“பட்டுனு செய்யக்கூடிய ஈஸியான ரெசிபி சேமியா பிரியாணி..!” – இப்படி செய்யலாம்..!

திண்டுக்கல் தலப்பாக்கட்டு பிரியாணியே ஓரம் கட்ட கூடிய வகையில் நீங்கள் செய்யக்கூடிய சேமியா பிரியாணி இருக்க வேண்டும் என்றால் இதனைப் படித்து நீங்கள் இதன்படி செய்தால் போதுமானது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வித்தியாசமான எந்த பிரியாணி விரும்பி சாப்பிடுவார்கள் அது மட்டுமல்லாமல் வீடு மணக்க கூடிய அளவு இந்த பிரியாணியின் வாசம் இருக்கும்.

சேமியா பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்

1.சேமியா அரை கிலோ

2.பச்சை மிளகாய் 3

3.பட்டை இரண்டு

4.ஏலக்காய் மூன்று

5.கிராம்பு இரண்டு

6.ஜாதிக்காய் ஒரு சிறிய துண்டு

7.இஞ்சி 25கிராம்

8.பூண்டு 25 கிராம்

9.கேரட்,பட்டாணி, பீன்ஸ் ஒரு கப்

10.சின்ன வெங்காயம் 25

11.எண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன்

12.மிளகாய் தூள் கால் டேபிள் ஸ்பூன்

13.தயிர் கால் கப்

14.உப்பு தேவையான அளவு

15.புதினா இலை கால் கப்

16.கொத்தமல்லி இலைகள் கால் கப்

17.எலுமிச்சை பழச்சாறு சிறிதளவு

18.நெய் 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

முதலில் பூண்டு, இஞ்சி, சின்ன வெங்காயம், மல்லி இலை இவற்றை சுத்தம் செய்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பிறகு நீங்கள் வைத்திருக்கும் கேரட், பீன்ஸ், பட்டாணி போன்றவற்றை நன்கு கழுவி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இதனை அடுத்து நீங்கள் உரித்து வைத்திருக்கும் சின்ன வெங்காயத்தை மிக்ஸியில் போட்டு ஒன்று இரண்டாக அரைத்துக் கொள்ளவும். பிறகு இதனோடு இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கிராம்பு பட்டை, ஏலக்காய் போன்றவற்றை போட்டு ஒரு தட்டு தட்டி எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும். தண்ணீர் கொதித்துக் கொண்டு இருக்கும் போதே நீங்கள் வாணலியில் சிறிதளவு நெய்யை ஊற்றி சேமியாவை மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

சேமியா பொன் நிறமாக மாறியவுடன் இதில் கொதிக்கும் நீரை சேர்க்க வேண்டும். அதனோடு சேமியாவுக்கு தேவையான உப்பையும் சேர்த்து விடுங்கள்.

இதனை அடித்து நீங்கள் ஊற்றிய நீரை 5 நிமிடங்களுக்குப் பிறகு வடித்து விடவும் அப்போதுதான் சேமியா குழையாமல் தனித்தனியாக இருக்கும். இப்போது இந்த சேமியாவை எடுத்து குளிர்ந்த நீரில் போட்டு நன்கு அலசி வடித்து விடுங்கள்.

இனி அடுப்பில் ஒரு மிகப்பெரிய பாத்திரத்தை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடான பிறகு நீங்கள் அரைத்து வைத்திருக்கக் கூடிய சின்ன வெங்காய விழுது மற்றும் மசாலா விழுதுகளை சேர்க்க வேண்டும்.

அடுப்பை சிம்மில் வைத்து விட்டு வெங்காயம் அடிபிடிக்காத அளவுக்கு  கிளறுங்கள். பிறகு தயிர், புதினா, கொத்தமல்லி இலைகளை சேர்த்து கிளற வேண்டும். இப்போது நீங்கள் ஊற்றிய எண்ணெய் பிரிந்து வரக்கூடிய சமயத்தில் காய்கறிகளை போட்டு அதற்கு தேவையான அளவு உப்பையும் போட்டு கால் கப் நீரை ஊற்றி மூடிவிடுங்கள்.

 கால் மணி நேரம் கழித்து காய் வெந்த பிறகு நீங்கள் எலுமிச்சை சாறினை சேர்த்து விட்டு, வேக வைத்திருக்கும் சேமியாவையும் போட்டு கிளறி விடுங்கள். இப்போது நீங்கள் விரும்பி சுவைக்கக்கூடிய சேமியா பிரியாணி ரெடி.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …