தமிழக அரசியலில் திராவிட முன்னேற்ற கழகத்தில் இருக்கிற முக்கிய தலைவர்களில் கனிமொழியும் ஒருவர். கருணாநிதி மகள் என்பது அனைவரும் அறிந்ததுதான். இப்போது தூத்துக்குடி எம்பி ஆக இருக்கிறார்.முன்னாள் முதல்வர், திமுக தலைவர் கருணாநிதிக்கு 3 மனைவிகள். இதில் ராஜாத்தி மகள்தான் கனிமொழி.
மூத்த மகள் மு க செல்வி
அதே போல் கருணாநிதியின் 2வது மனைவி தயாளு அம்மாள். அவரது மூத்த மகன் மு.க அழகிரி. 2வது மகன் முதல்வர் மு. க ஸ்டாலின். 3வது மகள்தான் மு.க செல்வி. இப்போது பெங்களூருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
கருணாநிதி தனது அக்கா சண்முக சுந்தரத்தமாளின் மகன் செல்வத்தை தான், செல்விக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார். செல்வத்தின் அண்ணன்தான் முரசொலி மாறன். முரசொலி மாறனின் மகன்கள்தான் தயாநிதி மாறன். சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன்.
செல்வி பிறந்து விட்டாள்
செல்வி பிறந்தவுடன், தன் அக்காவுக்கு கருணாநிதி எழுதிய கடிதத்தில் அக்கா, செல்வத்துக்கு செல்வி பிறந்துவிட்டாள் என்று ஆரம்பித்திலேயே குறிப்பிட்டுள்ளார். அதாவது செல்வி பிறந்தவுடனே, அவர் தனது அக்கா மகன் செல்வத்துக்குதான் திருமணம் செய்து வைப்பது என கருணாநிதி அப்போதே முடிவு செய்திருக்கிறார்.
இரண்டாவது தாய்
தனது அண்ணன்கள் அழகிரி, ஸ்டாலின், தம்பி தமிழரசு ஆகியோருடன் கோபாலபுரம் இல்லத்தில் வளர்ந்தவர் செல்வி. எப்போதுமே தனது மூத்த மகள் செல்வி மீது கருணாநிதிக்கு அலாதியான பிரியமும் பாசமும் உண்டு. அதனால் செல்வி எனது இரண்டாவது தாய் என பலமுறை கருணாநிதி வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
செல்வியின் கணவர் செல்வம், திமுகவின் அதிகாரபூர்வ நாளிதழான முரசொலி பத்திரிகையின் மூத்த நிர்வாகியாக கவனித்துக்கொண்டார். அதன்பிறகு கன்னடத்தில் உதயா டிவியை துவங்கிய செல்வம், செல்வி தம்பதியர், பெங்களூருவில் குடியேறினர்.
பெங்களூருவில் ஓய்வு
அதன்பிறகு கருணாநிதி தனது ஓய்வு நாட்களை கழிக்க, பெங்களூருக்கு சென்று, தனது மகள் செல்வி வீட்டில் தங்கி ஓய்வெடுத்தார். அதே போல் திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுதிய காலகட்டத்திலும் கருணாநிதி பெங்களூரு சென்று, தனது மகள் செல்வி வீட்டில் தங்குவதுதான் வழக்கமாக இருந்தது. ஒருகட்டத்தில் கலைஞர் டிவியை துவங்கி அதன் பொறுப்பாளராக செல்வம், செல்வி இருந்து வருகின்றனர்.
செல்வி கடவுள் நம்பிக்கை உள்ளவர். எப்போதும் நெற்றியில் நிறைய விபூதி பூசியிருப்பார். அவரை பார்த்து, கேபி சுந்தராம்பாள் மாதிரி இருக்கியேம்மா என்று கருணாநிதி கேட்பதுண்டு. ஆனால் அவரது தெய்வ நம்பிக்கையை ஒருபோதும் விமர்சித்து கருணாநிதி அவரிடம் பேசியது இல்லை.
குடும்பத்தில் முக்கிய முடிவுகள்
அரசியலில் ஸ்டாலின், அழகிரி முக்கிய ஆளுமைகளாக இருந்தாலும் குடும்பம் சார்ந்த விஷயங்களை, முக்கிய முடிவுகளை கருணாநிதி, தனது மகள் செல்வியுடன் ஆலோசித்துதான் முடிவு செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
டாக்டர் எழிலரசி
அழகிரி – ஸ்டாலின் இடையே அரசியல்ரீதியான கருத்து மோதல் ஏற்படும் போதெல்லாம் அதை தீர்த்து வைப்பவர் சகோதரி செல்விதான். செல்விக்கு, எழிலரசி என்ற மகள் இருக்கிறார். மயக்கவியல் டாக்டராக பணிசெய்கிறார்.
இதையும் படியுங்கள்: “செம்ம சீனு இருக்குது இன்னைக்கு..” முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் வாணி போஜன்..!
தேர்தல் காலகட்டத்தில், கருணாநிதி வேட்பாளராக போட்டியிடும் தொகுதியில் அப்பாவுக்காக களத்தில் இறங்கி ஒவ்வொரு முறையும் செல்விதான் பிரசாரத்தில் ஈடுபடுவார். வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பார். அதனால் தமிழகம் முழுவதும் பிரசாரத்துக்கு சென்று விடுவார் கருணாநிதி.
கட்சி தலைமைக்கு இடையூறு
கருணாநிதி மறைவுக்கு பிறகு அழகிரியால் கட்சி தலைமைக்கு குடைச்சல் இருக்கலாம் என்று பலரும் கருதிய நிலையில், அப்படி ஒரு இடையூறு ஏற்படாமல் தடுத்து, அழகிரியை அமைதிப்படுத்தியவரும் செல்விதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்: சக்களத்தியா வரியா.. கோபிகாவிடம் வேலை காட்டி நயன்தாரா.. ரகசியம் உடைத்த பிரபலம்..!
இப்படி கருணாநிதி மகள், ஸ்டாலின் சகோதரி செல்வி பல விதங்களில் பின்னணியில் பக்கபலமாக இருந்து, திமுக என்ற அரசியல் கட்சியின் வெற்றிக்கு, உதவி வருகிறார் என்பது பலரும் அறியாத உண்மைகளாக இருக்கின்றன.