“இதுக்கு மேல அது தெரிய நடிச்சா அவ்ளோ தான்..” சீதாவுக்கு வார்னிங் கொடுத்த இயக்குனர் சிகரம்..!

தமிழ் சினிமாவில் நடித்த பல நடிகைகளில் சில நடிகைகளுக்கு மட்டுமே எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல மரியாதை இருக்கும்.

ஏனெனில் அவர்கள் நடித்த படங்களில், நடித்த கேரக்டர்களில் மக்களின் மனங்களை வெகுவாக கவர்ந்திருப்பர்.

குறிப்பாக கவர்ச்சி என்ற பெயரில் ஆபாசமாக நடிக்காத சில நடிகைகளை பெண்கள் மிகவும் விரும்புவர். அதே போல் ஆண்களும் அதுபோன்ற குடும்ப பாங்கான தோற்றத்தில் நடிக்கும் நடிகைகளை வெகுவாக ரசிப்பதுண்டு.

கவர்ச்சி காட்டாத நடிகைகள்…

குறிப்பாக நடிகை சரிதா, எந்த படத்திலும் கவர்ச்சியாக நடிக்காதவர். நடிகை ரேவதி, நதியா, சுகாசினி, ஊர்வசி போன்றவர்களும் கவர்ச்சியாக நடித்தவர்கள் இல்லை.

சினிமா வாய்ப்புக்காக கவர்ச்சியாக நடிப்பதை தவிர்க்க முடியவில்லை என்று இன்றைய முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.

ஆனால் கடந்த 1980, 90களில் நடிகைகளின் கவர்ச்சியை நம்பாமல், அவர்களது நல்ல நடிப்பை நம்பி படம் எடுத்த டைரக்டர்களும் இருந்தார்கள் என்பதுதான் மாபெரும் உண்மை.

படத்தில் நடிக்க விருப்பமில்லை

சரிதா, ரேவதி, நதியா, சுகாசினி, ஊர்வசி போன்றவர்களும் தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் அதிக படங்களில் நடித்தவர்கள்தான்.

அவர்களால் மட்டும் எப்படி கவர்ச்சி காட்டாமல் சினிமாவில் நீடித்து நிற்க முடிந்தது என்றால், கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்.

அப்படி நடிக்க வேண்டும் என்றால் உங்கள் படத்தில் நடிக்க எனக்கு விருப்பமில்லை என்று நேரடியாக சொல்லி விடுவார்கள்.

அவர்களை பொருத்த வரை படத்தில் நடிக்க வாய்ப்பு என்பதை விட, நல்ல கேரக்டரில் மட்டுமே நடிப்பது குறிக்கோளாக இருந்தது.

ஆனால் இன்று நடிக்க வாய்ப்பு மட்டும் தந்தால் போதும், டூ பீஸ் உடையில், படம் முழுவதும் நடிக்க தயாராக இருக்கிறேன் என்கின்றனர் சில முன்னணி நடிகைகள்.

குறிப்பாக தமன்னா போன்றவர்கள், வெப் சீரிஸ்களில் படுக்கையறை காட்சிகளில் எல்லாம் பின்னி பெடலெடுக்க காரணம், துட்டு மட்டும்தான்.

சீதா

ஆனால் அந்த காலகட்டத்தில் நல்ல நடிகையாக மட்டுமே பெயர் பெற விரும்பிய பல நடிகைகளில் ஒருவர்தான் நடிகை சீதா. பாண்டியராஜன் இயக்கிய ஆண்பாவம் படத்தில் அறிமுகமானார். பாண்டியனுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.

தொடர்ந்து ஆடிவெள்ளி, புதிய பாதை, ராஜ நடை, மல்லுவேட்டி மைனர், தாயம் ஒண்ணு, படிச்ச புள்ள, சங்கர் குரு, உன்னால் முடியும் தம்பி போன்ற பல படங்களில் நடித்தார். புதிய பாதை படத்தில் நடித்த போது, நடிகர் பார்த்திபனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

குரு சிஷ்யன்

ஒரு கட்டத்தில் நடிகை சீதா, குரு சிஷ்யன் என்ற படத்தில் மாடர்ன் கேர்ள் கேரக்டரில் பணக்கார வீட்டு பெண்ணாக நடித்திருப்பார். இதில் ரஜினி, பிரபு, கவுதமி, வினு சக்ரவர்த்தி, ராதாரவி, பாண்டியன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் சில காட்சிகளில் சீதா கவர்ச்சியான மாடர்ன் டிரஸ்களை அணிந்து நடித்திருந்தார். இதுகுறித்த தகவல் இயக்குநர் கே பாலசந்தர் காதுகளுக்கு சென்றது.

கவர்ச்சியா ஏம்மா நடிக்கறே…

இதனால் கோபமடைந்த கே பாலசந்தர், சீதாவுக்கு போன் செய்து பேசியிருக்கிறார். இந்த மாதிரி கவர்ச்சியா எல்லாம் ஏம்மா நடிக்கறே? இப்படி நடிக்கிறது சரி கிடையாது. இனிமேல் இப்படி எல்லாம் நடிக்க கூடாது என்று கூறியிருக்கிறார்.

அதற்கு பிறகு கவர்ச்சியான படங்களில் நடிப்பதை முற்றிலும் தவிர்த்து இருக்கிறார் சீதா.

இதுக்கு மேல் உடம்பு தெரியற மாதிரி நடிச்சா, அவ்வளவுதான் என இயக்குநர் சிகரம் கே பாலசந்தர் வார்னிங் செய்த பிறகுதான், சீதா இப்படி ஒரு தீர்மானமான முடிவை எடுத்து கவர்ச்சியாக நடிப்பதை தவிர்த்ததாக, ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version