தமிழ் திரை உலகில் பழம் பெரும் நடிகையாக திகழ்ந்த நடிகர் திலகம் சாவித்திரியை பற்றி சொல்லி தெரிய வேண்டிய அவசியமே இல்லை.
இவருக்கு ரசிகர்களின் மத்தியில் ஏராளமான புகழும் செல்வாக்கும் இருந்ததோடு மட்டுமல்லாமல் தமிழில் முன்னணி நடிகர்களாக இருந்த அனைத்து நடிகர்களோடும் இணைந்து நடித்தவர்.
ஜெமினிகணேசனை மிரட்டி வெச்சிருந்தாங்க..
தமிழ், தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து தனக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறை சித்தரிக்க கூடிய வகையில் நடிகையர் திலகம் எனும் தலைப்பில் திரைப்படம் ஒன்று வெளி வந்தது.
இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்ததை அடுத்து மாபெரும் வெற்றியும் வசூலையும் வாரி தந்த படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷுக்கு பல பட வாய்ப்புகள் தேடி வந்தது.
இந்த சூழ்நிலையில் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படத்தால் ரியல் ஜெமினி கணேசன் குடும்பம் இரண்டாகப் பிரிந்துள்ளது.இது குறித்து தற்போது தகவல்கள் வெளி வந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எங்க குடும்பத்தை கலைத்த சாவித்திரி..
மேலும் நடிகையர் திலகம் படத்தில் சாவித்திரி முதல் முறையாக மது அருந்துவதற்கு ஜெமினிகணேசன் தான் காரணம் என்பது போன்ற காட்சிகள் சித்தரிக்கப்பட்டு இருந்தது. இந்த காட்டுக்கு ஜெமினி கணேசனின் மூத்த மகளும் பிரபல மருத்துவர் ஆன கமலா செல்வராஜ் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.
மேலும் இந்த படத்தில் உண்மைக்கு புறம்பாக சில காட்சிகள் பொய்யாக இடம் பெற்று இருப்பதாகவும் சொல்லியது பலருக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது.
மகளின் பகீர் பேச்சு..
இந்த பேச்சுக்கு எதிராக சாவித்திரியின் மகன் சதீஷ் அம்மாவின் கடைசி நாட்களில் அவர்கள் தனியாக இல்லை. அப்போது எனக்கு 14 வயது என்பதால் என்ன நடந்தது என்பது உண்மையில் எனக்கு மிக நன்றாக தெரியும்.
எனவே அந்த படத்தில் நடந்ததை தான் காட்டி இருக்கிறார்கள் என்று சொல்லி இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் சாவித்திரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி அம்மா கடைசி காலத்தில் கதி இல்லாமல் இறந்து போனதார் என்று தான் மற்றவர்கள் நினைத்திருக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல கடைசி வரை அப்பா அவரை கை விடவில்லை என்று சொல்லி இருக்கிறார்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அவரது மகனும், மகளும் ஜெமினி கணேசனை பற்றி தான் பேசினார்களே ஒழிய தனது அம்மாவுக்கு மது குடிக்க கற்றுக் கொடுத்தது பற்றி எந்த ஒரு மறுப்பும் ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.
எனவே இந்த விஷயமானது ஜெமினி கணேசனின் மூத்த மகள் கமலா செல்வராஜை சீண்டிப் பார்த்திருப்பதால் சாவித்திரியின் மகனும் மகளும் கூறிய கருத்துக்கு பதில் அளிக்க வேண்டும் என்பதற்காக என் அப்பா தான் சாவித்திரிக்கு மது பழக்கத்தை கற்றுக் கொடுத்ததாகவும் அப்பா வேலை இல்லாமல் இருந்தது போலவும் படத்தில் காட்டி இருக்கிறார்கள்.
இதை விஜய சாமுண்டீஸ்வரி அனுமதித்தது தவறு இந்த படத்தால் சகோதரிகளாகிய நாங்கள் பிரிந்து இருக்கிறோம் என்பதை உடைத்து விட்டார்.
அத்துடன் தன்னையும் தன் அப்பாவையும் குர்கா மற்றும் நாயை விட்டு விரட்டியடித்தவர் சாவித்திரி. அந்த மோசமான காலத்தை இந்த படம் நினைவுபடுத்தி விட்டது என் அம்மா சொன்னபடி என் அப்பாவின் பிள்ளைகளை நான் தான் அரவணைத்து வந்தேன்.
ஆனால் விஜய.. இனி மேல் எனது தங்கை இல்லை அவளை வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டேன் என்று கோபத்தை கொட்டி இருக்கிறார்.