பெட் ஷீட்டை எடுத்துக்கிட்டு போயிடுறீங்க.. அவ்ளோ காஞ்சி போயிட்டீங்களா?.. மஹா விஷ்ணு சர்ச்சையில் வாய்விட்ட செல்வராகவன்.!

சமீப காலமாகவே சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வரும் ஒரு நபராக மகாவிஷ்ணு  இருந்து வருகிறார். இந்தியாவை பொருத்தவரை இங்கு ஒருவர் சாமியார் ஆக வேண்டும் என்றால் அதற்கு எந்த ஒரு தகுதியும் தேவையில்லை என்கிற நிலை இருக்கிறது.

அதற்கு அரசிடம் சான்றிதழ் பெற வேண்டும் அல்லது அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்று எந்த ஒரு தேவையும் கிடையாது. பெரும்பாலும்  ஒரு அறக்கட்டளை துவங்கி விட்டு தங்களது சாமியார் பணியை பலரும் துவங்கி விடுகின்றனர்.

பெட் ஷீட்டை எடுத்துக்கிட்டு

அப்படி திடீரென்று தற்சமயம் மக்கள் மத்தியில் பிரபலமாகி வரும் சாமியாராக இருந்து வருபவர் மகாவிஷ்ணு. ஆன்மீக வழியின் மூலமாக மக்களை நல்வழிப்படுத்துகிறேன் என்று கூறி பல விஷயங்களை பேசி வருகிறார்.

இந்த நிலையில் ஒரு பெண்கள் அரசு பள்ளியில் இவரை சிறப்பு விருந்தினராக அழைத்து இருந்தனர். அங்கு சென்ற மகாவிஷ்ணு சர்ச்சைக்கு உரிய நிறைய விஷயங்களை பேசி இருந்தார். அதில் அவர் பேசிய பல விஷயங்கள் நம்பத் தகுந்தவையாகவே இல்லை என்று கூறலாம்.

இந்த நிலையில் நாம் போன ஜென்மத்தில் செய்த பாவங்களின் பலனாகதான் அடுத்த பிறவியில் பிறக்கும்பொழுது உடல் ஊனமாகவும் ஏழைகளாகவும் பிறக்கிறோம் என்று ஒரு வாதத்தை முன் வைத்திருந்தார் மகாவிஷ்ணு. இது அங்கு பணிபுரிந்து வந்த மாற்றுத்திறனாளியான ஆசிரியர் ஒருவருக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

காஞ்சி போயிட்டீங்களா

இதனை தொடர்ந்து அவர் மகாவிஷ்ணுவை கேள்வி கேட்க தொடங்கினார் ஆனால் அதற்கு மிக கோபமாக பதில் அளித்து இருந்தார் மகாவிஷ்ணு. இந்த நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக தொடங்கியது. இதனை அடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட பலரும் இந்த விஷயத்தில் ஆசிரியருக்கு ஆதரவாக பேசி இருந்தனர்.

மேலும் மகாவிஷ்ணு மீது போலீசார் நடவடிக்கையும் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் பேசியது அனைத்தும் திருமூலர் சொன்ன வசனங்களே தவிர தன்னுடைய சொந்த கருத்துக்கள் கிடையாது என்று இதிலிருந்து தப்பிக்க பார்த்து வருகிறார் மகாவிஷ்ணு.

சர்ச்சையில் வாய்விட்ட செல்வராகவன்

இந்த நிலையில் பிரபல இயக்குனரும் நடிகர் தனுஷின் அண்ணனுமான செல்வராகவன் இது குறித்து பதில் அளித்திருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது ஆன்மீகம் என்பதை யாரோ ஒரு நபரிடம் சென்று தேடாதீர்கள் யாராவது ஒருவர் தியானத்திற்கு அழைத்தால் உடனே பெட் சீட்டை எடுத்துக் கொண்டு அங்கு கிளம்பி விடுகிறீர்கள்.

தியானம் செய்வதற்காக அவ்வளவு காஞ்சி போய் கிடக்கிறீர்களா?  முதலில் ஒரு குரு என்பவர் உங்களை சந்திக்க வேண்டும் என்று நினைத்தால் அதற்காக ஒரு மீட்டிங் போட்டு பணம் வசூலித்து அப்படியெல்லாம் உங்களை சந்திக்க மாட்டார். அது தாமாகவே அந்த சந்திப்பு நடக்கும், அதையும் தாண்டி ஒரு குரு முதலில் தன்னை மக்கள் மத்தியில் வெளிப்படுத்திக் கொள்ளவே மாட்டார்.

நீங்கள் அவரை பார்க்கவே முடியாது என்கிற நிலை தான் இருக்கும். தியானம் என்றால் என்னவென்று புத்தர் சொல்லும் வழியை கேளுங்கள் நமது சுவாசத்தை கவனிப்பதுதான் தியானம் என்கிறார் புத்தர். இதை செய்வதற்கு ஒரு சாமியாரிடம் செல்ல வேண்டிய தேவை கிடையாது என்று பேசியிருக்கிறார் செல்வராகவன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version