அந்த விஷயத்தில் அவரு.. இது கூட இல்லனா நான் எதுக்கு பொண்டாட்டி..! விவாகரத்து குறித்து சீதா ஓப்பன் டாக்..!

80-களில் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்த நடிகை சீதா குறுகிய காலத்திலேயே அதிக அளவு படங்களில் நடித்து முன்னணி கதாநாயகி அந்தஸ்தை அடைந்தார்.

இவர் தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மொழிகளில் அதிக அளவு நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

நடிகை சீதா..

பார்க்கும்போதே தெய்வீகதன்மையோடு இருக்கின்ற நடிகை சீதா ரசிகர்களின் மனதில் கனவு நாயகியாக திகழ்ந்தவர். ஆண் பாவம், உன்னால் முடியும் தம்பி, வெற்றி மேல் வெற்றி, மருதுபாண்டி, ஆயிரம் பூக்கள் மலரட்டும், பாரிஜாதம், புதிய பாதை, ஆதி, வியாபாரி போன்ற பல தமிழ் படங்களில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தியவர்.

இதனை அடுத்து புதிய பாதை படத்தில் நடிக்கும் போது இவருக்கும் இயக்குனர் பார்த்திபனுக்கும் காதல் ஏற்பட்டதை அடுத்து பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டு ஜெயித்து காட்டுவோம் என்று கூறினார்கள்.

ஆனால் ஆரம்பத்தில் இவர்களது வாழ்க்கை தேனாய் தித்தித்தது. நாள் செல்ல செல்ல இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமையை அடுத்து விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள். இவர்களுக்கு அபிநயா, கீர்த்தனா என்ற இரண்டு மகள்கள் இருந்தார்கள்.

எதுக்கு பொண்டாட்டி..

மேலும் நடிகை சீதா பார்த்திபனை பிரிந்தது குறித்து பல்வேறு விதமான சர்ச்சைகள் மற்றும் கிசுகிசுக்கள் எழுந்தது. அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத சீதா மீண்டும் மறுமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணத்திலும் இரண்டாவது கணவரோடு சேர்ந்து வாழ முடியாமல் விவாகரத்து பெற்று விட்டார்.

இதனை அடுத்து தற்போது தனித்து வசித்து வரும் இவர் மீண்டும் பார்த்திபனோடு இணைந்து வாழ்வதற்கு விருப்பத்தை தெரிவித்த நிலையில் அதை பார்த்திபன் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது பரவலாக இணையங்களில் வெளி வந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

இந்நிலையில் தற்போது இவர் பார்த்திபனை விட்டு விலகி விவாகரத்திற்கு அப்ளை செய்த காரணத்தை பற்றி ஓப்பனாக பேசி இருக்கும் விஷயமானது இணையத்தில் அதிகளவு ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.

மேலும் தனது விவாகரத்து பற்றி கூறும் போது தனது கணவரிடம் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்ததாக பலர் கருதுகிறார்கள். ஆனால் அது எப்படிப்பட்ட எதிர்பார்ப்பு தெரியுமா? என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் என்று நடிகை சுகாசினி ஒரு படத்தில் பாடல் ஒன்றை பாடுவார்.

இந்தப் பாடல் ஆனது எல்லா பெண்களுக்குமே பொருந்தக்கூடிய வகையில் தான் இருக்கும். எந்த ஒரு பெண்ணிற்கும் தன் கணவன் மீது அதீத அன்பு இருப்பதோடு மட்டுமல்லாமல் தன் மீது அவர் அதிகளவு அன்பு செலுத்த வேண்டும் என்று நினைப்பார்கள்.

இதைத்தான் நான் பார்த்திபன் மீது வைத்திருந்த அதிகபட்ச எதிர்பார்ப்பு. இது கூட இல்லை என்றால் நான் எதற்கு பொண்டாட்டியாக இருக்க வேண்டும், மற்றபடி அவர் மீது நான் எந்த ஒரு எதிர்பார்ப்பையும் வைக்கவில்லை ஆனால் இதை ஊடகங்கள் திரித்து நான் அதை எதிர்பார்த்தேன், இதை எதிர்பார்த்தேன் என்று அவர்கள் இஷ்டத்துக்கு எழுதி தள்ளுகிறார்கள்.

ஆனால் உண்மை அது கிடையாது. இது தான் என்று வெளிப்படுத்திய சீதாவின் அண்மை பேட்டி அனைவரையும் திகைக்க வைத்துள்ளது. இந்நிலையில் பல ரசிகர்கள் நடிகை சீதா பார்த்திபனை பிரிவதற்கு இதுதான் காரணமா? என்று அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam