நீயுமாடா..? மூன்றாவதாக ஒருவரை நம்பி ஏமாந்த நடிகை சீதா..! – அவரே வெளியிட்ட வீடியோ..!

1980-களில் தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகை சீதா பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். தமிழ் திரைப்படம் மட்டுமல்லாமல் சீரியல்களிலும் நடித்து இருக்கக்கூடிய இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மாடித்தோட்டம்…

நடிகை சீதா தனது அற்புத நடிப்பை ஆண் பாவம், உன்னால் முடியும் தம்பி, வெற்றி மேல் வெற்றி, மருதுபாண்டி, பாரிஜாதம், புதிய பாதை, வியாபாரி, ஆயிரம் பூக்கள் மலரட்டும் போன்ற படங்களில் சிறப்பாக வெளிப்படுத்துகின்றார்.

இவர் நடிகர் பார்த்திபனை புதிய பாதை திரைப்படத்தில் நடித்த போது காதலித்து வந்திருக்கிறார். இதனை அடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். எனினும் கருத்து வேற்றுமை ஏற்பட்டதை அடுத்து விவாகரத்து பெற்று விட்டார்கள்.

இந்நிலையில் தற்போது தனித்து வசித்து வரும் சீதா தன் வீட்டு மாடி தோட்டத்தில் பல விதமான செடிகளை வளர்த்து வருவதோடு மட்டுமல்லாமல் அது குறித்து அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை வெளியிட்டு மாடித்தோட்டத்தின் அவசியத்தை உணர்த்துவார்.

இன்றைய காலகட்டத்தில் மாடித்தோட்டத்தில் விளைகின்ற காய்கறிகளை நம் வீட்டில் உணவாக பயன்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமான முறையில் வாழலாம்.

குறிப்பாக இன்று காய்கறி விளைச்சலில் அதிகளவு செயற்கை உரங்கள் பயன்படுத்தப்படுவதால் அனைத்து பண்டங்களுமே நச்சு நிறைந்ததாக கருதப்படுகிறது.

எனவே நாம் இருக்கும் இடத்தில் ஒரு தோட்டத்தை அமைத்து அதில் இருக்கக்கூடிய காய்களை சமைகளுக்கு பயன்படுத்துவதன் மூலம் நஞ்சில்லாத உணவினை எளிதில் பெற முடியும். அதற்கு இந்த மாடி தோட்டத்தில் விளையும் காய்கறிகளின் பங்கு அளப்பரியது.

கிராமங்கள் அல்லாமல் இன்று நகரங்கள் தோறும் மாடி தோட்டங்கள் அதிகரித்து வருவது நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய வகையில் அமையும்.

நீயுமாடா என்ன ஏமாத்திட்ட..

அந்த வகையில் அண்மையில் நடிகை சீதா தனது இல்ல மாடி தோட்டத்தில் சர்க்கரைவள்ளி கிழங்கை பயிர் செய்து இருக்கிறார். ஆனால் இவர் எதிர்பார்த்த விளைச்சலை அந்த செடி கொடுக்கவில்லை.

இதனை அடுத்து நீயும் மாடா என்ன ஏமாத்திட்ட.. என்று தன்னுடைய தோட்டத்தில் இருக்கும் சர்க்கரைவள்ளிக்கு கிழங்கு செடியிடம் வருத்தப்படும் நடிகை சீதாவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாடி தோட்டத்தில் பல்வேறு காய்கறிகளை வளர்த்து வரும் நடிகை சீதா சர்க்கரைவள்ளி கிழங்கை பயிரிட்ட போது அது ஒரே ஒரு கிழங்கினை மட்டுமே கொடுத்திருக்கிறது. இவர் இந்த செடி அதிக அளவு கிழங்குகளை தரும் என்று எதிர்பார்த்த இவருக்கு ஏமாற்றம் மிஞ்சியது.

அந்த வகையில் இவர் கிழங்கினை தோண்டி பார்த்த போது ஒரே கிழங்கு இருந்தது இவருக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்ததால் சீதா நீயுமாடா என் வாழ்க்கையில வந்து ஏமாத்திட்ட.. என்று அவனிடம் செல்லமாக கோபப்படுகிறார்.

ஏற்கனவே நடிகை சீதா நடிகர் பார்த்திபன் மற்றும் நடிகர் சதீஷ் ஆகிய இருவரையும் திருமணம் செய்து விவாகரத்து செய்தவர். இந்த நிலையில் இவர்கள் இருவரையும் ஜாடை மாடையாக சுட்டிக்காட்டும் விதமாகத்தான் நீயுமாடா என்னை ஏமாத்திட்ட.. என்று சர்க்கரை வள்ளிக்கிழங்கிடம் கோபித்துக் கொள்ளும் வீடியோ காட்சிகள் தற்போது இணையம் முழுவதும் பரவி வருகிறது.

இதனை அடுத்து இந்த வீடியோவை ரசிகர்கள் அதிக அளவு பார்த்து சீதாவிற்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். அடுத்த முறை பயிர் செய்யும் போது கட்டாயம் அதிக அளவு கிழங்குகளை கொடுக்கும். இது முதல் முறை நீங்கள் செய்த முயற்சி தானே என்று ஆறுதல் கூறி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam