செந்தில் மற்றும் கவுண்டமணியின் வாழைப்பழ காமெடி உங்களுக்கு நினைவில் இருக்கலாம். அது போலத் தான் செந்திலின் தங்கையாக நடித்த அழகு மணியை வைத்து பண்ணிய காமெடி என்று வரை பசுமையாக அனைவரது மனதிலும் இருக்கும்.
தமிழ் சினிமாவில் 80 முதல் 90 வரை உள்ள காலகட்டத்தில் கவுண்டமணி செந்திலை அடித்துக் கொள்ள யாருமே இல்லை என்று கூறக்கூடிய வகையில் காமெடியில் கலக்கி வந்தார்கள். இவ்வளவு ஏன் இவரது பெயர்களை உச்சரித்தாலே சிலருக்கு சிரிப்பு வந்துவிடும். அந்த அளவுக்கு இவர்களின் காம்போ மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது.
அதே கால கட்டத்தில் பல காமெடிகள் வந்திருந்தாலும், இவர்களை தவிர்க்க முடியாது. அந்த அளவுக்கு எல்லா படத்திலும் இவர்கள் நடித்து புகழின் உச்சத்தில் இருந்தார்கள்.
குறிப்பாக சத்யராஜ் நடிக்கும் படங்களில் முதலில் கவுண்டமணியின் கால்ஷீட் பெற்றுக் கொண்டு தான் கமிட் ஆவார் என்று சொல்லக்கூடிய அளவு மக்கள் மத்தியில் ஹிட்டான காமெடிகள்.
நடிகர் சத்யராஜ் கவுண்டமணி இருவரும் சேர்ந்து பல படங்கள் நடித்து இருந்தாலும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய படம் மகுடம். இந்த படத்தில் இவர்கள் செய்த காமெடி இன்று வரை மக்கள் மனதில் நிலைத்து இருக்கிறது.
மேலும் இந்த படத்தில் கவுண்டமணியிடம் ஒரு அழகான பெண்ணின் புகைப்படத்தை கொடுத்து இது தான் தனது தங்கை என்று செந்தில் கூற புகைப்படத்தை பார்த்து அழகில் மயங்கி திருமணத்திற்கு ஓகே சொல்லிவிடும் கவுண்டமணி, காதலில் திளைத்த வண்ணம் திருமண மேடையில் பெண்ணுக்காக காத்திருப்பார்.
அந்த நிலையில் மாப்பிள்ளை உங்கள் அழகுமணி வந்து இருக்கு பாருங்க.. என்று செந்தில் சொல்லும் போது புகைப்படத்தை பார்த்துக் கொண்டே அருகில் இருக்கும் அந்த பெண்ணை பார்த்து ஐயோ.. என்று அலறும் காட்சி இன்றும் ஃபேமஸான ஒன்று.
அந்த காமெடி சீனில் செந்திலின் தங்கையாக அறிமுகமாகிய அழகுமணி பெண் உங்கள் நினைவில் இருக்கிறதா? மாமா.. என்ற ஒரே டயலாக்கில் பிரபலமான அவர் தற்போது 49 வயதாகும் நபராக விளங்குகிறார். இவரின் இயற்பெயரும் அழகுமணி தான்.
ஆசிரியராக பணிபுரிந்து வந்த அழகுமணி தற்போது வேலைக்கு பை.. பை.. சொல்லிவிட்டு குடும்பத்தை கவனித்து வருகிறார். அந்த வகையில் அழகுமணியின் ரீசன்ட் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகிவிட்டது. அழகுமணி உண்மையாகவே அழகாக இருக்கிறார் என்று பலரும் வியந்து பாராட்டு இருக்கிறார்கள்.