அரசியல் புள்ளிக்கு கல்தா கொடுத்த நடிகை.. பிரபல நடிகருடன் அவசர அவசரமாக இரண்டாம் திருமணம்..!

திரை உலகில் தற்போது பெரும் அளவு பேசும் பொருளாக மாறி இருக்கும் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து விளக்கமாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அது மட்டும் அல்லாமல் ஒரு நடிகை தொடர்ந்து ஒரு நடிகரோடு இணைந்து நடிக்கும் போது கிசுகிசுக்கள் வருவதும் இயல்பான ஒன்றாகவே மாறிவிட்டது.

அந்த வகையில் இந்த பதிவில் அரசியல் பிரமுகருக்கு டேக்கா கொடுத்த சினிமா நடிகை தற்போது பிரபல நடிகரை இரண்டாவது திருமணம் செய்ய கூடிய திட்டம் பற்றிய விஷயங்களை விரிவாக இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

அரசியல் புள்ளிக்கு கல்தா கொடுத்த நடிகை..

சினிமாவும் அரசியலும் ஒரே மாதிரியாகத் தான் உள்ள துறைகள் என்று சொல்லலாம். ஒரு உரையில் இரண்டு கத்திகள் எப்படி இருக்க முடியாதோ அது போல சினிமாவில் நடித்து வரும் சில நடிகைகள் அரசியல்வாதிகளை காதலித்து பின் கழட்டி விடுவது ஒன்றும் புதிதல்ல.

அந்த வகையில் திரை உலகில் முக்கிய முன்னணி நடிகையாக திகழும் இவர் அரசியல்வாதியோடு நெருங்கி பழகி வந்த சூழ்நிலையில் தற்போது அந்த அரசியல்வாதியை கழட்டி விட்டு விட்டு பிரபல திரைப்பட நடிகர் ஒருவரை இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.

மேலும் இந்த நடிகை கிராமத்து கதையம்சம் கொண்ட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி முதல் படமே நல்ல வரவேற்பை ரசிகர்களின் மத்தியில் பெற்றதை அடுத்து குறுகிய காலத்திலேயே தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக மாறினார்.

தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழி படங்களில் நடித்து ரசிகர்களை அதிகளவு வைத்திருக்கக் கூடிய இந்த முன்னணி நடிகைக்கு அரசியல் பிரமுகர் ஒருவரிடம் இருந்து அழைப்பு வர அந்த அழைப்பை ஏற்று அமைச்சருடன் இரண்டு நாட்கள் ஹோட்டலில் தங்கி இருக்கிறார்.

இதனை அடுத்து இவர்களது உறவு படு நெருக்கமாக மாறியதை அடுத்து இருவரும் ஒரே வீட்டில் இருந்ததாக பத்திரிகைகளில் பரபரப்பாக செய்திகள் வெளி வந்த போதும் அதைப்பற்றி வாய் திறக்காமல் அமைதி காத்தார்கள்.

இந்நிலையில் அந்த பிரபல நடிகைக்கு தற்போது பிரம்மாண்ட இயக்குனரின் படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. அந்தப் படத்தில் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று சொன்னதற்கும் ஓகே சொன்ன நடிகை ஆபாச காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று மட்டும் சொல்லி இருக்கிறார்.

பிரபல நடிகருடன் அவசரமாக இரண்டாம் திருமணம்..

எனினும் அது குறித்து அப்படியெல்லாம் முடியாது என்று கூறிய இயக்குநரை அரசியல் பிரமுகரை கொண்டு மிரட்டியதை அடுத்து பயந்து போன இயக்குனர் அந்த காட்சியை டூப் வைத்து எடுத்து முடித்து இருக்கின்ற விஷயம் சினிமா வட்டாரத்தில் புகைந்தது.

இதைத் தொடர்ந்து இந்த நடிகையை வைத்து படம் எடுத்தால் விவகாரங்கள் வேண்டாமல் வந்து சேரும் என்று நினைத்ததை அடுத்து பட வாய்ப்புகள் குறைந்ததால் அரசியல் பிரமுகருக்கு டாட்டா காட்டிவிட்டு தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார்.

எனினும் விதி யாரை விட்டது அமெரிக்காவில் தன் கணவரோடு ஏற்பட்ட பிரச்சனையால் சென்னை வந்து சேர்ந்த அந்த நடிகை மீண்டும் அந்த அரசியல் பிரமுகரின் உதவியை நாடி கணவரை விவாகரத்து செய்து விட்டு அவரோடு அரவணைப்பில் இருந்திருக்கிறார்.

இந்நிலையில் அரசியல் பிரமுகரின் மனைவியும் இறந்து போக அந்த நடிகைக்கு பங்களா வாங்கி கொடுத்து பக்க பலமாக இருந்த அந்த அரசியல் பிரமுகரை தூக்கி எறிந்து விட்டு பிரபல நடிகை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக திரையுலக வட்டாரங்களில் கிசுகிசுக்கள் வெளி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version