சில்க் ஸ்மிதா இறந்ததும் அவ உடம்புல…. மறைக்கப்பட்ட உண்மை – தோழி நடிகை பகீர்!

காந்த கண்ணழகால் தன்னுடைய வசீகர பார்வையால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் சொக்கி இழுத்தவர் நடிகை சில்க் ஸ்மிதா.

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்திய சினிமாவில் இவரது புகழ் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தது. முதன் முதலில் சில்க் ஸ்மிதா நடிகர் வினு சக்கரவர்த்தியால் தான் வண்டி சக்கரம் என்கிற திரைப்படத்தில் சிலுக்கு என்கிற சாராயம் விற்கும் பெண் கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்தபட்டார்.

நடிகை சில்க் ஸ்மிதாவின் அறிமுகம்:

எனவே சில்க் ஸ்மிதாவை அறிமுகப்படுத்தி வைத்த பெருமை வினு சக்கரவர்த்திக்கு தான் சேரும். பின்னாளில் அந்த பெயரே சில்க் ஸ்மிதாவாக மாறிவிட்டது .

17 வருட சினிமா வாழ்க்கையில் தமிழ், தெலுங்கு, கன்னடம் ,மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பலமொழிகளில் கிட்டத்தட்ட 450-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக தன்னுடைய சாம்ராஜ்யத்தை அசைக்க முடியாத அளவுக்கு தக்க வைத்துக் கொண்டு இருந்தார்.

கண்ணில் திமிர், கர்வம் எத்தனை பெரிய நடிகராக இருந்தாலும் என்னுடைய உலகில் நான் ராணி தான் என ஒருவித கர்வமான பெண்மணியாக வாழ்ந்து கொண்டு இருந்தார் சில்க் ஸ்மிதா.

புகழின் உச்சத்தில் இருந்து வந்த சில்க் ஸ்மிதா கடந்த 1996 இல் சென்னையில் உள்ள அவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் பிணமாக தற்கொலை செய்யப்பட்டு கண்டெடுக்கப்பட்டார்.

காதல் முறிவு… கடன் தொல்லை:

அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகி யாராலும் நம்ப முடியாத அளவுக்கு வியப்பை ஏற்படுத்தியது.

நடிகையாக இருந்து தயாரிப்பாளராக முயற்சித்து வந்த சில்க் ஸ்மிதா அதனால் பல லட்சம் கடன் ஏற்பட்டு மிகுந்த மன வேதனைக்கு உள்ளாகியதோடு காதல் தோல்வியால் ஏற்பட்ட மனம் முறிவால் குடிப்பழக்கத்திற்கும் ஆளாகினார் .

இப்படி ஏகப்பட்ட பிரச்சனைகள் ஒரே நேரத்தில் அவரை சூழ்ந்து கொண்டதால் அதிலிருந்து விடுபட முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் கூறுகிறது. இருந்தாலும் இவரது மரணத்தை சுற்றி பல சர்ச்சைகள் இன்று வரை நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது.

இந்த நிலையில் சில்க் ஸ்மிதாவின் மரணம் குறித்தும் அவரது வாழ்வை பற்றியும். சில்க் ஸ்மிதாவின் நெருங்கிய தோழியும் நடிகையும் ஆன அனுராதா சமீபத்தை பேட்டி ஒன்றில் நடிகை சில்க் ஸ்மிதா குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
யாரையும் நம்பாத சில்க்:

சிக்ஸ் சுமிதாவுக்கு மிகவும் பெஸ்ட் பிரண்ட் அப்படின்னு யாருமே கிடையாது. நாங்கலாம் ஜஸ்ட் பிரிண்ட் அவ்வளவு தான். அவங்க அவ்ளோ கிளோஸா யாரையும் வச்சுக்க மாட்டாங்க.

நானும் டிஸ்கோ சாந்தி மற்றும் சில்க் ஸ்மிதா இவங்க எல்லாம் பிரண்ட்ஸா இருந்தோம். ரொம்ப நெருங்கிய தோழி நெருங்கிய நண்பர்கள் அப்படின்னு சில்க் ஸ்மிதாவுக்கு யாருமே கிடையாது.

ஏனென்றால் அவர்கள் யார் கிட்டயும் ரொம்ப க்ளோசா இருக்க மாட்டாங்க. ரொம்ப சீக்ரட்டான விஷயத்தை யார்கிட்டயும் பகிர்ந்துக்கவே மாட்டாங்க.

ஏனென்றால் அவங்கள பார்த்தாலே நிறைய பேர் பயந்து நடுங்கியது தான் எனக்கு ஞாபகம் இருக்கு. அவங்க நேர்ல போனா ரொம்ப டெரரா நடந்துக்குவாங்க. அதனால நேர்ல போய் பேசவே நிறைய பேர் பயப்படுவாங்க.

அதனால அவங்களுக்கு நட்பு வட்டாரம் மிகக் குறைவு. ஆனால் சில்க் ஸ்மிதாவின் உண்மையான குணம் எது அப்படின்னு கேட்டீங்கன்னா ரொம்ப குழந்தை தனமா தான் எல்லார் கிட்டயும் பழகுவாங்க.

