ரெண்டு பேருக்குமே இது இருந்துச்சு.. ஆனால்.. இது பொய்.. பார்த்திபன் பிரிவு குறித்து சீதா ஒரே போடு..!

தமிழ் திரை உலகில் நடிக்கின்ற நட்சத்திரங்கள் பலரும் தன்னோடு இணைந்து நடிக்கின்ற நடிகர் மற்றும் நடிகைகளை காதலித்து திருமணம் செய்து கொள்வது புதிதானது விஷயம் அல்ல. அந்த வகையில் நட்சத்திர தம்பதிகளாக திகழ்ந்த நடிகை சீதா இயக்குனர் பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

எனினும் இவர்களது மண வாழ்க்கை நீண்ட காலம் நிலைத்து நிற்காமல் இருவர் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு மூன்று குழந்தைகளுக்குப் பிறகு பிரிய கூடிய சூழ்நிலை ஏற்பட்டு இன்று பிரிந்து தனித்து வாழ்ந்து வருகிறார்கள்.

நடிகை சீதா..

நடிகை சீதா தமிழ் திரைப்படங்களில் முன்னணி ஹீரோயினியாக வலம் வந்தவர். இவர் நடித்த பெரும்பாலான தமிழ் திரைப்படங்கள் ஒரு மாஸ் வெற்றியை தந்ததை அடுத்து தமிழில் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார்.

ஆரம்ப காலத்தில் சினிமாவில் நடிக்க விருப்பம் இல்லாமல் இருந்த இவர் நாள் செல்லச் செல்ல சினிமாவின் மீது ஆர்வம் கொண்டு நடிக்க ஆரம்பித்தார் என்பது பலருக்கும் தெரியாத விஷயமாக உள்ளது.

அந்த வகையில் இவர் புதிய பாதை என்ற திரைப்படத்தில் நடித்த போது இயக்குனர் பார்த்திபனை சந்திக்க நேர்ந்தது. இந்த படத்தில் தான் இருவருக்கும் இடையே காதல் பூத்தது என்று சொல்லலாம்.

எனினும் இவரது காதலை வழக்கம் போல பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளாததை எடுத்து கடுமையான போராட்டங்களுக்கு பிறகு தான் இவர் பார்த்திபனை வீட்டை விட்டு ஓடி வந்து திருமணம் செய்து கொண்டார்.

இரண்டு பேருக்குமே இது இருந்துச்சு..

இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் நடிகை சீதா இவர்களது காதல் பற்றி சொல்லும் போது இருவருக்குமே காதல் இருந்தது எனினும் அந்த காதலை சொன்னது தான் என்று பேசி இருக்கிறார்.

மேலும் ஒவ்வொரு நாளும் போனில் பேசும் போது அந்த மூன்று வார்த்தைகளை சொல்லச் சொல்லி இவர் வற்புறுத்தியதாகவும் ஆனால் அந்த வார்த்தையை சொல்ல ஏறக்குறைய 10 நாட்களுக்கு மேல் பார்த்திபன் எடுத்துக் கொண்டதாகவும் சொல்லி இருக்கிறார்.

இதனை அடுத்து ஒரு முறை பார்த்திபனோடு பேசிக்கொண்டிருந்த போது ஐ லவ் யூ என்ற அந்த மூன்று வார்த்தைகளை தான் கூறிவிட்டதாக சொன்ன சீதா ஒரு முறை தான் அது போன்று பேசும் போது போனை எனது அப்பா எடுத்துக் கேட்டதை அடுத்து வீட்டில் பிரச்சனை ஏற்பட்டது என்ற உண்மையையும் சொல்லி இருக்கிறார்.

பார்த்திபன் பிரிவு குறித்து சீதா பேச்சு..

இதனை அடுத்து எப்படி மனம் ஒத்த காதலர்களாக இருந்து அதனை அடுத்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்குள் பிரிவு ஏற்பட என்ன காரணம் என்று பல்வேறு வகையான செய்திகள் இணையங்களில் வெளி வந்த போதும் உண்மையான காரணம் இது வரை யாருக்கும் தெரியாது என்று தான் சொல்ல வேண்டும்.

இதனை அடுத்து சீதா தனது காதலை பகிர்ந்த பிறகும் அதை ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலையில் பார்த்திபன் இருந்தாரா என்று யோசிக்க கூடிய வகையில் பேட்டியில் சீதா பேசியிருந்தது பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.

ஏனென்றால் அவர் காதலை ஏற்றுக் கொள்ளக்கூடிய சூழ்நிலையில் இருந்தார் என்று சொல்லுவது பொய் என்பதை அவர் உறுதிபட அந்த பேட்டியில் தெரிவித்திருப்பதை அடுத்து இந்த விஷயத்தை ரசிகர்கள் அனைவரும் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version