“2 மினிட்ஸ் மேகி போல் நொடியில் தயாராகும் சேமியா அடை..!” – நீங்களும் செய்யலாம்..!

வீட்டில் மாவில்லாத சமயத்தில் விருந்தாளிகள் யாராவது வந்து விட்டால் என்ன செய்வது என்ற தயக்கம் உங்களுக்கு இருக்கும். இனிமேல் அந்த தயக்கம் உங்களுக்கு வேண்டாம். சேமியா இருந்தால் நீங்கள் படு விரைவாக சேமியா அடை செய்து அவர்களை அசத்தி விடலாம்.

#image_title

அப்படி சேமியா அடை செய்வதற்கு தேவையான பொருட்கள் என்ன, அதை எப்படி செய்ய வேண்டும் என்பதைப் பற்றி விரிவாக இந்த கட்டுரையில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

சேமியா அடை செய்ய தேவையான பொருட்கள்

1.சேமியா ஒரு கப் கெட்டி

2.தயிர் ஒரு கப்

3.அரிசி மாவு ஒரு கப்

4.பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது ஒன்று

5.மிளகாய் தூள் ஒரு டீஸ்பூன்

6.உப்பு தேவையான அளவு

7.கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி ஒரு கைப்பிடி அளவு

8.எண்ணெய் மூன்று டேபிள் ஸ்பூன்

#image_title

செய்முறை

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் சேமியாவை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு இந்த சேமியாவில் நீங்கள் தண்ணீர் சேர்க்காமல் தயிரை விட்டு 20 நிமிடங்கள் அப்படியே ஊற விட்டு விடுங்கள்.

பிறகு நீங்கள் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெயை விட்டு நன்கு வதக்க வேண்டும். இது வதங்கிய பிறகு இதில் மிளகாய் தூள், உப்பு, மல்லித்தழை, கருவேப்பிலை சேர்த்து கலந்து விடுங்கள்.

#image_title

இதனை அடுத்து எந்த கலவையை நீங்கள் ஊற வைத்திருக்கும் சேமியா பாத்திரத்தில் போட்டு நன்கு கலக்கி விட வேண்டும்.

மேலும் இது நன்கு கலங்கிய பிறகு தோசை கல்லை அடுப்பில் வைத்து சிறு, சிறு அடைகளாக ஊற்றி பிறகு எண்ணெயை ஊற்றி முன்னும், பின்னும் சிவக்கும்படி வேகவிட்டு எடுத்துக்கொள்ள வேண்டும்.

இப்போது சூப்பரான சுவையான சேமியா அடை ரெடி. சேமியா பிடிக்காத பிள்ளைகளும் இந்த அடையை விரும்பி சாப்பிடுவார்கள். நீங்களும் செய்து அசத்துங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …