“படிக்கவே தனி தைரியம் வேணும்..” மரணிக்க சில மணி நேரம் முன்பு பத்மினி கூறிய அந்த வார்த்தை.. சரோஜா தேவி கண்ணீர்…!

சினிமாவில் எப்படி ஆசாபாசங்களை காட்டி நடிகர், நடிகைகள் நடிக்கிறார்களோ, அதே போல் நிஜ வாழ்க்கையிலும் அவர்களும் அன்பு, பாசம், நட்பு என நிறைய உணர்வுகள் கொட்டிக் கிடக்கிறது.

சில நடிகர், நடிகையர் தங்களது வாழ்வில் நடந்த நிஜ சம்பவங்களை நினைத்து வருத்தப்பட்டு கூட கேமரா முன்பு சோகமான காட்சிகளில் நடித்து விடுவதாக, பின்னாளில் நேர்காணல்களில் அவர்கள் கூறியிருக்கின்றனர்.

சினிமா திரையில் கேமரா முன் ரசிகர்களை சிரிக்க வைக்கும் விதமாக, ரசிக்க வைக்கும் விதமான நடிக்கும் கலைஞர்கள், நிஜத்தில் பல துன்பம், துயரங்களை கடந்து வந்தவர்கள்தான்.

மனசு நிறைய துக்கம்

மனசு நிறைய துக்கமும் வேதனையும் இருந்தாலும் கலைத்துறை சார்ந்தவர்களாக அவர்களது திறமையை, தங்களது பங்களிப்பை தந்து வருகின்றனர்.

உதாரணமாக, தனது அன்பு மகன் பிரசன்னா மறைவுக்கு பிறகும், புத்திர சோகத்தை மனதில் வைத்துக்கொண்டு பல படங்களில் காமெடி செய்து சிரிக்க வைத்தவர்தான் நடிகர் விவேக். அதுபோல் நடிகர் பிரபுதேவா, பிரகாஷ் ராஜ், இயக்குனர் சுந்தர்ராஜன், புத்திர சோகத்தை மறந்து சினிமாவில் ரசிகர்களை மகிழ்வித்தவர்கள்தான்.

இதையும் படியுங்கள்: “நீ பண்ணா.. செத்துப்போனது கூட எந்திரிச்சிடும்..” இன்னைக்கு ஒரு நாள் மட்டும்.. VJ மகாலட்சுமி குறித்து ரவீந்தர்..!

இப்படி செ்ாந்த வாழ்வில் எத்தனையோ இழப்புகளை, துயரங்களை கடந்துதான் சினிமாவில் கலைஞர்கள் ரசிகர்களை மகிழ்வித்துக்கொண்டு இருக்கின்றனர்.

நடிகை பத்மினி குறித்து பெரிதாக அறிமுகம் எதுவும் தேவையில்லை. நடிகை பத்மினியும் சரோஜாதேவியும் மிக நெருங்கிய நண்பர்கள். இருவரும் வாடி போடி என்று பேசிக்கொள்ளும் அளவுக்கு நெருக்கமாக இருந்தவர்கள்.

பத்மினி – சரோஜா தேவி

ஒரு முறை திரை கலைஞர்களுக்கான கலை நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அப்போது பத்மினியும் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார். சரோஜா தேவியும் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார்.

நிகழ்ச்சி முடிந்து கிளம்பும் பொழுது சரோஜாதேவியிடம், நான் போறேன் என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிறார் நடிகை பத்மினி. அப்போதே சரோஜாதேவிக்கு மனதுக்குள் ஏதோ ஒரு விதமான அழுத்தத்தை உணர முடிந்திருக்கிறது.

இதையும் படியுங்கள்: பிரபல நடிகரை கட்டி அணைத்த பானுமதி.. மூச்சு விட முடியாமல் கதறிய நடிகர்..!

நான் போறேன்

ஏனென்றால், எப்போதுமே போயிட்டு வரேன் என்று தானே பத்மினி என்னிடம் சொல்லுவார். ஆனால் இப்போது ஏன், போறேன் என கூறுகிறார் என மனதில் புழுங்கிக்கொண்டு இருந்த போதிலும், எதுவும் நடக்காது என்ற நம்பிக்கையில் கிளம்பி இருக்கிறார்.

ஆனால், அடுத்த சில மணி நேரங்களில் பத்மினி இறந்துவிட்டார் என்ற தகவல் சரோஜா தேவியை அடைந்திருக்கிறது. அந்த நிமிடமே நொறுங்கிப் போய் இருக்கிறார்.

பத்மினி மறைவு

நான் போறேன் என்று பத்மினி சொல்லிய அந்த வார்த்தை தந்த மன அழுத்தத்திலிருந்து சரோஜாதேவி வெளியே வருவதற்குள் அவர் மரணம் அடைந்து விட்டார் என்ற ஒரு தகவல் கேட்டு அதிர்ந்து போனதாக சரோஜா தேவி சமீபத்தில் கண்ணீருடன் பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.

மரணிக்க சில மணி நேரம் முன்பு பத்மினி கூறிய நான் போறேன் என்ற வார்த்தையை சரோஜா தேவி மறக்காமல் சொல்லி கண்ணீர் வடித்திருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version