கெட்ட வார்த்தையில் திட்டுனாரு.. மனசே இல்ல.. செல்வராகவன் குறித்து முன்னணி நடிகர் பேச்சு..!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் செல்வராகவன். இவர் இயக்கியது ஒரு சில திரைப்படங்கள் என்றாலும் கூட அது அத்தனையும் முத்தான வெற்றியை குவித்து அவருக்கு பெயரும் புகழும் கொடுத்தது.

இவர் பிரபல இயக்குனர் செல்வராகவன் என்று பலர் கூறுவதை விட தனுஷின் அண்ணன் என அடையாளப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

இயக்குனர் செல்வராகவன்:

முதல் முதலில் காதல் கொண்டேன் திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.

அந்த திரைப்படத்தில் தனது தம்பி தனுஷ் மற்றும் சோனியா அகர்வாலை அறிமுகப்படுத்தியிருந்தார். முதல் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்தது.

அதைத் அடுத்து தொடர்ந்து காதல் கொண்டேன் 7g ரெயின்போ காலனி , புதுப்பேட்டை, யாரடி நீ மோகினி , ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன , இரண்டாம் உலகம், மாலை நேரத்து மயக்கம், என் ஜி கே, உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களை அவர் இயக்கி இருக்கிறார்.

இந்த படங்கள் அவருக்கு தொடர்ச்சியாக வெற்றி படங்களாக அமைந்ததால் செல்வராகவன் முத்தான இயக்குனர்களுள் ஒருவராக தமிழ் சினிமாவில் இடத்தைப் பிடித்தார்.

முதல் படத்தில் ஹீரோயின் ஆக அறிமுகம் செய்து வைத்த சோனியா அகர்வால் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

காதல் திருமணம் , விவாகரத்து:

2006 ஆம் ஆண்டு இவர்களது திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணத்திற்கு பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2010 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர்.

அதன் பின் 2011 ஆம் ஆண்டில் கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லீலாவதி, ஹோம்கர், ரிஷிகேஷ் என்ற மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள்.

தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டும் திரைப்படங்களை இயக்கிக் கொண்டு வருகிறார் செல்வராகவன்.

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து படம் எடுக்கும் இயக்குனர் என தமிழ் சினிமாவில் புகழ்பெற்றிருப்பது மட்டும் அல்லாமல் மிகச்சிறந்த இயக்குனராக பார்க்கப்படுகிறார் .

மிக திறமை வாய்ந்த இயக்குனராக பேசப்படும் இவர் பார்ப்பதற்கு மிகவும் அமைதியாக இருப்பதால் நல்ல மனிதர் என்றும் மக்களிடையே புகழ் பெற்றிருந்தார்.

பாவா லக்ஷ்மணன் பகீர் பேட்டி:

இப்படியான நேரத்தில் செல்வராகவனின் உண்மை முகம் குறித்து பிரபல நடிகர் ஒருவர் வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்.

ஆம் செல்வராகவன் ஷூட்டிங் ஸ்பாட்டில் கடுமையாக தன்னைத் திட்டியதாகவும் தனக்கு நடிப்பே வரவில்லை அதனால் திரைப்படங்களில் நடிப்பதே வேஸ்ட் என்று கெட்ட வார்த்தைகளால் பலர் முன்னிலையில் என்னை திட்டி அசிங்கப்படுத்தினார்.

அதனால் நான் அந்த படத்தை விட்டு வெளியேறி விட்டேன் என பிரபல காமெடி நடிகரான பாவா லட்சுமணன் கூறியிருக்கிறார்.

இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்வராகவனா? இப்படி என வியக்கும் அளவுக்கு அவர் கூறியிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் செல்வராகவனை சூட்டிங் ஸ்பாட்டில் பார்த்தாலே அவரது துணை இயக்குனர்கள் டெக்னீசியன்ஸ் எல்லோரும் தெறித்து ஓடுவார்கள் .

அந்த அளவிற்கு மிகவும் ஸ்ட்ரிக்ட்டான கண்டிஷன் போட்டு வேலை வாங்கக் கூடியவர். திட்டுவதை காது கொடுத்து கேட்கவே முடியாது.

அந்த அளவுக்கு கொந்தளித்து பேசுவார். அதனால் அவரைப் பார்த்தாலே எனக்கு பயம் என பாவாலட்சுமணன் கூறியிருக்கிறார்.

மிகவும் அமைதியாக பவ்யமாக நடந்து கொள்ளும். அவனுக்குள் இப்படி ஒரு குணமா என பாவா லக்ஷ்மணன் பேட்டியை பார்த்து பலர் வியந்து போய்விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version