TNPSC Group 4 தேர்வு முடிவுகள் என்னாச்சு..! – முறைகேடு நடக்கிறதா..? – நாம் தமிழர் சீமான் கேள்வி..!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ( TNPSC Group 4 ) தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியாகாமல் இருப்பதற்கு என்ன காரணம்..? இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகின்றது.. எனவேதான் திட்டமிட்டு தேர்வு முடிவை வெளியிடுவதில் காலம் தாழ்த்தி வருகிறார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் அமைப்பாளர் சீமான் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் காலியாக இருக்கக்கூடிய 7,301 பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டது.

கிட்டத்தட்ட 18 லட்சம் தேர்வாளர்கள் இந்த தேர்வை எழுதினார்கள். ஆனாலும் இந்த தேர்வின் முடிவை வெளியிடாமல் தொடர்ந்து எழுத்தெடுத்து வருவதால் தேர்வாளர்கள் பெருத்த மன உளைச்சலில் இருக்கிறார்கள்.

தமிழக அரசு பணியாளர்கள் தேர்வாணையம் தேர்வு முடிவுகளை அக்டோபர் மாதம் வெளியிடுவதாக அறிவித்திருந்தார்கள். ஆனால் பெண்கள் இட ஒதுக்கீடு தொடர்பாக நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் காரணமாக தேர்வு முடிவுகளை தள்ளிப் போட்டது.

தேர்வாணையம் பின்னாடி டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என்று கூறினார்கள் அப்போதும் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியிடுவதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்கள்.

பிப்ரவரி மாதம் தொடங்கி பாதி மாதம் முடிந்து விட்ட நிலையில் இதுவரை எப்போது தேர்வு முடிகள் வெளியாகும் என்ற தகவல் கூட வெளியாகவில்லை. போகிற போக்கினை பார்த்தால் தேர்வாணையம் தேர்வு முடிவுகளை வேண்டுமென்றே காலதாமதம் செய்கின்றன என்று தோன்றுகிறது.

யாருடைய உத்தரவின் பெயரில் அல்லது யாரின் உத்தரவுக்காக இந்த தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. இடையில் அரசு பணியில் முறைகேடுகள் செய்வதற்காகவே இத்தகைய கால தாமதம் செயற்கையாக ஏற்படுத்தப்படுகிறது என்றும் சீமான் குற்றம் சாட்டியிருக்கிறார்.

தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து இலட்சக்கணக்கான இளைஞர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இதனை கண்டு கொள்ளாத திமுக அரசு அவர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவது எந்த வகையில் நியாயமாக இருக்கும் தேர்வு முடிவுகளை வெளியிட்டு விட்டால் அவர்கள் அடுத்த வேலையை பார்ப்பார்கள்.

ஆனால் திமுக அரசுகளுக்கு என்ன பதில் கூறப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இரவு பகல் பாராமல் கடின உழைப்பினை செலுத்தி படித்து தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வு முடிவு தெரியாமலும் வேறு வேலைக்கு செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர்.

எனவே அரசு பணியாளர் தேர்வாணையம் நடந்து முடிந்த குரூப்-4 தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட உத்தரவு தெரிவிக்க வேண்டும் என்று சீமான் தன்னுடைய அறிக்கையில் வலியுறுத்தி இருக்கிறார்.

Summary in English : In response to the delay of TNPC Group 4 Results held in 2022, Seeman has released a statement. He has expressed his disappointment with the delay and outlined steps taken by TNPC to ensure that the results are released soon. Seeman also mentioned there is any chance of any irregularities taking place to that such delays happening. This statement is a clear indication of Seeman’s commitment towards ensuring fairness and transparency in the examination system.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version