நான் செய்த மிகப்பெரிய தவறு இது.. ஓப்பனாக கூறிய நடிகை சீதா..!

1980 களில் தமிழ் திரைப்படங்களில் அதிக அளவு நடித்த நடிகை சீதா பற்றி அதிகமாக பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவர் நடித்த படங்கள் ஒவ்வொன்றும் மாஸ் கிட்டை தந்ததை அடுத்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறார்.

இவர் தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து அசத்தியிருக்கிறார். மேலும் தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகர்களாக இருக்கக்கூடிய அனைவரோடும் ஜோடி போட்டு நடித்தவர்.

நடிகை சீதா..

தமிழ் திரை உலகில் ஆண்பாவம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சீதா, உன்னால் முடியும் தம்பி படத்தில் கமலஹாசனோடு இணைந்து நடித்து தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் வெற்றி மேல் வெற்றி, மருதுபாண்டி, ஆயிரம் பூக்கள் மலரட்டும், பாரிஜாதம், புதிய பாதை, ஆதி, மதுரா, வியாபாரி போன்ற படங்களில் நடித்து தமிழ் திரை உலகில் அசைக்க முடியாத நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார்.

இவர் புதிய பாதை என்ற படத்தில் நடிக்கும் போது அந்த படத்தின் இயக்குனர் மற்றும் நடிகரான பார்த்திபன் மீது காதல் ஏற்பட்டு குடும்பத்தாரின் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

மேலும் இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருந்து வந்த நிலையில் பார்த்திபனுக்கு திருமணத்திற்கு பிறகு நடிக்க கூடாது என்ற எண்ணம் இருந்ததால் திரை உலகை விட்டு விலகி குடும்பத்தை மட்டும் கவனித்து வந்த சீதா இடையில் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக பார்த்திபனை விட்டு விலகி விவாகரத்து பெற்று விட்டார்.

திருமணத்திற்குப் பின் செய்த பெரிய தவறு..

இந்நிலையில் மீண்டும் இவர் சின்னத்திரை சீரியல் நடிகரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள அந்த திருமணமும் செட்டாகாமல் போனதை அடுத்து அவரிடமும் விவாகரத்து பெற்று தனித்து வாழ்ந்து வருகிறார்.

மேலும் இந்த சமுதாயத்தில் வாழக்கூடிய யாராக இருந்தாலும் அவர்களுக்கு என்று ஒரு தனி இடம் இருப்பது மிகவும் அவசியம். அந்த இடத்தை யாருக்காகவும் விட்டுக் கொடுக்கக் கூடாது. தான் படு பிஸியாக இருந்த சமயத்தில் தான் பார்த்திபனை திருமணம் செய்து கொண்டு தனக்கு என்று கிடைத்த தனி இடத்தை தக்க வைத்துக் கொள்ளாமல் விட்டு விட்டதால் தற்போது அந்த இடத்தை பிடிக்க முடியாமல் திணறி வருவதாக கூறியிருக்கிறார்.

மேலும் திருமணத்திற்கு பிறகு வேலையை விடுவது, இது போன்ற செயல்களை செய்வதற்கு முன்பு யோசிப்பது அவசியம். அப்படி நம்முடைய இடத்தை நாம் வேண்டாம் என்று விடுவதால் எந்த பயனும் இல்லை. இதனை தற்போது அவர் உணர்ந்து இருப்பதாக கூறியிருக்கிறார்.

மேலும் திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் நடிப்பதை விட்டு விலகியதை தான் செய்த மிகப்பெரிய தவறு அது தான் என்பதை தற்போது சுட்டிக்காட்டி இருப்பதோடு இதைப் பற்றி ஓப்பனாக நடிகை சீதா பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

இந்த பேச்சானது தற்போது இணையத்தில் வைரலாகி பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது. இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் அவர் கூறிய பேச்சில் உண்மை உள்ளது என்பதை ஆமோதித்து இருக்கிறார்கள்.

எதற்காகவும் எந்த சூழ்நிலையிலும் தனக்கு கிடைத்த அங்கீகாரத்தை யாரும் விட்டுத் தர வேண்டாம் என்பதை நடிகை சீதா பூடகமாக உணர்த்தி இருக்கிறார் என்றும் கூறியிருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version