காசுக்காக வரலட்சுமி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களா.. நடிகர் சரத்குமார் கொடுத்த பதிலை பாருங்க..!

தமிழ் திரையுலகில் போடா போடி என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுக நாயகியாக அறிமுகம் செய்யப்பட்ட நடிகை வரலட்சுமி தார தப்பட்டை என்ற படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்டார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் நடித்து வந்த இவர் ஆந்திராவை சேர்ந்த தமிழ் நடிகரான விஷாலை காதலித்து வந்ததாக செய்திகள் பரவியதை அடுத்து நடிகர் சங்க தேர்தலில் தன் அப்பாவோடு ஏற்பட்ட மோதலை அடுத்து காதலை பிரேக் அப் செய்தார்.

நடிகை வரலட்சுமி..

இதனை அடுத்து அண்மையில் மும்பையைச் சேர்ந்த ஆர்ட் கேலரிஸ்ட் நிக்கோலாய் என்பவரை காதலித்து தற்போது தாய்லாந்தில் திருமணம் செய்து கொண்ட இவர் பற்றி பல்வேறு வகையான செய்திகள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

இதற்கு காரணம் இவர் திருமணம் செய்து கொண்ட நபர் ஏற்கனவே திருமணம் செய்து கொண்டு பதினாறு வயதில் இருக்கும் பெண்ணிற்கு தகப்பனாக இருக்கிறார். இந்நிலையில் இவர் எப்படி இந்த இரண்டாவது மணதிற்கு சம்மதம் தெரிவித்தார் என்ற சர்ச்சைகள் நிலவி வருகிறது.

இதனை அடுத்து இணையத்தில் பல்வேறு வீதமான கலவை ரீதியான விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது மகள் திருமணம் குறித்து தவறான விமர்சனங்கள் தருபவர்களுக்கு பதிலடி தந்திருக்கிறார் அவரது தந்தை சரத்குமார்.

காசுக்காக வரலட்சுமி கல்யாணம் பண்ணிட்டாங்களா..

அந்தப் பேட்டியின் போது அவர் பேசியதில் தான் சோசியல் மீடியாக்கள் பலவற்றை என் மகளின் திருமணத்திற்கு முன்பு இருந்தே கவனித்து வருகிறேன்.

சிலர் அவர்களின் நேரத்தை செலவிட்டு மற்றவர்களின் வாழ்க்கையை விமர்சித்து வருகிறார்கள். உங்களுக்கு தைரியம் இருந்தால் நேரில் வந்து பேச வேண்டும்

அதை விடுத்து விட்டு மறைந்து இருந்து விமர்சனம் செய்பவர்களுக்கு என்ன தைரியம் இருக்கிறது. நான் என் மகளுக்காக மட்டுமல்ல எல்லா பெண்களுக்காகவும் தான் பேசுகிறேன்.

எப்படி எந்த ஒரு தகவலும் அறியாமல் பெண்களை தவறாக பேசுவதற்கு உரிய உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது நான் எப்போதும் நெகட்டிவ் கமெண்ட்களை பார்க்க மாட்டேன்.

ஆனால் சிலர் இப்படி நெகட்டிவ் கருத்துக்களை பகிர்வதால் மனதளவில் பாதிப்பு ஏற்படுகிறது என்று சொல்லி இருக்கிறார்.

மேலும் என் மகள் பணத்திற்காக தான் திருமணம் செய்து கொண்டார் என்று சொல்லி இருக்கிறார்கள். இதனை பற்றி எதற்காக நான் கவலைப்பட வேண்டும். அதற்கு வேண்டிய அவசியம் இல்லை.

மேலும் வரலட்சுமி அவருடைய முடிவில் தான் அவரது திருமணத்தை செய்திருக்கிறார். அத்துடன் நிக்கோலையை மனதார பிடித்து தான் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

நடிகர் சரத்குமார் கொடுத்த பதில்..

இதை விடுத்து நேரத்தை திங்கக்கூடிய வகையில் தவறான கமெண்ட்களை செய்து வருவது எந்த விதத்திலும் முறையல்ல என்பதை பளிச்சென்று சரத்குமார் சொல்லியதை அடுத்து இணையத்தில் இந்த விஷயம் பரவலாக பரவி வருகிறது.

அத்துடன் தனது மகள் விரும்பி காதலித்து தான் திருமணம் செய்து கொண்டாரே ஒழிய பணத்திற்காக அல்ல என்பதை பக்குவமாக வெளிப்படுத்தி இருக்கும் சரத்குமாரின் இந்த பேச்சானது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி இணையத்தில் அதிக அளவு படிக்கப்படுகின்ற விஷயங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version