நடிகர் செந்தில், தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு காமெடி நடிகராக இருந்து வருகிறார். கவுண்டமணி – செந்தில் காமெடி என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.
கவுண்டமணி செந்திலை திட்டுவதும், செந்தில் ஏதேனும் ஏடாகூடமாக செய்வதும் படம் பார்க்கும் ரசிகர்களை குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும்.
செந்தில்
செந்தில் சிறந்த காமெடி நடிகர் மட்டுமல்ல, சில படங்களில் சில காட்சிகளில் குணச்சித்திர வேடத்திலும் செந்தில் தனது அசத்தலான நடிப்பை வழங்கியிருப்பார்
நடிகர் செந்திலின் சொந்த ஊர், ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்துள்ள இளஞ்செம்பூர் என்னும் ஒரு கிராமம் ஆகும். இதில் பெற்றோருக்கு 6 பிள்ளைகளில் 3வதாக பிறந்தவர்தான் செந்தில். ஆனால் இவரது பெயர் செந்தில் அல்ல.
கடைக்காரர் குடும்பம்
செந்திலின் அப்பா, தாத்தா என பரம்பரை பரம்பரையாக மளிகை கடை நடத்தி வந்ததால், அவரது பரம்பரைக்கே கடைக்காரர் குடும்பம் என்பதுதான் பெயர்.
பள்ளிக்கூடம் சென்ற செந்திலுக்கு படிப்பில் ஆர்வம் இல்லை. 5ம் வகுப்பு வரை மட்டுமே படித்த செந்தில், வீட்டில் படிக்க சொல்லி அப்பா கண்டித்ததால் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு சென்னைக்கு ஓடி வந்து விட்டார்.
இதையும் படியுங்கள்: பெண்டு நிமித்திய லேடி.. இதுக்கு மேல தாங்காது பாடி.. தெறித்து ஓடிய ப்ரைட் நடிகர்!
மதுபானக்கடை
எண்ணெய் ஆட்டும் ஆயில் கம்பெனி, தனியார் மதுபானக்கடை போன்றவற்றில் பணிசெய்த செந்திலுக்கு, சினிமா நடிகர்களின் அறிமுகம் கிடைத்துள்ளது. அப்போதுதான் நடிகர் பிரசாந்த் அப்பா தியாகராஜன் நடித்த மலையூர் மம்பட்டியான் என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து, சினிமா நடிகரானார்.
அதன்பிறகு பல படங்களில் நடித்து முக்கியமான நடிகராக செந்தில் மாறினார். அதன்பிறகு 14 ஆண்டுகள் கழித்து தன் சொந்த ஊருக்கு சென்ற நடிகர் செந்திலை அவரது பெற்றோர், உறவினர்கள் என அந்த ஊரே வரவேற்று மரியாதை செய்திருக்கிறது.
கலைச்செல்வி
அதன்பிறகு 1984ம் ஆண்டில் கலைச்செல்வி என்பவரை செந்தில் திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு மணிகண்ட பிரபு, ஹேமந்த் பிரபு என 2 மகன்கள் உள்ளனர். இதில் மணிகண்ட பிரபு டாக்டராகவும், ஹேமந்த் பிரபு உதவி இயக்குனராகவும் இருக்கிறார்.
இதையும் படியுங்கள்: ஜாக்கெட் எங்கம்மா.. வெறும் உள்ளாடையுடன் மொட்டை மாடியில் மைனா நந்தினி.. வைரல் பிக்ஸ்..
கவுண்டமணியுடன்
தொடர்ந்து சினிமாவில் நடித்த செந்தில் காமெடி நடிகராக முன்னிலை பெற்றார். தொடர்ந்து கவுண்டமணி, செந்தில் இருவரும் 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளனர். இவர்களது காமெடி என்றாலே, அந்த படங்களுக்கு தனி கிராக்கி வந்துவிடும்.
இந்நிலையில் ஒருமுறை கொடைக்கானலில் ஒரு படத்தின் ஷூட்டிங் நடந்த போது செந்தில் தவறி விழுந்ததால், முதுகு எலும்பில் அடிபட்டு 7 ஆண்டுகள் ஓய்வில் இருந்தார். அப்போது அவருக்கு பெஸ்ட் பிரண்ட் ஆக செந்திலை அவருடன் கவனித்துக்கொண்டது அவரது மனைவி கலைச் செல்விதான்.
எனது உலகம்
இப்போதும் எனது உலகம் என்றால் அது என் மனைவிதான். அவருடைய உலகமும் நான்தான் என்று கூறி வருகிறார் நடிகர் செந்தில்.
மேலும் முதுமை காரணமாக இப்போது நடிப்பை தவிர்த்து வரும் நடிகர் செந்தில், விவசாயத்தில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். தனது சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.
முனுசாமி
நடிகர் செந்தில் பற்றி பலரும் அறியாத உண்மைகள் இது. செந்திலுடைய உண்மையான பெயர் முனுசாமி என்பதும் குறிப்பிடத்தக்கது.