜகுமாரன் இயக்கினார்.

பொள்ளாச்சியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இதில் சினிமா நடிகை கேரக்டரிலேயே தேவயானி நடித்திருந்தார்.

இதுகுறித்து நேர்காணல் ஒன்றில், மூத்த சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு பல தகவல்களை கூறியிருக்கிறார்.

விண்ணுக்கும் மண்ணுக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த பொழுது நடிகர் சரத்குமார், நடிகர் விக்ரம் ஆகியோர் படப்பிடிப்பு தளத்திற்கு வந்துவிட்டனர்.

ஆனால் படப்பிடிப்பு ஆரம்பிக்கவில்லை. பெரிய பெரிய நட்சத்திரங்கள் என்றால் அவர்கள் தயாராகி வந்த உடனேயே அவர்களுக்கு உண்டான காட்சியை படமாக்கி விட வேண்டும்.

காத்திருந்த சரத்குமார்

ஏனென்றால் பெரிய நடிகர்களை காக்க வைத்தால், அவர்கள் கடுப்பாகி விடுவார்கள். எப்போதும் ஹீரோ அந்தஸ்து நடிகர்களை காத்திருக்க வைப்பது இயக்குநர்களின் வழக்கம் இல்லை.

தாமதித்தால் அவர்கள் கோபப்படுவார்கள் மட்டுமில்லாமல் சோர்ந்து விடுவார்கள். ஆனால் சரத்குமார் தயாராகி வந்து அமர்ந்து நீண்ட நேரம் ஆகியும் படப்பிடிப்பு ஆரம்பமாகாமல் இருக்கிறது.

சரத்குமார், சியான் விக்ரம் இருவரும் மணிக்கணக்கில் காத்திருந்தும் இயக்குநரும் அவர்களை தேடி வரவில்லை.

தனியாக ஷூட்டிங்

என்ன நடக்கிறது இயக்குனர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று கேட்ட பொழுது, டைரக்டர் தேவயானியை வைத்து தனியாக படம் ஷூட் செய்துக்கொண்டு இருக்கிறார் என தகவல் கிடைத்தது.

உடனே சரத்குமார், அங்கு சென்றுள்ளார். அப்போது படத்தின் இயக்குனரும் தற்போதைய நடிகை தேவயானி கணவருமான ராஜகுமாரன் நடிகை தேவயானியை ஒரு மரத்தின் அடியில் தனியாக வைத்து படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்.

லெப்ட் அண்ட் ரைட்

.இதனை பார்த்த சரத்குமார் அந்த இடத்திலேயே ராஜ்குமாரை லெப்ட் அன்ட் ரைட் வாங்கி விட்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் படமே ரத்தாகும் அளவுக்கு பிரச்னை பெரிதாகி விட்டது.

தேவயானி, சரத்குமாரிடம் பேசி சமாதானம் செய்திருக்கிறார். அதன்பிறகு ஒரு வழியாக படத்தை எடுத்து முடித்தார்கள்.

 

ஆனால், அந்த படம் தோல்வி படமாக அமைந்து விட்டது என இந்த விஷயங்களை பற்றி கூறியிருக்கிறார் பிரபல சினிமா பத்திரிக்கையாளர் செய்யார் பாலு.

படத்தின் ஹீரோக்களை காத்திருக்க வைத்து விட்டு, நடிகை தேவயானியுடன் மரத்தின் அடியில் தனியாக ஷூட் நடத்திய இயக்குநர் ராஜகுமாரனை விளாசி இருக்கிறார் சரத்குமார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version