குழந்தைக்கு நிலவை காட்டி சோறு ஊட்டும் முறை முட்டாள்தனமானது அல்ல. அறிவியல் பூர்வமானது.

குழந்தை கருவில் இருக்கும் போது தாயின் தொப்புள் கொடி வழியாக தான் உணவு செல்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் குழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடி உடலிலிருந்து பிரித்து பின்பு உணவுக்குழாயின் விரியத் தொடங்கியது முழுமையடைய குறைந்தது ஐந்து வருடம் ஆகும் என்று இன்று அறிவியலாளர்களும் மருத்துவர்களும் கூறுகிறார்கள். 

நிலவை காட்டி சோறு ஊட்டும் பழக்கம் நமது நாட்டில் தொன்று தொட்டு வரும் ஒரு பழக்கம் என்றால் அது உண்மைதான். ஏனென்றால் நிலவை காட்டி சோறு ஊட்டும் போது குழந்தைகள் மேல் நோக்கிப் பார்க்கும் போது  தொண்டை மற்றும் உணவு குழாய் விரிவடைகிறது அப்போது உணவு மிகவும் எளிதாக இரைப்பை நோக்கி இறங்குகிறது. மேலும் கீழ் நோக்கி இறங்கும் அலைவு இயக்கங்கள் மற்றும் செரிமான ஊக்கிகளுக்கு இது நல்ல பயிற்சியை கொடுக்கிறது.

இப்பயிற்சிகள் மூலம் குழந்தைகளின் உணவு செரிமான மண்டலம் மேலும் ஆரோக்கியம் அடைகிறது. நிலவைக் காட்டி சோறு ஊட்டும்போது குழந்தைகள் உணவில் ஆர்வம் செலுத்துகிறார்கள். இன்று உள்ள தாய்மார்கள் நமது முன்னோர்கள் செய்து வந்த செயல் அடி முட்டாள் தனமானது மூட நம்பிக்கைகள் நிறைந்தது என்று எண்ணிக் கையில் செல்போனும் டிவியை காட்டியும் குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது மூலம் அவர்களுக்கு செரிமான பிரச்சனைகள் மிகுந்த அளவு ஏற்படும் குறிப்பாக கைக்குழந்தைகளை முதல் இரண்டு வயது குழந்தைகள் வரை உள்ள குழந்தைகளுக்கு நிலவை காட்டி சோறு ஊட்டுவது மிகவும் நல்லது என்று அறிவியல் கூறுகிறது. 

எனவே தாய்மார்கள் இனியாவது இன்றைய தலைமுறை குழந்தைகளின் ஜீரண சக்தியை அதிகரிக்க அவர்களின் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக குறைந்தது ஐந்து வயது வரையாவது நிலவினைக் காட்டி உணவினை ஊட்டினால் நம் குழந்தைகளுக்கு ஏற்படும் செரிமான பிரச்சனையை நாம் அறவே தவிர்க்கலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …