இந்த நடிகர் தான் என் அப்பா.. நடிகை நயன்தாரா சொல்றத கேட்டீங்களா..?

மலையாள திரை உலகில் ஆரம்ப நாட்களில் அறிமுகமான நடிகை நயன்தாரா, இதனை அடுத்து தென்னிந்திய மொழிகளில் நடித்து திரை உலகில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டு இன்று முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இதையும் படிங்க: அடடே.. நடிகர் ராஜ்கபூர் இயக்கிய படங்களா இது..? இந்த அஜித் படத்தை டைரக்ட் பண்ணதும் இவரு தானாம்..!

தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாமல் அண்மையில் ஷாருக்கானோடு இணைந்து ஜவான் திரைப்படத்தில் நடித்ததின் மூலம் பாலிவுட்டிலும் களம் இறங்கி இருக்கும் நயன்தாரா பல பாலிவுட் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பினை பெற்றிருக்கிறார்.

நடிகை நயன்தாரா..

தமிழ் திரையுலகை பொருத்த வரை ஐயா படத்தில் சிறப்பான நடிப்பை சரத்குமாரோடு இணைந்து வெளிப்படுத்திய இவர் தல அஜித் படமான பில்லா படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் ரசிகர்களை அசத்தியவர்.

ஆரம்ப காலங்களில் திரை உலகில் சற்று கவர்ச்சியை காட்டி நடித்திருந்தாலும் அதன் பிறகு தனக்கு என்று ஒரு நிலையான இடத்தை பிடித்துக் கொண்ட நயன்தாரா பெண்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கேரக்டர் ரோல்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் அண்மையில் இவர் நடிப்பில் வெளி வந்த அன்னபூரணி திரைப்படம் பல்வேறு விதமான சர்ச்சிகளுக்கு உள்ளாகி அவருக்கு பெரிய அளவு வெற்றியை தரவில்லை. எனினும் அவற்றைப் பற்றி கவலைப்படாமல் அடுத்தடுத்து படங்களில் வெற்றியை பெற கண்ணும் கருத்துமாக நடித்து வருகிறார்.

நடிகர் சத்யராஜ் பற்றி ஓப்பன் டாக்..

திரைப்படங்கள் மட்டுமல்லாமல் வெப் சீரியஸ், விளம்பரங்கள் என கல்லா கட்டி வரும் நயன்தாரா ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படுகிறார். மேலும் தற்போது இவர் பல்வேறு வகையான தொழில்களில் முதலீடு செய்தும் பல்வேறு தொழில்களை செய்து வரும் தொழில் அதிபராக மாறி இருக்கிறார்.

இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் நயன்தாரா நடிகர் சத்தியராஜ் குறித்து சில தகவல்களை சொல்லி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார். மேலும் சத்யராஜ் ஒரு சிறப்பான நடிகர் அவரோடு நடிக்கும் போதெல்லாம் அவர் எப்படி இப்படி நடிக்கிறார் என்று தான் வியந்து பார்த்திருப்பதாக கூறி இருக்கிறார்.

எப்போதுமே கூலாக நடிக்கக்கூடிய சத்தியராஜ் அனைவரிடமும் அன்போடு பழகுவதோடு மட்டுமல்லாமல், எதார்த்தமான வகையில் எப்போதும் நடந்து கொள்வார். அவருக்குள் தான் ஒரு மிகப்பெரிய நடிகர் என்ற கர்வம் எப்போதும் இருந்ததில்லை.

அவர் நடிப்பில் ஒவ்வொரு முறையும் புதுமையை நான் பார்த்து ரசித்திருக்கிறேன். இப்படி எல்லாம் நடிக்க முடியுமா? என்று வியந்து பார்த்த நடிகர்களில் ஒருவர் தான் சத்தியராஜ்.

எப்பவுமே அப்பா மாறி..

எனவே எனக்கு சத்யராஜின் நடிப்பு பிடிப்பதோடு அவருடைய குணமும் மிகவும் பிடிக்கும் இப்படி அவர் இருப்பதால் தான் அந்த நடிகர் தான் என் அப்பா போல என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.

இவரைப் போல வேறு யாரும் எந்த அளவு கம்போடபிலாக நடிகைகளிடம் நடந்து கொள்வார்களா? அவர்களுக்கும் மதிப்பளிப்பார்களா? என்பது திரை உலகில் சந்தேகமான ஒன்றாக தான் எனக்கு தோன்றுகிறது.

எனவே நடிகர் சத்யராஜ் தான் என் அப்பா என்று நயன்தாரா கூறிய விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு சத்தியராஜ் குணத்தை அறிந்து கொண்டு அவரது ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..

மேலும் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் ஒரு மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தி ரசிகர்களை குஷி படுத்தியதோடு மட்டுமல்லாமல், அவர்கள் நண்பர்களுக்கும் இந்த விஷயத்தை ஷேர் செய்து பரவலாக இந்த விஷயத்தை வேறு லெவலில் தெறிக்க விட்டிருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version