இதனால் ரீமா சென், ஆண்ட்ரியாவை ஆடையின்றி நிற்க வைத்தேன்.. பிரபல இயக்குனர் ஓப்பன் டாக்..!

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் செல்வராகவன். பல படங்களில் அவரது வித்யாசமான சிந்தனைகளை, தனது படங்களாக ரசிகர்களுக்கு தந்திருக்கிறார்.

செல்வராகவன்

செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, நானே வருவேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், நெஞ்சம் மறப்பதில்லை போன்ற பல படங்களை தந்தவர்.

இதில் ஆயிரத்தில் ஒருவன் படம், அவரது படங்களின் வரிசையில் மிக வித்யசமான படமாக இருந்தது. இந்த படத்தில் கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர்.

இயக்குநராக மட்டுமின்றி சமீபமாக செல்வராகவன் நடிகராகவும் மாறி இருக்கிறார். பீஸ்ட், பகாசூரன், பர்ஹானா, மார்க் ஆண்டனி, நானே வருவேன், சாணிக்காயிதம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

7ஜி ரெயின்போ காலனி

செல்வராகவன் இப்போது 7ஜி ரெயின்போ காலனி 2ம் பாகம், புதுப்பேட்டை 2ம் பாகம் ஆகிய படங்களை எடுக்க திட்டமிட்டு, அதில் 7ஜி ரெயின்போ காலனி 2ம் பாகம் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த படத்திலும் ரவி கிருஷ்ணா தான் ஹீரோ. முதல் பாகம் படத்தில் சோனியா அகர்வால் இறந்து விட்டதால், இந்த 2ம் பாகத்தில் அவர் நடிப்பது அவசியமில்லை.

ஆனால் புதுப்பேட்டை 2 படம் எடுக்கும் பட்சத்தில் அதில் கொக்கி குமார் கேரக்டரில் நடித்த தனுஷ் மனைவியாக சோனியா அகர்வால் நடித்திருந்தார்.

அதனால் புதுப்பேட்டை 2 படம் எடுக்கும் பட்சத்தில், சோனியா அகர்வால் அந்த கேரக்டரில் நடிப்பது படத்துக்கு நல்ல இமேஜை தரும்.

ஆனால் சோனியா அகர்வாலும், செல்வராகவனும் திருமணம் செய்துக்கொண்டு பல ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து விட்டனர்.

நடிப்பு என் தொழில்

எனினும், இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த சோனியா அகர்வால், எனக்கு நடிப்பதில் ஒன்றும் ஆட்சேபம் இல்லை. நடிப்பது என் தொழில். என்னை நடிக்க அழைத்தால் கண்டிப்பாக நடிப்பேன், என்று பச்சைக்கொடி காட்டி விட்டார்.

இந்நிலையில், ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஒரு காட்சியில் கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா போன்றவர்களை ஆடையின்றி ஒரு காட்சியில் நடிக்க வைத்தது குறித்து ஒரு நேர்காணலில் அந்த படத்தின் இயக்குநர் செல்வராகவன் கூறியிருக்கிறார்.

அவர் கூறுகையில், புலியை காமிக்கணும்னா அவங்க சட்டையை கழட்டிதானே காமிக்கணும். சட்டையை கழட்டாம காமிக்க முடியாது.

முதல்ல அவங்க எல்லாரையும் செக் பண்ணனும். ஒரு தீபத்தை வெச்சு அவரு எதுக்கு செக் பண்ணாருன்னா, வந்தவங்களுக்கு ஏதாவது நோய் இருந்தா என்னாகறது.

ஆடையின்றி நிற்க வைத்தேன்

ஆல்ரெடி அவங்க எல்லோரும் கஷ்டத்தில் இருக்கிறார்கள். இதுல தொற்று நோய் ஏதும் வந்தால். அந்த அளவுக்கு அவங்க அட்வான்ஸா இருந்துருக்காங்கன்னு சொல்ல வர்றேன், என்று தெளிவுபடுத்தி இருக்கிறார்.

இதனால்தான் ரீமா சென், ஆண்ட்ரியாவை ஆடையின்றி அந்த காட்சியில் நிற்க வைத்தேன் என்று பிரபல இயக்குனர் செல்வராகவன் இந்த நேர்காணலில் ஓப்பனாக கூறியிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version