பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின் பெயர் எல்ஐசி. அதாவது லவ் இன்சூரன்ஸ் கார்பரேஷன். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். பிரதீப் ரங்கநாதனின் அக்காவாக நயன்தாரா நடிக்கிறார். இதில் எஸ்ஜே சூர்யா, யோகிபாபு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
இந்த படத்தை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் டைரக்ட் செய்கிறார்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ எஸ்எஸ் லலித்குமார் தான் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்துக்காக பிரதீப் ரங்கநாதன் ரூ. 15 கோடி சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. அவரே இயக்கி, நடித்த லவ்டுடே படத்துக்கு பிறகு அவர் நடிக்கும் முதல் படம் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே எல்ஐசி என்ற பட டைட்டிலை தயாரிப்பாளர் தமிழ்குமரன் பதிவு செய்து வைத்துள்ள நிலையில், பிடிவாதமாக அதே டைட்டிலை விக்னேஷ் சிவனும் வைத்திருப்பது ஒரு தனி டிராக்கில் அந்த பஞ்சாயத்து ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்த டைட்டிலை தான் படத்துக்கு வைப்பேன் என ஒற்றைக்காலில் நிற்கிறார் விக்னேஷ் சிவன்.
இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனின் அக்காவாக நயன்தாரா நடிப்பது பலருக்கும் ஆச்சரியத்தை தந்துள்ளது. எனினும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் இயக்கும் படம் என்பதால், இந்த படத்தில் அவருக்கான முக்கியத்துவம் இருக்கும் என்பதால், அதுபற்றிய சர்ச்சைகளும் முடிவுக்கு வந்துள்ளன.
இந்நிலையில் இந்த படத்தில் நயன்தாரா, பிரதீப் ரங்கநாதனும் அக்கா, தம்பியாக நடிக்கும் நிலையில் அவர்களது தந்தையாக விவசாயி கேரக்டரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் இயக்குநர், நடிகர் சீமான் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர் ஏற்கனவே நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் குறித்து கேட்டதற்கு கிண்டலாக பதிலளித்தவர் என்ற நிலையில், அந்த கேரக்டரில் இவர் நடிக்க வேண்டுமா என்ற பஞ்சாயத்து, விக்கி – நயன் இடையே ஓடிக்கொண்டு இருக்கிறது. சீமான் நுழைந்த இடத்தில் சண்டை, சச்சரவுகளுக்கு என்றுமே பஞ்சம் இருக்காது என பலரும் கலாய்த்த வருகின்றனர். சீமானுக்கு பதில் சத்யராஜை நடிக்க வைக்கலாம். பல படங்களில் அவர்தான் என் தந்தையாக நடித்து, சென்டிமெண்டாக அந்த படங்களும் பெரிய வெற்றி பெற்றிருப்பதாக நயன்தாரா, விக்கியிடம் வாக்குவாதம் செய்து வருகிறார். ஆனால், விக்கி அசைந்து கொடுப்பதாக தெரியவில்லை.