விஜய்யுடன் கூட்டணி.. யாரும் எதிர்பார்க்காத பதிலை கொடுத்த சீமான்..!

தமிழ் திரை உலகில் உச்சகட்ட நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் சமீபத்தில் அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்து அதற்கு தமிழக வெற்றி கழகம் என்ற பெயரினை கொடுத்து 2026 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார்.

இதனை அடுத்து தமிழக அரசியல் களத்தில் ஒரு மாற்று அணியை எதிர்பார்த்து காத்திருக்கும் மக்கள் அனைவரும் தளபதி விஜய்க்கு பெருத்த ஆதரவை தந்த வண்ணம் இருக்கிறார்கள்.

விஜயுடன் கூட்டணியா..

இந்நிலையில் சில அரசியல் கட்சிகளை சார்ந்த பிரமுகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகைச் சார்ந்தவர்கள், சாமானிய மக்கள் என அனைவருமே விஜய் தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு ஆதரவு தருவதோடு வாக்குகளை அளிப்போம் என்று கூறி இருக்கிறார்கள்.

ஏற்கனவே இது போல பல திரை பிரமுகர்கள் அரசியலில் களம் கண்ட நிலையில் ஆட்சியில் அமர்வதற்கும், மக்களுக்கு வேண்டியதை விருப்பம் போல் செய்வதற்கும் முயற்சி செய்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

எனினும் அது போன்ற கட்சிகள் சிறப்பாக செயல்படாத நிலையில் தற்போது தளபதி விஜய் ஆரம்பித்து இருக்கும் இந்த கட்சியானது பல்வேறு வித திட்டங்களை கொண்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து தளபதி விஜய் தமிழகத்தில் இருக்கும் குக் கிராமங்களுக்கு நடைப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள மக்களின் தேவைகளை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதாக செய்திகள் வெளி வந்தது.

சீமான் தந்த பதில்..

இந்நிலையில் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கும் விஜயின் தமிழக வெற்றி கழக கட்சிக்கும் இடையே என்னென்ன ஒற்றுமைகள் மற்றும் வேற்றுமைகள் உள்ளது என்று அக்கு வேர் ஆணி வேராக பிரித்து அறியப்பட்டது.

அதனை அடுத்து இரண்டு கட்சிகளுமே பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வாசகத்தைக் கொண்டிருப்பதோடு அனைத்து தரப்பு மக்களுக்கும் ஜாதி பேதம் இல்லாமல் அனைத்தும் கிடைக்க போராடக்கூடிய அரசியல் அமைப்பாக உள்ளது.

இந்நிலையில் தேர்தல் சமயத்தில் நடிகர் சீமான் நடிகர் விஜயின் கட்சியோடு கூட்டணி அமைத்துக் கொள்வாரா? என்பதற்கான கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் இந்த தேர்தலில் அதற்கு வாய்ப்பில்லை ராஜா என்று கூறியதோடு 2026 ஆம் ஆண்டு தேர்தலில் ஒரு வேளை தம்பி ஓகே சொன்னா நான் ரெடி என்ற ரீதியில் பட்டும் படாமலும் நடிகர் சீமான் அண்மை பேட்டியில் பேசி இருக்கிறார்.

மேலும் பிரபலமாக இருக்கும் தளபதி விஜய் பேசும் போது தன்னைவிட பல மடங்கு தமிழக மக்களிடையே அது ரீச் ஆகும். அதற்கு உதாரணமாக தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவுக்கு 10 நாட்கள் கிட்டத்தட்ட அங்கு இருந்து நான் நிவாரண பொருட்களை கொடுத்து மக்களுக்கு உதவி செய்தேன்.

அதுபோலவே நடிகர் விஜய்யும் ஒரு நாள் தென் மாவட்ட பகுதிகளுக்கு சென்று நிவாரண பொருட்களை கொடுத்து உதவி இருக்கிறார். எனவே 2026 ஆம் ஆண்டு முழுமையாக அரசியலில் களம் குதிக்கும் போது தளபதி விஜய்க்கு தோள் கொடுக்க நாங்கள் தயார்.

தம்பி விஜய் விரும்பினால் அவரோடு கூட்டணி வைத்துக்கொண்டு மக்கள் பணியை இணைந்து செய்ய நாங்கள் காத்திருக்கிறோம் என்ற பாணியில் யாரும் எதிர்பார்க்காத பதிலை சீமான் கொடுத்திருக்கிறார்.

இதனை அடுத்து இந்த எதிர்பாராத பதிலை கேட்ட ரசிகர்கள் அனைவரும் சீமானும், நடிகர் விஜய்யும் இணைந்து களம் காண்பதால் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்பதை உறுதியாக நம்புவதாக தெரிய வந்துள்ளது.

மேலும் இளைஞர்கள் அனைவருமே விஜயின் பக்கம் நிற்பதாலும் இயக்குனர் சீமானுக்கும் அதுபோல ஒரு தொண்டர் படை இருப்பதாலும் இருவரும் ஒன்றிணைந்தால் ஜில்லா மாஸாக இருக்கும் என பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version