சில்க் ஸ்மிதாவை பாக்குறவங்களுக்கு ரொம்ப ரூடா டெரரா அப்படி தான் தெரியும். சில்க் ஸ்மிதாவிற்கு சப்போர்ட்டுக்கு யாருமே இல்ல. அதனால அவங்கள பாதுகாத்துக்கொள்ள தன்னை சுத்தி ஒரு வட்டம் போட்டுக்கிட்டாங்க .

ஆதரவு கொடுக்க யாரும் இல்ல… வேதனைப்பட சில்க்:

சினிமாவில பல பிரச்சினைகள்…மோசமான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்பதால் யாரையும் கிட்டவே நெருங்க விடல .

நெருக்கமாக பழகவும் அவங்க விரும்பல. ஒரு கூண்டில் அடைக்கப்பட்ட கிளி மாதிரி தனிமையிலே இருந்து வந்தார் சில்க்.

சினிமா இண்டஸ்ட்ரியல் ஒரு அளவுக்கு அவரிடம் நெருக்கமாக பழகியவர்களுக்கு மட்டும்தான் அந்த சின்ன சின்ன விஷயங்கள் கூட தெரியும். மற்ற யாருக்கும் சிலுக்கு சுமிதாவை பற்றி அவ்வளவு பெரிதாக தெரியாது.

அவங்களுக்கு ஃபேமிலி சைடும் பெரிசா சப்போர்ட் இல்ல. அவங்க ஒரு ஆளா தான் தன்னோட குடும்பத்தையும் தூக்கி பிடித்து நிறுத்தினாங்க.

அடிமட்ட குடும்பத்திலிருந்து பிறந்து சென்னைக்கு வந்து மிகவும் கஷ்டப்பட்டு நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார்.

அவள் இறந்து போவதற்கு முன்னாடி நாள் எனக்கு போன் பண்ணி நைட்டு கொஞ்சம் வீட்டுக்கு வர முடியுமா?உன்கிட்ட கொஞ்சம் பேசணும் என்று கூப்பிட்டால்.

சில்க் இறப்பதற்கு முன் நாள்….

அந்த ராத்திரியில் என்னால் போக முடியவில்லை. என்னுடைய குழந்தைகள் எல்லாரும் தூங்கிட்டு இருக்காங்க நான் வேண்டுமானால் காலையில வரட்டுமா என்று கேட்டேன்.

அதற்கு அவர் சரி காலையிலே வா என்று சொன்னால். நான் விடிய காலையில் எழுந்து கிளம்புவதற்குள் டிவியை பார்த்தால் அவள் தற்கொலை செய்து விட்டு இறந்து விட்டால் என செய்தி பரப்பாக பேசப்படுகிறது.

அதை பார்த்ததும் எனக்கு பேரதிர்ச்சி ஆக்கிவிட்டது. உடனடியாக அவளது வீட்டுக்குப் சென்று போய் பார்த்தோம்.

பிணவறையில் சில்க் உடல்:

கோடான கோடி ரசிகர்கள் அவளது அழகில் மயங்கி திரையில் பார்த்து ரசித்து இருப்பார்கள். ஆனால் அன்று சில்க் ஸ்மிதாவின் உடல் மருத்துவமனையில் பிணவறையில் ஈ, எறும்பு மொய்த்துக்கொண்டு மிகவும் மோசமான கோரமான நிலையிலில் இருந்ததை பார்த்து எங்கள் மனசு கேட்கவே இல்லை.

அப்படி ஒரு நிலைமை யாருக்கும் வரக்கூடாது என நடிகை அனுராதா அந்த பேட்டியில் கூறியிருந்தார். அவள் எப்படி தற்கொலை செய்து கொண்டிருப்பாள் என்று எங்களால் நம்பவே முடியல.

மிகவும் தைரியமான பெண் அவளெல்லாம் அப்படி செய்வதற்கு சாத்தியமே இல்லை. எனக்குள்ள இன்னைக்கு வரைக்கும் ஒரே ஒரு குற்ற உணர்ச்சி இருக்கு.

அவள் என்னை கூப்பிட்ட அந்த இரவே நான் அவளை சென்று பார்த்திருந்தால் ஒருவேளை தற்கொலை செய்து கொள்ளாமல் இருந்திருப்பாள் என்ற எண்ணம் தான் எனக்குள் இருக்கு.

அவள் அடிக்கடி ஒன்றே ஒன்றுதான் சொல்லுவார் உங்களுக்கு எல்லாம் அம்மா இருக்காங்க நீங்க நடிக்கிற பணத்தை வைத்து நகை வாங்குறாங்க, இடம் வாங்குறாங்க உங்களுக்குனு நிறைய சேஃப்டி பண்றாங்க.

சாந்தி மற்றும் அனுராதா உங்க ரெண்டு பேருக்கும் உங்களோட குடும்பம் நல்லா பாத்துக்கிறாங்க. ஆனால், எனக்கு அப்படி யாருமே இல்ல.

என்னை வழிநடத்தி செல்ல யாரும் இல்லை என்று சொல்லி வேதனைப்படுவாள். அது மட்டும் தான் அவங்க வேதனைப்பட்ட விஷயம்.

அதை தவிர்த்து நான் திருமணம் செய்யவில்லையே நான் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என்றெல்லாம் அவள் பீல் பண்ணதே கிடையாது என நடிகை அனுராதா சில்க் ஸ்மிதா உடனான நட்பு உறவை குறித்து வெளிப்படையாக பேசினார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version