நம்ப வச்சுபழி வாங்கிட்டான்.. தனுஷ் குறித்து செல்வராகவன் ஓப்பன் டாக்..!

தமிழ் திரை உலகில் முன்னணி இயக்குனர்களின் ஒருவராக திகழும் இயக்குனர் செல்வராகவன் பற்றி அதிகம் கூற வேண்டிய அவசியம் இல்லை. இவரது தந்தை கஸ்தூரிராஜாவும் ஒரு இயக்குனர் என்பதால் திரை உலகப் பிரவேசம் செல்வராகவனுக்கு எளிதாக இருந்தது.

இவர் தனது வேறுபட்ட கதை களத்தால் ரசிகர்களை எளிதில் கவர்ந்து விடக்கூடிய தன்மை கொண்டவர் என்பதால் இவர் இயக்கும் படங்களில் கதை களம் மட்டுமல்ல, நடிப்பின் கோணமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கக் கூடிய வகையில் இருக்கும்.

நம்ப வச்சு பழி வாங்கியவன்..

தற்போது இயக்குனர் செல்வராகவன் திரைப்படங்களை இயக்குவதோடு மட்டுமல்லாமல் சில படங்களில் தனது நடிப்புத் திறனையும் வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் நிரந்தர இடத்தை பிடித்து விட்டார்.

மேலும் தற்போது இயக்குனர் மற்றும் நடிகரான செல்வராகவன் நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ராயன் படத்தில் தனுஷ் கேமியோ ரோலில் நடிக்க அவருடன் எஸ்.ஜே சூர்யா மற்றும் செல்வராகவன் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்று இயக்குனர் செல்வராகவன், தனுஷ் தன்னை வைத்து செய்து பழி வாங்கி விட்டதாக கூறி இருப்பது பெருத்த அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தனுஷ் குறித்து செல்வராகவன்..

நடிகர் தனுஷை தன் படத்தில் அறிமுகம் செய்து வைத்துள்ள செல்வராகவன் இந்த படத்தின் மூலம் தனுஷ் இயக்கத்தில் இணைந்து இருப்பதால் ரசிகர்களின் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை இந்த திரைப்படம் ஏற்படுத்தி உள்ளது.

அண்மையில் இந்த படத்தின் காட்சிகள் டப் செய்யப்பட்ட போது செல்வராகவன் இதை பார்த்து அது தனக்கு பிடித்திருந்ததாகவும், தான் இயக்கியிருந்தால் கூட இந்த கதை எவ்வளவு சிறப்பாக வந்திருக்குமா? என்று தெரியவில்லை எனக் கூறியதோடு மட்டுமல்லாமல் தனது தம்பி தனுஷை வெகுவாக பாராட்டி இருக்கிறார்.

இயக்குனராக இருந்த சமயத்தில் தனுஷின் ஆரம்பகால படங்களை இயக்கி திரைத்துறையில் தனுஷ்-க்கு என்று ஒரு தனி இடத்தை பெற்றுத் தர செல்வ ராகவன் மிகப்பெரிய பணி ஆற்றி இருக்கிறார்.

செல்வராகவனின் ஓபன் டாக்..

அத்தோடு 2022-ஆம் ஆண்டில் தனுஷ் நடிப்பில் நானே வருவேன் என்ற திரைப்படத்தை செல்வராகவன் இயக்கி இருக்க இந்தப் படத்தில் தனுஷ் இருவேறு கெட்டப்புகளில் நடித்து அசத்தியிருந்தார். ஆனாலும் இந்த படம் கலவை ரீதியான விமர்சனத்தை பெற்றுள்ளது.

இதனை அடுத்து தற்போது இவர்கள் இருவரும் ராயல் படத்தில் நடித்திருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில் செல்வராகவனின் கேரக்டர் போஸ்டரை தனுஷ் வெளியிட இன்னும் அந்த எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

மேலும் இப்படமானது வரும் ஜூன் மாதத்தில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளி வந்து ரசிகர்களை ஈர்த்துள்ளது. அந்த வகையில் இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து செல்வராகவன் தன்னுடைய அப்பாவுடன் இணைந்த பேட்டியில் பேசிய விஷயம் வைரல் ஆகிவிட்டது.

அந்த பேட்டியில் செல்வராகவன் தனுஷ் இந்தப் படத்தில் தன்னை வைத்து பழி வாங்கி விட்டதாக கூறிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இதற்குக் காரணம் தனுஷ் செல்வராகவன் இயக்கத்தில் சரியாக நடிக்காத போது செட்டில் அதிகமாக அனைவரது முன்னிலையிலும் செல்வராகவன் தனுஷை திட்டுவார்.

அந்த சூழ்நிலையில் தனுஷ் அவருடைய அம்மா மடியில் படுத்து வருத்தமாக பேசிய நாட்களை நினைவு கூர்ந்த கஸ்தூரிராஜா இன்று தனுஷ் இயக்கும் படத்தில் செல்வராகவன் நடித்ததை நினைத்து பெருமைப்படுவதாகவும், இது நான் எதிர்பாராத ஒன்று என்றும் கூறியிருக்கிறார்.

இந்த விஷயம் தற்போது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி இருப்பதோடு மட்டுமல்லாமல் தனுஷின் அபார வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்த செல்வராகவனையே வைத்து தனுஷ் இயக்கி இருக்கிறார் என்றால் அது பாராட்டு உரியது என்று பலரும் பல்வேறு வகையான கலவை ரீதியான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version