வெகு காலங்களாக சூர்யாவின் ரசிகர்களும் பொதுமக்களும் அதிகமாக காத்திருந்த ஒரு திரைப்படமாக கங்குவா திரைப்படம் இருந்து வருகிறது. கங்குவா திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது. அதிக எதிர்பார்ப்புகளை கொண்ட இந்த படத்தின் டிரைலர் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இருந்தது என்றே கூற வேண்டும்.
இந்த ட்ரைலர் வெளியானதை தொடர்ந்து இந்த படத்திற்கு தொடர்ந்து நேர்மறையான விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில் படம் குறித்து பிரபல விமர்சகர் செய்யாறு பாலு சில விஷயங்களை பேசி இருக்கிறார்.
கங்குவா
அதில் அவர் கூறும் பொழுது இந்த கதை 1800 வருடங்களுக்கு முன்பு இரு இன குழுக்களுக்கு இடையே நடந்த கதையை அடிப்படையாகக் கொண்டது. இதை முழு கதையாக தயார் செய்த பிறகுதான் சிறுத்தை சிவா சூர்யாவிடம் சென்று கொடுத்தார்.
ஏனெனில் இந்த கதையை எழுதும் பொழுதே இது அதிகபட்ஜெட் திரைப்படம் என்பது சிறுத்தை சிவாவிற்கு தெரியும். இந்த கதையை முழுதாக படித்த பிறகுதான் சூர்யா இந்த திரைப்படத்திலேயே நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார். அதேபோல அந்த கதையை கேட்ட படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் இது கண்டிப்பாக பெரும் வெற்றியை கொடுக்கும் என்று நம்பினார்.
VFX நொறுக்கிட்டாங்க
இந்த படத்திற்காக கிட்டத்தட்ட 350 கோடி செலவு செய்திருக்கின்றனர். படம் முழுக்க எக்கச்சக்கமான கிராபிக்ஸ் வேலை நடந்து இருக்கிறது. ட்ரெய்லரை பார்க்கும் பொழுது அதில் எங்குமே கிராபிக்ஸ் தனியாக தெரியும் படி இல்லை.
அவ்வளவு நிஜத்தன்மையுடன் கிராபிக்ஸ் வேலைகளை பார்த்திருக்கின்றனர். இந்த படம் கிட்டத்தட்ட பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. தென்கொரியா, பிரான்ஸ் மாதிரியான பல நாடுகளில் இந்த படத்திற்கான விளம்பரத்தை இப்பொழுதே தொடங்கி இருக்கின்றனர்.
சிறுத்தை சிவா படமா இது..?
இன்னும் இரண்டு மாதங்களில் இந்த படம் திரைக்கு வர இருக்கும் நிலையில் இப்பொழுது ட்ரைலரை ஏன் இவ்வளவு சீக்கிரமாக வெளியிட்டார்கள் என்றால் இந்த படத்திற்கு உலக அளவில் இருக்கும் எதிர்பார்ப்பை அதிகரிப்பதற்காகதான் என்கிறார் செய்யாறு பாலு.
மேலும் அவர் கூறும் பொழுது பாபி தியோல் இதில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர் ஏற்கனவே அனிமல் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் மூலமாக தென்னிந்திய மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைந்தார்.
பிறகு அவரே ஒரு பேட்டியில் கூறும் பொழுது இவ்வளவு நாள் தென்னிந்திய மக்களிடம் வரவேற்பு பெறாமல் இருந்தது குறித்து வருத்தப்படுகிறேன். ஒரு படத்திலேயே எனக்கு நல்ல அங்கீகாரத்தை கொடுத்தனர் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் அவருக்கு கங்குவா கண்டிப்பாக சிறப்பான படமாக அமையும் என்று கூறியிருக்கிறார் செய்யாறு பாலு. கங்குவா திரைப்படம் அக்டோபர் 10 வெளியாவதால் வேட்டையன் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி மாற்றி அமைக்கப்படும் என்று பேச்சுக்கள் இருக்கின்றன.