ரம்யா கிருஷ்ணனின் உண்மையான கதை..! – பலருக்கும் தெரியாத ரகசியம்..!

நடிகை ரம்யா கிருஷ்ணன் கடந்த 1984 ஆம் ஆண்டு திரை துறையில் நடிகையாக அறிமுகமானவர்,

தன்னுடைய 14 வயதிலேயே திரைத்துறையில் அறிமுகமான இவர் கிட்டத்தட்ட 40 ஆண்டு காலமாக சினிமாவில் பயணித்து வருகிறார்.

நடிகைகளை பொருத்தவரை 5 ஆண்டுகள் 10 ஆண்டுகள் திரைத்துறையில் கடந்து விடுவதே பெரிய சாதனையாக இருக்கும் நிலையில் நடிகர் ரம்யா கிருஷ்ணன் 40 ஆண்டு காலம் திரை துறையில் நினைத்து நிற்கிறார்.

மட்டுமில்லாமல் தற்பொழுதும் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ற்கு ஜோடியாக டெய்லர் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இடையில் கொரோனா நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் தமிழ் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் லீலா என்ற கதாபாத்திரத்தில் பிட்டு படங்களில் நடிக்கக்கூடிய நடிகையாக நடித்திருந்தார்.

தற்போது மூன்று படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி மராத்திய உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்திருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராகவும் விருந்தினராகவும் போட்டியாளராகவும் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய முகத்தை பதிய வைத்துக் கொண்டிருக்கிறார்.

மட்டுமில்லாமல் குயின் என்ற வெப் சீரிஸிலும் நடித்திருக்கிறார். வெள்ளித்திரை, சின்னத்திரை, இணைய தளங்கள், OTT என அனைத்து தளங்களிலும் பிசியாக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ரம்யா கிருஷ்ணன் 40 ஆண்டு காலத்தை இதனுடைய சினிமா வாழ்க்கையில் கலந்து இருக்கிறார்.

இதனுடைய ரகசியம் என்ன.? என்று பலருக்கும் தெரியாத ஒரு விஷயம். ஒரு இயக்குனர் தன்னுடைய படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று ஒரு நடிகை அணுகும் பொழுது இந்த கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன்.. இந்த காட்சியில் நடிக்க மாட்டேன்.. இப்படி நடிக்க மாட்டேன்… அப்படி நடிக்க மாட்டேன்.. என்று கூறுவது ஒரு நடிகையின் அழகு கிடையாது என்று கூறுகிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

ஒரு இயக்குனர் ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி, அந்த கதாபாத்திரத்தில் நீங்கள் நடித்தால் சரியாக இருக்கும் என்று யோசித்து இருக்கிறார் என்றால்.. அவர் ஏன் அப்படி யோசித்தார்.. என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

அவருடைய நோக்கம் நிஜமாகவே தவறாக இருந்திருந்தால் கண்டிப்பாக அதனை நாம் மறுக்கலாம். ஆனால், க,தைக்கும் அவர் எழுதிய திரைக்கதை-க்கும் அந்த கதாபாத்திரம் வலுவாக இருக்கும் பொழுது மோசமான கதாபாத்திரமாக இருக்கிறது.. ஆபாசமாக இருக்கிறது போன்ற காரணங்களை கூறி மறுக்கக்கூடாது என்பது நடிகை ரம்யா கிருஷ்ணனின் மந்திரமாக இருக்கிறது.

பொதுவாக நடிகைகள் அனைவரும் படங்களில் இப்படி நடிக்க மாட்டேன்.. அப்படி நடிக்க மாட்டேன் என்று விதிமுறைகளை விதிப்பது வாடிக்கையாக நடந்து வருகிறது. இது அவர்களுடைய சினிமா எதிர்காலத்திற்கு தவறான ஒரு விஷயம்.

ஏனென்றால் நிச்சயமாக அந்த இயக்குனர் இன்னொரு படம் எடுக்கும் பொழுது இந்த நடிகையை யோசித்து கூட பார்க்க மாட்டார். ஆனால், நடிகை ரம்யா கிருஷ்ணன் எப்படியான கதாபாத்திரமாக இருந்தாலும் ஏற்று நடக்க தயாராக இருக்கிறார்.

சூப்பர் டீலக்ஸ் படத்தை இதற்கு எடுத்துக்காட்டாக, தான் பெற்ற மகனே அவனுடைய வாயால் தன்னை தே**** என்று திட்டக்கூடிய ஒரு காட்சி. இப்படியான கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்திருப்பார்.

படத்தின் இறுதிவரை அந்த கதாபாத்திரத்தின் தாக்கம் இருந்து கொண்டிருக்கும். இறுதியில் அந்த கதாபாத்திரத்தின் தரப்பு நியாயத்தை விளக்கும் விதமாக காட்சிகள் கிளைமாக்ஸில் இடம்பெற்றிருக்கும்.

இந்த கதாபாத்திரம் ரம்யா கிருஷ்ணனுக்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்று கொடுத்தது. பலரும் ரம்யா கிருஷ்ணனை கடுமையாக விமர்சிப்பார்கள் என்று எதிர்பார்த்தனர். ஆனால், ரம்யா கிருஷ்ணன் எப்படி அந்த கதாபாத்திரத்தை பார்த்தாரோ அதேபோல அனைத்து ரசிகர்களும் பார்த்தனர் என்பது தான் இங்கு விஷயம்.

எனவே இயக்குனர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு நடிகையாக நடிகை ரம்யா கிருஷ்ணன் இருப்பதன் காரணமாகத்தான் 40 ஆண்டுகளை அவரால் திரைத்துறையில் எளிமையாக கடக்க முடிந்திருக்கிறது. இன்னும் நிறைய தூரம் அவர் பயணிக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam