இதுக்காக வேணா விஜய்க்கு டிவிக்கு நன்றி சொல்லிக்கிறேன்.. பிக்பாஸ் சரவணன் ஒரே போடு..

விஜய் டிவியில் கடந்த 7 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2017ம் ஆண்டில் துவங்கிய இந்த நிகழ்ச்சியில் இதுவரை 2023 வரை 7 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது.

பிக்பாஸ்

இதில் பிக்பாஸ் வீட்டுக்குள் 100 நாட்களுக்கு மேல் தாக்கு பிடித்து இருக்கும் போட்டியாளர்களில் ஒருவர் இறுதியில் பிக்பாஸ் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டு அவருக்கு ரூ. 50 லட்சம் பரிசாக வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

வாரத்தில் சனி, ஞாயிறு மட்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் கமல், அந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் வீட்டுக்குள் நடந்த பஞ்சாயத்துகளை பேசி, திட்ட வேண்டியவர்களை பாராட்டுவார். பாராட்ட வேண்டியவர்களை திட்டுவார் என்பது வேறு விஷயம்.

சரவணன்

தமிழ் சினிமாவில் கடந்த 1991ம் ஆண்டில் வைதேகி வந்தாச்சு என்ற படம் மூலம் அறிமுகமானவர் சரவணன். சேலத்தை சேர்ந்த இவர், அடுத்தடுத்து நல்ல படங்களில் நடித்தார்.

குறிப்பாக பொண்டாட்டி ராஜ்ஜியம், அபிராமி, மாமியார் வீடு, செவத்த பொண்ணு, தாய் மனசு, சந்தோசம், நந்தா, அரண்மனை, கடைக்குட்டி சிங்கம், கார்கி, கோலமாவு கோகிலா, ஜெயிலர் என பல வெற்றிப் படங்களில் நடித்தவர்.

துவக்கத்தில் ஹீரோவாகவும் ஒரு கட்டத்தில் குணச்சித்திர நடிகராகவும் சரவணன் மாறினார். நடிகர் கார்த்திக்கு சித்தப்புவாக நடித்த பருத்திவீரன் படத்தில் அவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.

வடிவேலு

நடிகர் வடிவேலுவுடன் இணைந்து அழகர் மலை உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் பல்வேறு முன்னணி ஹீரோக்களின் படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

பெண்கள் கூட்டத்தில்

கடந்த 2019ம் ஆண்டில் நடந்த பிக்பாஸ்நிகழ்ச்சி சீசன் 3ல் பங்கேற்றார் நடிகர் சரவணன். அப்போது அவர் ஒருநாள் பிக்பாஸ் வீட்டுக்குள் மற்ற போட்டியாளர்கள் மத்தியில் பேசும்போது, கல்லூரியில் படிக்கிற காலகட்டத்தில் நான், பெண்கள் அதிகமாக செல்கிற கூட்டமான பஸ்சாக பார்த்து அதில் ஏறிச் செல்வேன்.

அப்போதுதான் பெண்கள் கூட்டத்தில் பெண்களை இடிக்க முடியும் என்பதால், அப்படி ஒரு தவறை செய்தேன், என்று குறிப்பிட்டு பேசினார்.

இதையும் படியுங்கள்: அட கொடுமைய.. தன் அம்மா குறித்த கேள்விக்கு கீர்த்தி சுரேஷ் கொடுத்த பதில்.. பங்கம் பண்ணும் ரசிகர்கள்..

வெளியேற்றப்பட்டார்

இதையடுத்து நடிகர் சரவணன், அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். கல்லூரியில் படிக்கிற காலத்தில் செய்த ஒரு தவறு என அவரே குறிப்பிட்டு பேசிய நிலையில், இப்படி அவரை அந்த காரணத்துக்காக பெரிய குற்றவாளி போல, பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்று விட்டு நியாயமல்ல என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் சரவணன் கூறியதாவது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் எனக்கு இழைக்கப்பட்டது அநீதி என்றாலும் கூட அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு குழந்தைகளுக்கு எல்லாம் சரவணன் என்றால் யார் என்று தெரிந்து விட்டது

அடையாளம்

பிக் பாஸ் சரவணன் என்று எனக்கு ஒரு அடையாளம் கொடுத்திருக்கிறது அந்த வகையில் விஜய் டிவிக்கு நான் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்

இதையும் படியுங்கள்: “கவர்ச்சி நடிகையாகும் முயற்சியில் இருக்கும் பெண்கள்.. இதை மறந்துடாதிங்க..” நடிகை சோனா பகீர்..!

எப்போதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்

ஆனால் அவர்கள் நான் எப்போதோ செய்த குற்றத்திற்காக தற்போது கலந்து கொண்டிருந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றியது தவறு. அதனை நான் எப்போதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார் பிக் பாஸ் சரவணன் அவர்கள்

என்னை அநியாயமாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றினாலும், மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியதற்காக விஜய்க்கு டிவிக்கு நன்றி சொல்லிக்கிறேன் என்று பிக்பாஸ் சரவணன், இந்த நேர்காணலில் ஒரே போடாக போட்டிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version