நான் சொன்னால் எல்லாம் செய்வார்களா? ரம்மி விளையாட விளம்பரத்தில் சொன்னதால் வந்த வினை – சரத்குமார் ஆதங்கம்…!

தமிழ் திரையுலகில் முன்னணி  நடிகைகளின் வரிசையில் இருந்தவர் சரத்குமார். இவரது நடிப்பில் வெளிவந்த நாட்டாமை திரைப்படத்தில் அற்புதமான கேரக்டர் ரோலில் அசத்தலாக நடித்து  புகழை பெற்றவர். இதனை அடுத்து இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகரித்ததோடு மட்டுமல்லாமல்  பட வாய்ப்புகளும் இவருக்கு தேடி வந்தது.

திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சில விளம்பர படங்களிலும் நடித்திருக்கிறார். அந்த வகையில் இவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டு பற்றிய  விளம்பரப் படத்தில் அனைவரையும் ரம்மி விளையாட சொல்வது போல நடித்திருப்பார்.

 மேலும் இவர் சென்னையில் பூரண மதுவிலக்கு வேண்டி உண்ணாவிரதம் இருந்த சமயத்தில் செய்தியாளர்கள் ஆன்லைன் ரம்மி விளையாட்டு பற்றி கேள்வி எழுப்புவதோடு அந்த விளம்பரத்தில் எதற்காக நடித்தீர்கள் என்ற கேள்வியையும் முன் வைத்திருந்தார்கள்.

 இதனை அடுத்து இந்த கேள்விக்கு பதில் அளித்த நடிகர் சரத்குமார், ரம்மி ஒரு அறிவுபூர்வமான விளையாட்டு தான் அதை திறமையாக விளையாட வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதுமட்டுமில்லாமல் இந்த விளையாட்டை விளையாடுபவர்கள் அடிக்கடி தற்கொலை செய்து கொள்வதாக தகவல்கள் வெளிவந்ததை அடுத்து அந்த விளம்பரத்தில் இருந்து நடிப்பதில்  இருந்து விலகி விட்டேன்.

தினமும் நான் சொல்ல போகத் தான் தமிழகத்தில் இருக்கும் அனைத்து மக்களும் ரம்மி விளையாடுகிறார்கள் என்று என் மீது குற்றம் சாட்டுவது தவறு.

நான் தேர்தலில் சமயத்தில் எனக்கு ஓட்டு போடுங்கள் என்று கூறிய போது யாரும் போடவில்லை. அப்படி இருக்கும்போது ரம்மி மட்டும் விளையாட சொன்னால் உடனே விளையாடி விடுவார்களா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

தற்போதைய சூழ்நிலையில் பலரும் தற்கொலை செய்து கொள்ளக்கூடிய சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதால் இந்த விளையாட்டை தடை செய்ய சட்டம் கொண்டுவர முயற்சி செய்து வருகிறார்கள்.

எனவே தமிழக சட்டசபையில் விரைவில் நிறைவேற்றப்பட உள்ள இந்த சட்டத்திற்கு கவர்னர் கூடிய விரைவில் ஒப்புதல் கொடுப்பார். அப்படி கொடுத்து விட்டால் இது போன்ற சம்பவங்கள் இனி தமிழகத்தில் நிகழாது என்பதை உறுதியாக கூறலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …