சூரியா குறித்து காட்டு தீயாய் பரவும் பரபரப்பு தகவல்.. கேட்டாதும் 1 நிமிஷம் ஆடிப்போன ரசிகர்கள்..!

தென்னிந்திய சின்னமாவின் முன்னாடி நட்சத்திர நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் சூர்யா.

இவரது தந்தை சிவக்குமார் என்ற மிகப் பெரிய அடையாளத்தோடு சினிமாவில் ஹீரோவாக நுழைந்தார் சூர்யா.

தொடர்ந்து தனது முயற்சியாலும் தனது திறமையாலும் தனது வாய்ப்புகளை தக்க வைத்துக்கொண்டு ஒவ்வொரு படங்களிலும் தனது திறமையை மெருகேற்றி காட்டி வந்தார்.

நடிகர் சூர்யா:

இன்று நட்சத்திர ஹீரோவாக ஜொலித்துக் கொண்டிருக்கும் சூர்யா இவர் சரவணன் என்று இயற்பெயருடன் பிறந்து வளர்ந்து லயோலா கல்லூரியில் படிப்பை முடித்தார்.

அதன் பின்னர் தனது விருப்பத்தின்படி சினிமாவில் நடிப்பு பயணத்தை ஆரம்பித்தார். ஆரம்பத்தில் சூர்யாவுக்கு எதுவுமே தெரியாது.

சூர்யா நடிப்பு துறையில் ஒன்றுமே சாதிக்க முடியாது என அவரது தந்தை முட்டுக்கட்டை போட அது எல்லாம் தாண்டி தகர்த்து எறிந்து தனது திறமையை வெளிப்படுத்தி இன்று தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் சூர்யா .

இவர் முதன் முதலில் நடித்து வெளிவந்த திரைப்படம் நேருக்கு நேர். இந்த திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது .

சினிமாவில் அறிமுகம்:

1997 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தை வசந்த் இயக்கினார். தொடர்ந்து பெரியண்ணா, பூவெல்லாம் பூவெல்லாம் கேட்டுப்பார், பிதாமகன், காக்க காக்க உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

மேலும், பேரழகன், கஜினி, ஆறு, சில்லுனு ஒரு காதல், வாரணம் ஆயிரம், ஆதவன் ,சிங்கம், மாற்றான், அஞ்சான், காப்பான், சூரரை போற்று, ஜெய் பீம் இப்படி பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து இன்று முன்னணி நடிகராக தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் .

இவர் முதன் முதலில் பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகை ஜோதிகாவை காதலித்து பின்னர் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நடிகர் சூர்யாவுக்கு தேவ் தியா என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் .

சிறந்த நடிகருக்காக பல்வேறு திரைப்பட விருதுகளை பெற்றிருக்கும் சூர்யா இதனிடையே தனது மனைவியின் ஆசைக்காக தற்போது மும்பையில் குடியேறி அங்கே செட்டில் ஆகிவிட்டார்.

மும்பையில் செட்டில்:

இந்தி திரைப்படங்களில் ஜோதிகா தொடர்ச்சியாக நடித்து வருகிறார். மும்பையில் சூர்யா ஹிந்தியில் வெளியாகும் திரைப்படங்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இதனிடையே சில பல புதிய தொழிலையும் கையில் எடுத்து அதன் மூலம் வருமானம் சம்பாதித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால்….

சூர்யா குறித்து காட்டுத்தீயாக ஒரு பரபரப்பான தகவல் வெளியாகி பேசப்பட்டிருக்கிறது. அதாவது சூர்யா.

மும்பை சென்னை மற்றும் படப்பிடிப்புகளுக்கு சென்று வர தனக்காக சொந்தமாக பிரைவேட் ஜெட் ஒன்றை வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

Dassault Falcon 2000 என்கிற இந்த பிரைவேட் ஜெட்டின் விலை கிட்டத்தட்ட ரூபாய் 120 கோடி என தகவல் பரவி தீயாய் பரவி வருகிறது.

இந்த செய்தி சமூக வலைத்தளங்கள் முழுக்க வெளியாக நம்ம ஜெயிச்சிட்டோம் மாறா என்று சூர்யா ரசிகர்கள் அவரை தூக்கி வைத்து கொண்டாட ஆரம்பித்தார்கள்.

இதற்கு பல விமர்சனங்கள் வந்த போதிலும் அவரது ரசிகர்கள் உழைத்த சம்பாதித்து இந்த அளவுக்கு ஆளாகியிருக்கும் அவர் தனக்கு சொந்தமாக ஜெட் விமானம் வாங்குவதில் என்ன தவறு?என அவர் ஆதரவாக பேசத் தொடங்கினார்கள்.

ரூ. 120 கோடி பிரைவேட் ஜெட் வாங்கியது உண்மையா?

இப்படியாக சூர்யா ஜெட்பமானம் வாங்கினாரா இல்லையா என்பது கூட தெளிவாக தெரியாத நிலையில் விவாத பேச்சுக்கள் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வந்தது .

அடுத்து தற்போது சூர்யா தரப்பில் இருந்து இதற்கான தெளிவான விளக்கம் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

அதாவது இது வெறும் வதந்தி செய்தி இது உண்மை இல்லை என சூர்யா தரப்பு உறுதியாக கூறி இருக்கிறது.

ஏற்கனவே நடிகை நயன்தாரா,பிரியங்கா சோப்ரா, நடிகை சன்னி லியோன் ,அமிதாபச்சன், அக்ஷய் குமார், நாகார்ஜுனா, ஷாருக்கான், ரித்திக் ரோஷன், சல்மான்கான், மகேஷ்பாபு உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் பிரைவேட் ஜெட் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சூர்யா கங்குவா திரைப்படத்தில் மும்முரமாக நடித்த வருகிறார். அத்துடன் சூர்யா 44 திரைப்படத்திலும் கமிட்டாகி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version