நடிகை கனகாவின் இந்த நிலைமைக்கு காரணம் இது தான். ரகசியம் உடைத்த சரத்குமார்..!

1980-களில் தமிழ் திரை உலகில் அசைக்க முடியாத நடிகையாகவும், ஒரே ஆண்டில் அதிகளவு படங்களில் நடித்த நடிகையாகவும் திகழும் நடிகை கனகா கண்ணழகி என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர்.

வாரிசு நடிகையான இவரை இசையமைப்பாளர் கங்கை அமரன் தனது படமான கரகாட்டக்காரன் மூலம் அறிமுகம் செய்ததை அடுத்து பல படங்களில் பல முன்னணி நடிகர்களோடு நடித்திருக்கிறார்.

நடிகை கனகா..

அந்த வகையில் நடிகை கனகா தமிழ் படம் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்காக ஓர் இடத்தை பிடித்துக் கொண்டவர்.

இவர் திடீர் என்று திரையுலகையை விட்டு விலகிச் சென்ற கனகாவிற்கு திருமணம் நடந்து முடிந்து அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார் என்பது போன்ற தகவல்கள் வெளி வந்ததை அடுத்து அவர் என்ன செய்கிறார் என்ற விஷயம் தெரியாமல் மர்மமாக தான் இருந்து வந்தது.

தற்போது சென்னையில் இருக்கும் தனது பழைய வீட்டில் வசித்து வரக்கூடிய நடிகை கனகா திரையுலக பிரமுகர்கள் மட்டுமல்லாமல், உறவினர்களோடு எந்த ஒட்டும் உறவும் இல்லாமல் தனித்து வாழ்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: அவ என்ன செய்றாளோ தெரியல.. கனகாவை நினைத்து உருக்கும் கங்கை அமரன்..

பல்வேறு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை கனகாவின் நிலைமையை நினைத்துப் பார்த்தால் ஒரு நிமிடம் அனைவருமே இதெல்லாம் ஒரு வாழ்க்கையா? என்று எண்ணக்கூடிய அளவு தற்போது கனகாவின் நிலை உள்ளது.

இந்த நிலைமைக்கு காரணம்..

இப்படி யாரையும் சந்திக்காமல் தனிமையில் வாடி வரும் கனகாவிற்கு இந்த நிலைமை ஏற்பட என்ன காரணம் என்பதை சமீபத்தில் நடிகர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் கூறியிருப்பதை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

அண்மை பேட்டி ஒன்றில் கனகாவை பற்றி பேசிய சரத்குமார், கனகா ஒரு மிகச்சிறந்த உழைப்பாளி சினிமாவின் மீது அளவு கடந்த காதல் வைத்திருந்தார். இவர் வாழ்க்கையில் ஏற்பட்ட எதிர்பாராத சோகங்கள் தான் இவர் எந்த அளவிற்கு மனித வாடையை விரும்பாமல் இருக்கக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார் என்பதை ஓபன் ஆக தெரிவித்தார்.

ரகசியம் உடைத்த சரத்குமார்..

மேலும் தன்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட மறக்க முடியாத துயரங்கள் மற்றும் பலர் செய்த துரோகங்களும் இவரை இந்த நிலைமைக்கு கொண்டு வந்து கடுமையான மன அழுத்தத்தில் தள்ளி விட்டது.

அதிலிருந்து வெளி வர முடியாமல் நம்பிக்கை துரோகம் செய்தவர்களை நினைத்து நினைத்து கனகா தற்போது தனிமையில் தன் வீட்டில் யாரையும் பார்க்க விரும்பாமல் வசித்து வருகிறார்.

இதையும் படிங்க: இறந்து போன பீட்டர் பாலின் சட்டை கழட்டி பார்த்து அதிர்ந்து போன வனிதா விஜயகுமார்..! வெளியான ரகசியம்..!

பொதுவாகவே திரையுலகில் நடிக்கக்கூடிய அனைவருக்கும் மன அழுத்தம் ஏற்படுவது இயல்பான ஒன்று தான். இதனால் தான் மன அழுத்தம் ஏற்படும் கூடிய இது போன்ற நபர்களை அதிலிருந்து காக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை நடிகர் சங்க தீர்மானங்களில் நான் கூறியிருப்பேன் என்பதை கூறியிருக்கிறார்.

மேலும் கனகா நினைத்தால் மட்டும் தான் இந்த மன அழுத்தத்தில் இருந்து வெளி வந்து சக மனிதர்களோடு சகஜமாக பழகக்கூடிய நிலைமை ஏற்படும் இல்லையெனில் இது போல வீட்டுக்குள் தன்னை தனியாக பூட்டிக்கொண்டு வாழக்கூடிய நிலையில் இருந்து வெளிவர முடியுமா? என்பது சந்தேகம் தான்.

மேலும் சரத்குமார் கூறிய இந்த விஷயமானது தற்போது வைரலாக ரசிகர்களின் மத்தியில் பரவி வருகிறது. அத்தோடு ரசிகர்கள் பேசும் பொருளாக இதை மாற்றி அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version